உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கு சர்க்கார் மாவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கு சர்க்கார் மாவட்டங்கள் (Northern Circars) பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முன்னாள் நிர்வாகப் பிரிவு ஆகும். வங்காள விரிகுடாவின் மேற்கே அமைந்திருந்த குறுகிய இந்நிலப்பகுதி வடக்கு நெட்டாங்கு 15° 40' முதல் 20° 17' வரையிலும் பரவி இருந்தது. தற்போதைய ஆந்திர ஒடிசா மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. மாகாணத்தின் துணைப்பிரிவு என்பதற்கான சர்க்கார் என்ற இந்தி சொல் பயன்படுத்தப்பட்டது. துணை மாகாணமாகக் கருதப்பட்ட இப்பகுதி ஓர் துணை ஆளுநரால் நிர்வகிக்கப்பட்டது. இந்த வடக்கு சர்க்காரில் ஐந்து மாவட்டங்கள், ஸ்ரீகாகுளம், ராஜமுந்திரி, ஏலூரு, கொண்டப்பள்ளி மற்றும் குண்டூர் இருந்தன. இந்த துணை மாகாணப் பகுதியின் மொத்த நிலப்பரப்பு 30,000 சதுர மைல்கள் (78,000 km2)ஆக இருந்தது.

வடக்கு சர்க்கார்கள்

இப்பகுதி கிருஷ்ணா, கிழக்கு கோதாவரி மாவட்டம், மேற்கு கோதாவரி மாவட்டம், விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், பிரகாசம் மற்றும் குண்டூர் மாவட்டங்களை உள்ளடக்கிய தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரை ஆந்திரப் பகுதிகளையும் ஒடிசாவின் கஜபதி, கஞ்சம் மாவட்டங்களையும் உள்ளடக்கி உள்ளது. 1471இல் இப்பகுதி மீது பாமினி சுல்தான்கள் படையெடுத்தனர்; 1541இல் அவர்கள் கொண்டபள்ளியை கைப்பற்றினர். ஒன்பது ஆண்டுகள் கழித்து குண்டூரையும் , மச்சிலிப்பட்டணத்தையும் கைப்பற்றினர். இருப்பினும் இப்பகுதியை இறுதியாக 1571இல் ஒடிசாவின் இந்து இளவரசரிடமிருந்து கோல்கொண்டாவின் இப்ராகிம் கைப்பறினார். 1687இல் கோல்கொண்டா சுல்தானகத்துடன் சர்க்கார்களும் அவுரங்கசீப்பின் பேரரசில் இணைக்கப்பட்டன.அவுரங்சீப்புக்கு பின் வடக்கு சரக்கார் ஐதராபாத் நிசாம் கைக்கு வந்தது கர்நாடக போரில் பிரஞ்சுகாரரின் உதவிக்காக கொடுப்கப்பட்டது பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தால் ஆங்கிலேயர் கைகளுக்கு வந்தது

மேற்சான்றுகள்

[தொகு]