உள்ளடக்கத்துக்குச் செல்

எவ்கேனி பிரிகோசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எவ்கேனி பிரிகோசின்
Yevgeny Prigozhin
2010ல் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோசின்
சுதேசியப் பெயர்
Евгений Викторович Пригожин
பட்டப்பெயர்(கள்)"பூட்டினின் சமையல்காரர்"
பிறப்பு1 சூன் 1961 (1961-06-01) (அகவை 63)
சென் பீட்டர்சுபெர்கு, உருசியா, சோவியத் ஒன்றியம்
இறப்பு23 ஆகத்து 2023(2023-08-23) (அகவை 62)[1]
குசென்கினோ, போலோகோவ்ஸ்கி மாவட்டம், ட்வெர் ஒப்லாஸ்ட், உருசியா
சார்புஉருசியா
கட்டளைவாக்னர் குழு
போர்கள்/யுத்தங்கள்
விருதுகள்
 • உருசியக் கூட்டமைப்பின் வீரர்
 • தனியெத்சுக் குடியரசின் வீரர்
 • லுகான்சுக் குடியரசின் வீரர்
துணை(கள்)லியூபோவ் வனந்தீனொவ்னா பிரிகோசினா
பிள்ளைகள்3
வணிகப் பணிகள்
எவ்கேனி பிரிகோசின்
அமைப்பு(கள்)
குற்றங்கள்
எவ்கேனி பிரிகோசின்
குற்றம்
 • 1979: திருட்டு
 • 1981: கொள்ளை, மோசடி, குற்றத்தில் இளைஞர்களை ஈடுபடுத்துதல்[2][3][4]
 • 2018: அமெரிக்காவை ஏமாற்ற சதி
 • 2023: உருசியாவில் ஆயுதமேந்திய கிளர்ச்சி (கைவிடப்பட்டது)

எவ்கேனி விக்தொரோவிச் பிரிகோசின் (Yevgeny Viktorovich Prigozhin; உருசியம்: Евге́ний Ви́кторович Приго́жин; எவ்கேனி வீக்தரவிச் ப்ரிகோசின்; 1 சூன் 1961 – 23 ஆகத்து 2023) என்பவர் உருசியாவில் இயங்கும் வாக்னர் கூலிப்படைத் தலைவர் ஆவார்.[5] இவர் 2023 சூனில் இராணுவப் புரட்சி ஒன்றை நிகழ்த்தும் வரை உருசிய அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டினின் நெருங்கிய நண்பராக இருந்தார்.[6] பிரிகோசின் கிரெம்ளினுக்கான சேவைகளை வழங்கும் உணவக நிறுவனங்களை சொந்தமாக வைத்திருக்கிறார். இதனால் இவர் "புட்டினின் சமையல்காரர்" என்று அழைக்கப்படுகிறார்.[7] ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியத்தில் இவர் ஒரு குற்றவாளியாக இருந்த பிரிகோசின்,[8] உருசிய அரசு ஆதரவு பெற்ற கூலிப்படை நிறுவனமான வாக்னர் குழு மற்றும் 2016 மற்றும் 2018 அமெரிக்கத் தேர்தல்களில் தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நிறுவனங்கள் உட்பட்ட செல்வாக்கு மிக்க நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டுப்படுத்துகிறார்.[9] பிரிகோசினின் நடவடிக்கைகள் "உருசியாவின் பாதுகாப்பு அமைச்சு, அதன் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றுடன் இறுக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக" பெலிங்காட், தி இன்சைடர் ஆகியவற்றின் 2022 புலனாய்வுத் தகவலக்ள் தெரிவிக்கின்றன.[10]

பல ஆண்டுகளாக வாக்னர் குழுவுடனான தனது தொடர்புகளை மறுத்து வந்திருந்த பிரிகோசின், 2022 செப்டம்பர் 26 அன்று, அவரே அதன் நிறுவனர் என்பதை உறுதிப்படுத்தினார்.[11][12][13] தொன்பாசில் நடந்த போரில் உருசியப் படைகளுக்கு ஆதரவாக மே 2014 இல் இத்துணை இராணுவக் குழுவை நிறுவியதாக அவர் கூறினார். இந்த ஒப்புதல் காணொளியில், பிரிகோசின் மாரீ எல் சிறையில் கைதிகளை ஆட்சேர்ப்பு செய்வதைக் காட்டினார், வாக்னர் குழுவில் ஆறு மாதங்கள் பணியாற்றினால் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று உறுதியளித்தார்.[14]

அமெரிக்கத் தேர்தல்களில் உருசியாவின் தலையீட்டில் தனது தனது தனிப்பட்ட பங்களிப்பை பிரிகோசின் நீண்டகாலமாக மறுத்து வந்தார். இருப்பினும், நவம்பர் 2022 இல், அவர் அத்தகைய நடவடிக்கைகளில் தனது பங்கை ஒப்புக்கொண்டதோடு, அவை தொடரும் என்றும் கூறினார்.[15] பிப்ரவரி 2023 இல், இணையவழிப் பரப்புரை நடவடிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்ட உருசிய நிறுவனமான "இணைய ஆய்வு நிறுவனத்தின்" நிறுவனரும் அதன் நீண்டகால மேலாளர் என்றும் அவர் கூறினார்.

பிரிகோசினும், அவரது நிறுவனங்களும் ஐக்கிய அமெரிக்காவில் பொருளாதாரத் தடைகளையும், குற்றவியல் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கின்றனர்,[9] அத்துடன் ஐக்கிய இராச்சியத்தில் தடைகளை எதிர்நோக்கும் ஒரு நபராகவே இருக்கிறார்.[16] பிரிகோசினைக் கைது செய்யத் தகவல் தருவோருக்கு அமெரிக்க புலனாய்வுப் பணியகம் $250,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்தது.[17][18] அக்டோபர் 2020 இல், லிபியாவில் வாக்னர் ஆயுதக் குழுவின் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பது தொடர்பாக பிரிகோசினுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஏப்ரல் 2022 இல், உக்ரைன் மீதான உருசியப் படையெடுப்பில் அவரது பங்கு காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் அவர் மீது புதிய தடைகள் விதிக்கப்பட்டன.[19]

2023 சூன் 23 அன்று, பிரிகோசின் அவரது வாக்னர் ஆயுதக் குழு மூலம் உருசிய இராணுவத் தலைமைக்கு எதிராக ஒரு கிளர்ச்சியைத் தொடங்கினார். ரசுத்தோவ் நகரைக் கைப்பற்றி, மாசுக்கோ நோக்கி அணிவகுத்துச் சென்று, உருசியாவிற்குள் தனது படைகளை நகர்த்துவதாக அறிவித்தார்.[20] அவர் மீது ஒரு குற்றவியல் வழக்கு எழுப்பப்பட்டது, பின்னர் அதே நாளில் கைவிடப்பட்டது; கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமீத்ரி பெசுக்கோவின் கூற்றுப்படி, பிரிகோசின் தனது கிளர்ச்சிக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதன் ஒரு பகுதியாக பெலருஸ் செல்வார் என அறிவிக்கப்பட்டது.[21]

வானூர்தி விபத்து[தொகு]

பிரிகோசின் இறந்த விபத்தில் சிக்கிய வானூர்தி

உருசியாவின் அரசுத் தகவலின்படி, பிரிகோசின் 2023 ஆகத்து 23 அன்று வானூர்தி விபத்தில் இறந்தார்.[22][23] வானூர்தி மாசுக்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்சுபெர்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 10 பேரும் உயிரிழந்தனர்.[24] உருசிய அரசுக்கு சொந்தமான ஊடக நிறுவனமான தாஸ், வானூர்தியின் பயணிகள் பட்டியலில் பிரிகோசின் இருந்ததாக அறிவித்தது.[25] இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்களின் மரபணுப் பகுப்பாய்வைத் தொடர்ந்து, ஆகத்து 27 அன்று உருசிய விசாரணைக் குழுவால் பயணிகளின் இறப்பு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது.[26]

வாக்னர்-தொடர்புடைய டெலிகிராம் ஒலிபரப்பு, திவேர் மாகாணத்தில் உருசிய வான் பாதுகாப்புப் படையினரால் ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியது.[27] வெளியிடப்பட்ட காட்சிகளில் காணக்கூடிய ஏவுகணைத் தடங்கள் இல்லாததால் இச்செய்தி எதிர்க்கப்பட்டது.[28] அமெரிக்க, பிற மேற்கத்திய அதிகாரிகளின் கூற்றுப்படி, "பூர்வாங்க உளவுத்துறை அறிக்கைகள், விமானத்தில் வெடித்ததால், விமானம் கீழே விழுந்து, அதில் இருந்த பயணிகள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு வழிவகுத்தது."[29]

மாஸ்கோவில் பிரிகோசின், திமீத்ரி ஊத்கின் ஆகியோருக்கு தற்காலிக நினைவிடம்

பிரிகோசின், ஊத்கின் ஆகியோருக்கான தற்காலிக நினைவுச்சின்னங்கள் மெழுகுவர்த்திகள், பூக்கள், வாக்னர் கொடிகளுடன் பல நகரங்களில் எழுப்பப்பட்டன.[30] வாக்னர் வீரர்கள் ஒரு நினைவுச் சின்னத்தின் முன் அழும் காணொளிகள் வெளியிடப்பட்டன.[31]

2023 ஆகத்து 29 அன்று, செயின்ட் பீட்டர்சுபர்க்கில் உள்ள பொரோகோவ்சுக்கயே கல்லறையில் அவரது தந்தைக்கு அருகில் பிரிகோசினின் உடல் ஒரு தனியார் விழாவில் அடக்கம் செய்யப்பட்டது.[32]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Putin says 'talented businessman' Yevgeny Prigozhin has died". The Guardian. 24 August 2023. https://www.theguardian.com/world/2023/aug/24/wagner-fighters-gather-at-makeshift-memorial-to-yevgeny-prigozhin. 
 2. Myre, Greg (30 January 2019). "'Putin's Chef' Has His Fingers In Many Pies, Critics Say". NPR. Archived from the original on 4 February 2021. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
 3. Maglov, Mikhail; Olevsky, Timur; Treshchanin, Dmitry (27 February 2019). "Investigation Charts Massive Haul For State Deals By Companies Linked To 'Putin's Chef'". Radio Free Europe/Radio Liberty. Archived from the original on 29 March 2021. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
 4. Eltagouri, Marwa (17 February 2018). "The rise of 'Putin's chef,' the Russian oligarch accused of manipulating the U.S. election". தி வாசிங்டன் போஸ்ட் இம் மூலத்தில் இருந்து 27 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210227125527/https://www.washingtonpost.com/news/worldviews/wp/2018/02/16/the-rise-of-putins-chef-yevgeniy-prigozhin-the-russian-accused-of-manipulating-the-u-s-election/. 
 5. "The oil field carnage that Moscow doesn't want to talk about". CNN. 18 February 2018. Archived from the original on 18 February 2018. பார்க்கப்பட்ட நாள் 24 February 2018.
 6. "Navalny asks FSB to investigate Putin's cook". Crime Russia இம் மூலத்தில் இருந்து 1 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190301052800/https://en.crimerussia.com/gromkie-dela/navalny-asks-fsb-to-investigate-putin-s-cook/. 
 7. "Thousands of Russian private contractors fighting in Syria". AP News இம் மூலத்தில் இருந்து 29 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211229212453/https://apnews.com/7f9e63cb14a54dfa9148b6430d89e873. 
 8. "Право на забвение Евгения Пригожина: Что хочет скрыть о себе ресторатор, обслуживавший президентов России — Meduza" (in ru-RU). Meduza இம் மூலத்தில் இருந்து 29 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211229212720/https://meduza.io/feature/2016/06/09/pravo-na-zabvenie-evgeniya-prigozhina. 
 9. 9.0 9.1 William Echols (4 October 2019). "New Sanctions Against 'Putin's Chef' Prompt Latest Russian Election Meddling Denial" இம் மூலத்தில் இருந்து 5 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191005011925/https://www.polygraph.info/a/sanctions-putins-chef-election-fact-check/30197184.html. 
 10. Bellingcat Investigation Team (14 August 2020). "Putin Chef's Kisses of Death: Russia's Shadow Army's State-Run Structure Exposed". Bellingcat. Archived from the original on 14 August 2020. பார்க்கப்பட்ட நாள் 23 August 2020.
 11. "Sanctioned Putin Ally Says He Created Russian Mercenary Group". Bloomberg. 26 September 2022 இம் மூலத்தில் இருந்து 27 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220927030600/http://www.bloomberg.com/news/articles/2022-09-26/sanctioned-putin-ally-says-he-created-russian-mercenary-group. 
 12. "Russian oligarch Yevgeny Prigozhin admits he created the mercenary Wagner Group". Politico. 26 September 2022 இம் மூலத்தில் இருந்து 26 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220926165922/https://www.politico.eu/article/yevgeny-prigozhin-admits-that-he-created-the-wagner-group/. 
 13. "Putin's 'chef' Prigozhin admits creating Wagner mercenary outfit in 2014". CNN. 26 September 2022 இம் மூலத்தில் இருந்து 16 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230116235052/https://edition.cnn.com/2022/09/26/europe/yevgeny-prigozhin-wagner-russia-intl/index.html. 
 14. "Russia's Wagner boss: It's prisoners fighting in Ukraine, or your children". BBC News. 16 September 2022 இம் மூலத்தில் இருந்து 4 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221004075313/https://www.bbc.com/news/world-europe-62922152. 
 15. "Russia's Prigozhin admits interfering in U.S. Elections". ராய்ட்டர்ஸ். 7 November 2022 இம் மூலத்தில் இருந்து 17 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221117165838/https://www.reuters.com/world/us/russias-prigozhin-admits-interfering-us-elections-2022-11-07/. 
 16. Fitzpatrick, Jim (7 February 2023). "MPs grill minister over decision to let warlord sue reporter". openDemocracy. Archived from the original on 8 February 2023. பார்க்கப்பட்ட நாள் 9 February 2023.
 17. "Yevgeniy Vicktorovich Prigozhin - Federal Bureau of Investigation". Federal Bureau of Investigation. 9 July 2021. Archived from the original on 16 January 2023. பார்க்கப்பட்ட நாள் 16 January 2023.
 18. "Archived copy" (PDF). Archived from the original on 27 November 2022. பார்க்கப்பட்ட நாள் 16 January 2023.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 19. "Switzerland Imposed Sanctions on Wagner Group". European Pravda (in ஆங்கிலம்). Archived from the original on 27 April 2023. பார்க்கப்பட்ட நாள் 24 June 2023.
 20. Trofimov, Yaroslav (23 June 2023). "Russia Issues Arrest Warrant for Wagner Chief on Charges of Mutiny" (in en-US). Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 23 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230623222312/https://www.wsj.com/articles/ukraine-shoots-down-russian-cruise-missile-barrage-9d9da03a. 
 21. Chernova, Anna (24 June 2023). "Case against Prigozhin will be dropped and he will be sent to Belarus, Kremlin spokesperson says". CNN. பார்க்கப்பட்ட நாள் 24 June 2023.
 22. "Wagner boss Prigozhin confirmed dead in plane crash - Moscow" (in en-GB). BBC News. 2023-08-27 இம் மூலத்தில் இருந்து 27 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230827105707/https://www.bbc.com/news/world-europe-66632924. 
 23. "Russia says it confirmed Wagner leader Prigozhin died in a plane crash". AP News (in ஆங்கிலம்). 2023-08-27. பார்க்கப்பட்ட நாள் 2023-08-28.
 24. Seddon, Max (2023-08-23). "Yevgeny Prigozhin was passenger on crashed plane, Russian officials say". Financial Times இம் மூலத்தில் இருந்து 23 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230823172612/https://www.ft.com/content/812c9da3-80f2-4fe1-8fad-0b4441d1977a. 
 25. "Russland: Privatjet abgestürzt – laut Tass war Prigoschin auf der Passagierliste" (in de). Der Spiegel. 2023-08-23 இம் மூலத்தில் இருந்து 23 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230823182050/https://www.spiegel.de/ausland/jewgenij-prigoschin-privatjet-in-russland-abgestuerzt-laut-tass-war-wagner-chef-auf-passagierliste-a-95c87d89-1810-4f51-988f-154ef229f68e. 
 26. "Prigozhin confirmed dead after genetic tests - Moscow" (in en-GB). BBC News. 2023-08-27 இம் மூலத்தில் இருந்து 27 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230827105707/https://www.bbc.com/news/world-europe-66632924. 
 27. Frank Gardner (journalist); Lukiv, Jaroslav; Greenall, Robert (2023-08-23). "Wagner boss Prigozhin killed in plane crash in Russia" (in en-GB). BBC News இம் மூலத்தில் இருந்து 23 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230823171520/https://www.bbc.com/news/world-europe-66599733. 
 28. "Крушение самолета Евгения Пригожина Бизнесмен значился в списке пассажиров, но был ли он на борту — неизвестно. Главное". Meduza (in ரஷியன்). Archived from the original on 23 August 2023. பார்க்கப்பட்ட நாள் 23 August 2023.
 29. Troianovski, Anton; Barnes, Julian E; Schmitt, Eric (August 24, 2023). "'It's Likely Prigozhin Was Killed,' Pentagon Says". த நியூயார்க் டைம்ஸ். Archived from the original on 27 August 2023. பார்க்கப்பட்ட நாள் August 27, 2023.
 30. "Russia: Residents of city where Wagner's mutiny started honour memory of Prigozhin" (in en). Africanews இம் மூலத்தில் இருந்து 26 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230826044147/https://www.africanews.com/2023/08/25/russia-residents-of-city-where-wagners-mutiny-started-honour-memory-of-prigozhin/. 
 31. "Wagner Fighter Breaks Down At Prigozhin Memorial In Russia | Moscow Residents Say 'Not Surprised'" (in en). Hindustan Times. 24 August 2023 இம் மூலத்தில் இருந்து 25 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230825210844/https://www.hindustantimes.com/videos/world-news/wagner-fighter-breaks-down-at-prigozhin-memorial-in-russia-moscow-residents-say-not-surprised-101692897824517.html. 
 32. "Prigozhin buried in private funeral - Wagner chief's press service". BBC. 29 August 2023. பார்க்கப்பட்ட நாள் 29 August 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எவ்கேனி_பிரிகோசின்&oldid=3959998" இலிருந்து மீள்விக்கப்பட்டது