வாக்னர் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாக்னர் குழு
Группа Вагнера
எவ்கேனி பிரிகோசின் , வாக்னர் குழுவின் தலைவர்
நிறுவனர்எவ்கேனி பிரிகோசின்
தலைவர்கள்லெப். கர்ணல் டிமிட்ரி உத் (வாக்னர்")
செயல்பாட்டுக் காலம்2014-தற்போது வரை
அளவு
  • 50,000+(டிசம்பர் 2022)
  • 8,000 (ஏப்ரல் 2022)
  • 6,000 (டிசம்பர் 2017)
  • 1,000 (மார்ச் 2016)
  • 250
தலைமையகம்செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், உருசியா
தீவிரவாத அமைப்பாக அறிவித்தது
 எசுத்தோனியா[1][2]
இணையதளம்https://wagnercentr.ru/
கூட்டாளிகள்
  • உருசியா ஆயுதப் படைகள்
  • தொன்பாஸ் பிரிவினைவாத படைகள்
  • சிரியாவின் ஆயுதப்படைகள்
  • இசுலாமிய புரட்சிகர படைகள்
  • மத்திய ஆப்பிரிக்க ஆயுதப் படைகள்
  • லிபியா தேசிய இராணுவம்
  • மொசாம்பிக் இராணுவப் படைகள்
  • மாலி ஆயுதப் படைகள்
  • ஐக்கிய அரபு அமீரகம்
எதிரிகள்
  • உக்ரைன் ஆயுதப் படைகள்
  • இராக்கிலும் சாமிலும் இசுலாமிய அரசு இசுலாமிய அரசு
  • அல்-நூஸ்ரா முன்னணி (2014–2017)
  • தரீர் அல் ஷாசிரியன் தேசிய இராணுவம்
  • சிரியன் விடுதலை இராணுவம்
  • சிரியன் ஜனநாயகப் படைகள்
  • மாற்றத்திற்கான தேசபக்தர்கள் கூட்டணி
  • லிபியா இராணுவம
  • அன்சார் அல் சுன்ன்னா (மொசாம்பிக்)
  • நுஸ்ரத் அல்-இஸ்லாம்
யுத்தங்கள் மற்றும் போர்கள்2014 கிரிமியாவை ருசிய கூட்டமைப்பில் இணைத்தல்[3][4]

வாக்னர் குழு (Wagner Group) உருசியா நாட்டின் ஆதரவு பெற்ற தனியார் ஆயுதக் குழு ஆகும். இதன் தலைவர் எவ்கேனி பிரிகோசின் ஆவார்/[5] இதனைக் கூலிப்படைகளின் வலையமைப்பு அல்லது உருசியா அதிபர் விளாடிமிர் புடின்னின் உண்மையான தனியார் இராணுவம் என பலவிதமாக விவரிக்கப்படுகிறது.[6]}}முன்பு உள்நாட்டுப் போர்கள் நடந்த லிபியா, மாலி, சிரியா, மொசாம்பி, சூடான் போன்ற நாடுகளில் இந்த வாக்னர் குழுவை உருசியா பயன்படுத்தி வந்தது. இக்குழுவினர் நவீன ஆயுதங்களை சிறப்பாக கையாளும் பயிற்சி பெற்றவர்கள். மேலும் ஆயுதங்கள் இன்றி தனித்தும் போரிடும் திறன் கொண்டவர்கள். ஈவு, இரக்கம் இன்றி தங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் இந்த குழுவினர் சிறப்பான கொலைக்காரர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். உக்ரைனிற்கு எதிரான போரில் ரஷ்யா இராணுவத்தால் செய்ய முடியாத சில சட்டவிரோத செயல்களை வாக்னர் ஆயுதக் குழுவினர் விளாடிமிர் புதினுக்காக செய்துள்ளது.

உக்ரைனின் தொன்பாஸ் பிரதேசத்தில் 2014 முதல் 2015 வரை சுயமாக அறிவிக்கப்பட்ட லுகான்ஸ்கா மாகாணம் மற்றும் தோனெத்ஸ்க் மாகாணம் மக்கள் குடியரசுகளின் பிரிவினைவாதப் படைகளுக்கு வாக்னர் குழு உதவியது.[6]}} வாக்னர் ஆயுதக் குழுவினர் பெரும்பாலும் ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்த படைகளின் பக்கம் சண்டையிடுகின்றனர். வாக்னர் செயற்பாட்டாளர்கள் அவர்கள் நிலைநிறுத்தப்பட்ட பகுதிகளில் போர்க்குற்றங்களை இழைத்துள்ளனர். குற்றச்சாட்டுகளில் கற்பழிப்பு மற்றும் பொதுமக்கள் மீதான கொள்ளைகள் மற்றும் தப்பியோடியவர்களை சித்திரவதை செய்தல் ஆகியவை அடங்கும்.

இது ரஷ்ய நலன்களுக்கு ஆதரவாக செயல்படுவதால், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து இராணுவ தளவாடங்கள் பெறுகிறது மற்றும் பயிற்சிக்காக அரசின் அமைப்புகளை பயன்படுத்துகிறது.

2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் போது உக்ரேனிய தலைவர்களை படுகொலை வாக்னர் ஆயுதக் குழுக்களை உருசியா அனுப்பியது. டிசம்பர் 2022ல் உக்ரைனில் வாக்னர் குழுவிடம் 50,000 போராளிகள் இருப்பதாகக் கூறினார்.

வாக்னர் ஆயுதக் குழுவின் நிறுவனர்[தொகு]

ருசிய அதிபர் விளாடிமீர் புடினுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வணிகரான எவ்கேனி பிரிகோசின் இந்த குழுவிற்கு சொந்தமானதாக அல்லது நிதியளிக்கப்பட்டதாக பரவலாக நம்பப்படுகிறது.[7] வாக்னர் குழுவுடனான தொடர்பை மறுத்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிகோஜின் செப்டம்பர் 2022 இல் துணை ராணுவக் குழுவை நிறுவியதாக ஒப்புக்கொண்டார்.

மாஸ்கோவிற்கு எதிராக வாக்னர் ஆயுதக் குழுவினர்[தொகு]

வாக்னர் குழு தலைவராக எவ்கேனி பிரிகோசின் உள்ளார். இவர் மீதும், வாக்னர் ஆயுதக் குழுவினர் மீதும் உருசியா அரசு அடக்குமுறை செயல்படுத்துவதாக வாக்னர் குழுவினர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் 24 சூன் 2023 அன்று வாக்னர் ஆயுதக் குழுவினர் உருசியத் தலைமையை வீழ்த்துவதற்கு மாஸ்கோற்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.[8][9][10]25 சூன் 2023 அன்று உருசியாவின் இராணுவத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வாக்னர் குழு திரும்பப் பெற்றுக் கொண்டது.[11]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Parliament of Estonia declared Russia a terrorist regime: what does it mean". visitukraine.today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-02.
  2. "Estonia's parliament declares Russia a 'terrorist regime'". www.aljazeera.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-02.
  3. "Revealed: Russia's 'Secret Syria Mercenaries'". Sky News. 10 August 2016. பார்க்கப்பட்ட நாள் 18 September 2017.
  4. "Russian Mercenaries in Syria". Warsaw Institute Foundation. 22 April 2017. பார்க்கப்பட்ட நாள் 18 September 2017.
  5. Cruickshank, Paul; Hummel, Kristina, தொகுப்பாசிரியர்கள் (June 2022). "Undermining Democracy and Exploiting Clients: The Wagner Group's Nefarious Activities in Africa". CTC Sentinel (West Point, New York: Combating Terrorism Center) 15 (6): 28–37. https://ctc.westpoint.edu/wp-content/uploads/2022/06/CTC-SENTINEL-062022.pdf. பார்த்த நாள்: 16 August 2022. 
  6. 6.0 6.1 "Russia's Paramilitary Mercenaries Emerge from the Shadows".
  7. https://www.economist.com/the-economist-explains/2022/09/29/who-is-yevgeny-prigozhin-the-man-behind-the-wagner-group
  8. Putin vows to punish ‘armed uprising’ by Wagner militia as Russia is plunged into crisis
  9. Russia-Ukraine Live Updates: ‘Everyone who took up arms against Army is traitor,’ says Putin as Wagner forces inch closer to Moscow
  10. Wagner chief 'betrayed' Russia out of 'personal ambition', President Putin says
  11. புதினுக்கு எதிராக தொடங்கிய வேகத்தில் முடிவுக்கு வந்த 'வாக்னர்' கிளர்ச்சி

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்னர்_குழு&oldid=3744816" இலிருந்து மீள்விக்கப்பட்டது