எம். ஈ. எச். மகரூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஈ. எச். மகரூப்
M. E. H. Maharoof

நா.உ
மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1989
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1997
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 5, 1939(1939-01-05)
இறப்பு 20 சூலை 1997(1997-07-20) (அகவை 58)
தேசியம் இலங்கைச் சோனகர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
சமயம் இசுலாம்

முகம்மது எகுத்தார் ஹாஜியார் மகரூப் (Mohamed Ehuttar Hadjiar Maharoof, 5 சனவரி 1939 - 20 சூலை 1997) இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

மகரூப் 1939 சனவரி 5 இல் இலங்கையின் கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார்.[1][2] இவரது தந்தை கிண்ணியா கிராமசபைத் தலைவராக இருந்தவர். சகோதரர் எம். ஈ. எச். முகம்மது அலி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.[2] மாத்தளை சாகிரா கல்லூரி, கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, கண்டி புனித அந்தோனியார் கல்லூரி, கொழும்பு பெம்புரோக் அகாதமி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[2]

மகரூபின் மகன் இம்ரான் மகரூப் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[3][4]

அரசியலில்[தொகு]

மகரூப் 1965 இல் தந்தை இறந்ததை அடுத்து அரசியலில் இறங்கினார்.[2] கிண்ணியா நகர சபையில் தலைவராக 1966 முதல் 1971 வரை இருந்தார்.[1]

மகரூப் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மூதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5] 1978 இல் மன்னார் மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][6] 1989 தேர்தலில் ஐதேக வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] 1990 இல் துறைமுகங்கள், மற்றும் கப்பல் போக்குவரத்து இராசாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[8] 1994 தேர்தலில் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.[9]

படுகொலை[தொகு]

மகரூப் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களுடன் சிறந்த புரிந்துணர்வைக் கொண்டிருந்தார். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சி உருவாக்கத்தையும், முசுலிம்களுக்கு என தென்கிழக்கு மாகாணசபை உருவாக்கத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.[10][11] 1997 சூலை 20 காலையில் மகரூப் பயணம் செய்த வாகனம் இறக்கண்டி செல்லும் வழியில் குச்சவெளி வீதியில் திருகோணமலைக்கும் நிலாவெளிக்கும் இடையில் 6 ஆம் மைல் கட்டையடியில் வைத்து கண்ணிவெடி ஒன்றில் சிக்கியதில் மகரூப் கொல்லப்பட்டார்.[12][13] அவருடன் மேலும் ஐவரும் (ஓட்டுனர், பாதுகாப்பு அதிகாரி, நண்பர், பாடசாலை அதிபர் ஒருவர், சாரதியின் 5 வயது மகன்) கொல்லப்பட்டனர்.[12][13] விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை மேற்கொண்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டது.[14][15]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Directory of Past Members: Maharoof, Mohamed Ehuttar Hadjiar". இலங்கை நாடாளுமன்றம்.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 de Silva, W. P. P.; Ferdinando, T. C. L.. 9th Parliament of Sri Lanka. Associated Newspapers of Ceylon Limited. பக். 272. Archived from the original on 2015-06-23. https://web.archive.org/web/20150623233447/http://noolaham.net/project/148/14715/14715.pdf. பார்த்த நாள்: 2015-08-23. 
  3. Gurunathan, S. (17 டிசம்பர் 2014). "UPFA is like a sinking ship – Maharoof". சிலோன் டுடே. Archived from the original on 2015-09-23. https://web.archive.org/web/20150923222108/http://www.ceylontoday.lk/51-80105-news-detail-upfa-is-like-a-sinking-ship-maharoof.html. 
  4. டி. பி. எஸ். ஜெயராஜ் (22 செப்டம்பர் 2012). "Najeeb Abdul Majeed makes history as the first muslim CM of Sri Lanka". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/22121/najeeb-abdul-majeed-makes-history-as-the-first-muslim-cm-of-sri-lanka. 
  5. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2011-07-17 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-08-23 அன்று பார்க்கப்பட்டது.
  6. Rajasingham, K. T.. "Chapter 25: War or peace?". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-04-16. https://web.archive.org/web/20020416074026/http://www.atimes.com/ind-pak/DB02Df03.html. பார்த்த நாள்: 2015-08-23. 
  7. "Result of Parliamentary General Election 1989" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2009-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-08-23 அன்று பார்க்கப்பட்டது.
  8. de Silva, W. P. P.; Ferdinando, T. C. L.. 9th Parliament of Sri Lanka. Associated Newspapers of Ceylon Limited. பக். 215. Archived from the original on 2015-06-23. https://web.archive.org/web/20150623233447/http://noolaham.net/project/148/14715/14715.pdf. பார்த்த நாள்: 2015-08-23. 
  9. "Result of Parliamentary General Election 1994" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். 2010-10-06 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-08-23 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Political sixes and Anura’s 20". சண்டே டைம்சு (27 சூலை 1997). http://www.sundaytimes.lk/970727/pol.html. 
  11. Farook, Latheef (7 அக்டோபர் 2012). "SLMC betrayal: Muslims should return to mainstream parties". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/121007/news/slmc-betrayal-muslims-should-return-to-mainstream-parties-15419.html. 
  12. 12.0 12.1 "Muslim MP and 5 Others Killed". தமிழ் டைம்ஸ் XVI (8): 5. August 1997. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/36/3556/3556.pdf. 
  13. 13.0 13.1 "ASA 37/20/97 Sri Lanka: Tamil Tigers leaders should account for latest killings" (PDF). பன்னாட்டு மன்னிப்பு அவை. 22 சூலை 1997. 2018-02-21 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-08-23 அன்று பார்க்கப்பட்டது.
  14. Collure, Shyamal A. (3 ஆகத்து 1997). "UNP’s Trinco choice under fire". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/970803/newsm.html#LABEL1. 
  15. Kurukularatnae, Buddhika (24 ஏப்ரல் 2005). "The battle of the Gulliver and the Lilliputian". தி ஐலண்டு. Archived from the original on 2011-06-17. https://web.archive.org/web/20110617044525/http://www.island.lk/2005/04/24/features3.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஈ._எச்._மகரூப்&oldid=3545771" இருந்து மீள்விக்கப்பட்டது