எம். ஈ. எச். மகரூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். ஈ. எச். மகரூப்
M. E. H. Maharoof
மூதூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1989
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–1997
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1939-01-05)5 சனவரி 1939
இறப்பு20 சூலை 1997(1997-07-20) (அகவை 58)
தேசியம்இலங்கைச் சோனகர்
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி

முகம்மது எகுத்தார் ஹாஜியார் மகரூப் (Mohamed Ehuttar Hadjiar Maharoof, 5 சனவரி 1939 - 20 சூலை 1997) இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

மகரூப் 1939 சனவரி 5 இல் இலங்கையின் கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார்.[1][2] இவரது தந்தை கிண்ணியா கிராமசபைத் தலைவராக இருந்தவர். சகோதரர் எம். ஈ. எச். முகம்மது அலி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.[2] மாத்தளை சாகிரா கல்லூரி, கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, கண்டி புனித அந்தோனியார் கல்லூரி, கொழும்பு பெம்புரோக் அகாதமி ஆகியவற்றில் கல்வி பயின்றார்.[2]

மகரூபின் மகன் இம்ரான் மகரூப் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[3][4]

அரசியலில்[தொகு]

மகரூப் 1965 இல் தந்தை இறந்ததை அடுத்து அரசியலில் இறங்கினார்.[2] கிண்ணியா நகர சபையில் தலைவராக 1966 முதல் 1971 வரை இருந்தார்.[1]

மகரூப் 1977 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக மூதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[5] 1978 இல் மன்னார் மாவட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2][6] 1989 தேர்தலில் ஐதேக வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] 1990 இல் துறைமுகங்கள், மற்றும் கப்பல் போக்குவரத்து இராசாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[8] 1994 தேர்தலில் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.[9]

படுகொலை[தொகு]

மகரூப் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களுடன் சிறந்த புரிந்துணர்வைக் கொண்டிருந்தார். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சி உருவாக்கத்தையும், முசுலிம்களுக்கு என தென்கிழக்கு மாகாணசபை உருவாக்கத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.[10][11] 1997 சூலை 20 காலையில் மகரூப் பயணம் செய்த வாகனம் இறக்கண்டி செல்லும் வழியில் குச்சவெளி வீதியில் திருகோணமலைக்கும் நிலாவெளிக்கும் இடையில் 6 ஆம் மைல் கட்டையடியில் வைத்து கண்ணிவெடி ஒன்றில் சிக்கியதில் மகரூப் கொல்லப்பட்டார்.[12][13] அவருடன் மேலும் ஐவரும் (ஓட்டுனர், பாதுகாப்பு அதிகாரி, நண்பர், பாடசாலை அதிபர் ஒருவர், சாரதியின் 5 வயது மகன்) கொல்லப்பட்டனர்.[12][13] விடுதலைப் புலிகளே இத்தாக்குதலை மேற்கொண்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டது.[14][15]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Directory of Past Members: Maharoof, Mohamed Ehuttar Hadjiar". இலங்கை நாடாளுமன்றம்.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 de Silva, W. P. P.; Ferdinando, T. C. L.. 9th Parliament of Sri Lanka. Associated Newspapers of Ceylon Limited. பக். 272 இம் மூலத்தில் இருந்து 2015-06-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150623233447/http://noolaham.net/project/148/14715/14715.pdf. பார்த்த நாள்: 2015-08-23. 
  3. Gurunathan, S. (17 டிசம்பர் 2014). "UPFA is like a sinking ship – Maharoof". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2015-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923222108/http://www.ceylontoday.lk/51-80105-news-detail-upfa-is-like-a-sinking-ship-maharoof.html. 
  4. டி. பி. எஸ். ஜெயராஜ் (22 செப்டம்பர் 2012). "Najeeb Abdul Majeed makes history as the first muslim CM of Sri Lanka". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/22121/najeeb-abdul-majeed-makes-history-as-the-first-muslim-cm-of-sri-lanka. 
  5. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2015-08-23.
  6. Rajasingham, K. T.. "Chapter 25: War or peace?". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2002-04-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20020416074026/http://www.atimes.com/ind-pak/DB02Df03.html. பார்த்த நாள்: 2015-08-23. 
  7. "Result of Parliamentary General Election 1989" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-23.
  8. de Silva, W. P. P.; Ferdinando, T. C. L.. 9th Parliament of Sri Lanka. Associated Newspapers of Ceylon Limited. பக். 215 இம் மூலத்தில் இருந்து 2015-06-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150623233447/http://noolaham.net/project/148/14715/14715.pdf. பார்த்த நாள்: 2015-08-23. 
  9. "Result of Parliamentary General Election 1994" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-23.
  10. "Political sixes and Anura’s 20". சண்டே டைம்சு (27 சூலை 1997). http://www.sundaytimes.lk/970727/pol.html. 
  11. Farook, Latheef (7 அக்டோபர் 2012). "SLMC betrayal: Muslims should return to mainstream parties". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/121007/news/slmc-betrayal-muslims-should-return-to-mainstream-parties-15419.html. 
  12. 12.0 12.1 "Muslim MP and 5 Others Killed". தமிழ் டைம்ஸ் XVI (8): 5. August 1997. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/36/3556/3556.pdf. 
  13. 13.0 13.1 "ASA 37/20/97 Sri Lanka: Tamil Tigers leaders should account for latest killings" (PDF). பன்னாட்டு மன்னிப்பு அவை. 22 சூலை 1997. Archived from the original (PDF) on 2018-02-21. பார்க்கப்பட்ட நாள் 2015-08-23.
  14. Collure, Shyamal A. (3 ஆகத்து 1997). "UNP’s Trinco choice under fire". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/970803/newsm.html#LABEL1. 
  15. Kurukularatnae, Buddhika (24 ஏப்ரல் 2005). "The battle of the Gulliver and the Lilliputian". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617044525/http://www.island.lk/2005/04/24/features3.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஈ._எச்._மகரூப்&oldid=3545771" இலிருந்து மீள்விக்கப்பட்டது