எப். சி. கோலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எப். சி. கோலி
பிறப்புபக்கிர் சந்த் கோலி
மார்ச்சு 19, 1924(1924-03-19)
பிரித்தானிய இந்தியா, பெசாவர்
இறப்பு26 நவம்பர் 2020(2020-11-26) (அகவை 96)[1]
தேசியம்இந்தியர்
கல்விபஞ்சாப் பல்கலைக்கழகம் (பி.ஏ, பிஎஸ்சி)
குயின்ஸ் பல்கலைக்கழகம் (பிஎஸ்சி)
எம்.ஐ.டி (எம்.எஸ்)
பணிணிக நிர்வாகி, தொழிலதிபர்
அறியப்படுவதுஇந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு முன்னோடி பங்களிப்புகள்
விருதுகள்பத்ம பூசண்

பக்கிர் சந்த் கோலி (19 மார்ச் 1924 -26 நவம்பர் 2020) இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீச்சின் நிறுவனரும், அதன் முதல் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவரும் ஆவார். இவர் டாட்டா குழுமத்தில் உள்ள டாட்டா பவர் மற்றும் டாட்டா எல்க்சி உள்ளிட்ட பிற நிறுவனங்களுடனும் தொடர்புடையவர். மேலும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினரின் கூட்டமைப்பான நாஸ்காம் அமைப்பின் தலைவராக இருந்தார். [2] [3] இந்திய மென்பொருள் துறைக்கு இவர் அளித்த பங்களிப்புகளைப் பாராட்டி 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது மிக உயரிய குடிமை கௌவமான பத்ம பூசண் விருதைப் பெற்றவர். [4] புணேயில் இவர் உலகத்தரம்வாய்ந்த மென்பொருள் தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை உருவாக்கினார். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியில் இவரது பங்களிப்புகளால், "இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தந்தை" என குறிப்பிடப்படுகிறார். [5]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கோலி 1924 மார்ச் 19 இல் பிரித்தானிய இந்தியாவின் பெசாவரில் (இன்றைய பாக்கித்தான் ) பிறந்தார். [6] அப்போது இராணுவ மையமாக இருந்த பெசாவரில் வளர்ந்த இவர், கல்சா நடுநிலைப் பள்ளியிலும், பின்னர் அதே நகரத்தில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். [7] லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் லாகூரில் உள்ள கோவ்ட் ஆப் மென் கல்லூரியில் தனது இளங்கலை மற்றும் இளம் அறிவியல் (ஹானர்ஸ்) படிப்பை முடித்தார், அங்கு இவர் பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கத்தைப் வென்றார். [8] [9] கல்லூரியின் இறுதி ஆண்டில் இவரது தந்தை இறந்த பிறகு, இவரின் விண்ணப்பித்ததின் பேரில் இந்தியக் கடற்படைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், கடற்படையின் நியமனத்துக்கு காத்திருந்தபோது, இவர் விண்ணப்பித்திருந்த, கனடாவின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் உதவித்தொகை பெற்றார். அங்கு இவர் 1948 இல் மின் பொறியியலில் தனது இளம் அறிவியல் படிப்பை முடித்தார். பின்னர் இவர் கனேடிய ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றினார். பின்னர் 1950 இல் அமெரிக்காவின் மாசசூசிட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மின் பொறியியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். [10] [11]

தொழில்[தொகு]

எம்ஐடியில் முதுநிலைப் படிப்பு முடித்த பின்னர், கோலி 1951 இல் இந்தியா திரும்புவதற்கு முன்பு, நியூயார்க், கனெக்டிகட் வேலி பவர் எக்ஸ்சேஞ்ச், ஹார்ட்ஃபோர்ட் மற்றும் நியூ இங்கிலாந்து பவர் சிஸ்டம்ஸ், பாஸ்டனில் மின் அமைப்பு செயல்பாடுகளில் பயிற்சி பெற்றார். இவர் டாடா மின் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு 1963 ஆம் ஆண்டில் பொது கண்காணிப்பாளராகவும், 1967 இல் துணை பொது மேலாளராகவும் இருந்தார். அப்போது மின்சார அமைப்புகளை இயக்கும் பணிகளில் நவீன பொறியியலின் மேலாண்மை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதற்காக இன்றும் நினைவுகூரப்படுகிறார்.[12]

டாடா மின் நிறுவனத்தின் இயக்குநராக ஆவதற்கு முன்பு, 1966 ஆம் ஆண்டில் டாடா கன்சல்டிங் பொறியாளர்களுக்காக பணிபுரிந்தார். இந்த நேரத்தில், டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில் சி.டி.சி 3600 மெயின்பிரேம் கணினியைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார்.[12] [13]

டாடா மின் நிறுவனம் மும்பைக்கும் புணேவுக்கும் இடையிலான மின் தடத்தைக் கணினியைக் கொண்டு கட்டுப்படுத்தும் அமைப்பொன்றை உருவாக்கினார். உலகிலேயே அத்தகைய ஒரு கட்டமைப்பை உருவாக்கிய மூன்றாவது நிறுவனமாக டாடா மின் நிறுவனம் பெயர்பெற்றது. டாடா குழுமத் தலைவர் ஜே.ஆர்.டி டாடா கேட்டுக்கொண்டதன் பெயரில் 1969-ல் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார். முதலில் டாடா குழும நிறுவனங்களுக்கு மட்டுமே மென்பொருள் சேவைகளை வழங்கிவந்த டிசிஎஸ், பின்னர், மற்ற நிறுவனங்களுடனான முதல் ஒப்பந்தத்தில் மென்பொருள் சேவைகளுக்காக பரோஸ் நிறுவனத்துடன் 1972 இல் கையெழுத்திட்டது. இவர் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முதல் தலைமை செயல் அதிகாரியாகவும், அதன் துணைத் தலைவராகவும் பணியாற்றுவார். [8] [12] 1996 இல் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகுவதற்கு முன் மூன்று தசாப்தங்களுக்கு இவர் நிறுவனத்தை வழிநடத்தினார். இந்நிறுவனம் சந்தை மூலதனத்தால் மிகப்பெரிய இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும், மேலும் 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி டாடா குழுமத்திற்குள் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகும்.

மேலும் இவர் டாடா சன்ஸ், டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா யுனிசிஸ், டாடா எலக்ட்ரிக் கம்பெனி, டாடா ஹனிவெல், டாடா டெக்னாலஜிஸ் சிங்கப்பூர் போன்ற டாடா குழுமத்தில் உள்ள மற்ற நிறுவனங்களுடனும் இவர் தொடர்பில் இருந்தார். டாடா எல்க்சி இந்தியா, மற்றும் டபிள்யூ.டி.ஐ அட்வான்ஸ்டு டெக்னாலஜிஸ் போன்றவற்றில் தலைவராகவும் இருந்தார். [13] டாடா குழுமத்திற்கு வெளியே, ஏர்லைன் சப்டெவேர் டெவலப்மெண்ட் கன்சல்டன்சி இந்தியா, ஏர்லைன்ஸ் பெனான்சியல் சப்போர்ட் சர்வீஸ் இந்தியா, அபாகஸ் டிஸ்ட்ரிபூசன் சிஸ்டம், திரிவேணி பொறியியல் பணிகள் ஆகியவற்றில் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

1995 மற்றும் 1996 க்கு இடையில் இவர் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினரின் கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக இருந்தார் [13] இதன்பிறகு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு உலகளாவிய வாய்ப்புகள் வந்துசேர இவர் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார். [14] மேலும் இவர் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா, இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ் , எலக்ட்ரிகல் இன்ஜினியர்கள் நிறுவனம், இந்திய தேசிய பொறியியல் அகாடமி மற்றும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் போன்ற தொழில் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். [15]

நாட்டில் தொழில்நுட்பக் கல்வியின் முன்னேற்றத்திலும் கோலி முக்கிய பங்கு வகித்தார். 1959 ஆம் ஆண்டில், கான்பூரின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் நிறுவன இயக்குநரான பி. கே. கேல்கரின் வேண்டுகோளின்படி, கல்வி நிறுவனத்துக்கான ஆசிரியத் தேர்வு மற்றும் ஆட்சேர்ப்புக்கு உதவினார். இவர் புனேவில் உள்ள பொறியியல் கல்லூரியின் தன்னாட்சி அதிகாரத்துக்கான அழுத்தங்களை உருவாக்கியதோடு, அந்தக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவராகவும் பொறுப்புவகித்திருக்கிறார். இந்த நிறுவனத்திற்கு தன்னாட்சி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.[15] புணேயில் மென்பொருள் தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை உலகத்தரம் கொண்டதாக இவர் உருவாக்கினார்.[16]

கௌரவங்கள்[தொகு]

இந்திய மென்பொருள் துறையில் பங்களித்ததற்காக 2002 ஆம் ஆண்டில், கோலிக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷண் வழங்கப்பட்டது. [17] கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் சிவ் நாடர் பல்கலைக்கழகம், [8] ஸ்காட்லாந்தில் உள்ள ராபர்ட் கார்டன் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி பம்பாய், ஐ.ஐ.டி கான்பூர், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், குயின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ரூர்க்கி பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து கௌரவ பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன. [2] அவர் ஐஇஇஇ அமெரிக்கா, ஐஇஇ ஐ.மா, இன்ஸ்டிடியூஷன் ஆப் இன்ஜினியர்ஸ் இந்தியா, மற்றும் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தார்.

பிற விருதுகள் மற்றும் கௌரவங்கள்:

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நுகர்வோர் உரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ஸ்வர்னை கோலி மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. [22] [7] இவர் மாரடைப்பால் 2020 நவம்பர் 26 அன்று தன் 96 வயதில் இறந்தார். [23] [24] [25]

வகித்த பொறுப்புகள்[தொகு]

ஆதாரம் (கள்): [13] [26]

நிறுவனத்தின் பெயர் பதவி ஆண்டு
டாடா இன்ஃபோடெக் லிமிடெட் இயக்குனர் 1977
பிராட்மா ஆஃப் இந்தியா லிமிடெட் இயக்குனர் 1982
டபியடிஐ அட்வான்ஸ்டு டெக்னாலஜி லிமிடெட் தலைவர் 1988
டாடா எல்க்சி (இ) லிமிடெட் இயக்குனர் 1989
டாடா டெக்னாலஜிஸ் (பி.டி.) லிமிடெட், சிங்கப்பூர். இயக்குனர் 1991
திரிவேணி என்ஜினியரிங் ஒர்க்ஸ் லிமிடெட் இயக்குனர் 1994
எச்ஓடிவி இன்க்., யு.எஸ். இயக்குனர் 1999
இன்ஜினியரிங் அனலைஸ் சென்டர் ஆப் எக்சலன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் 1999
இபிஐஇசட் சொல்லூசன் லிமிடெட் இயக்குனர் 1999
எடூடெக் இன்ஃபர்மேடிக்ஸ் இந்தியா (பி) லிமிடெட் இயக்குனர் 2000
டெக்னோசாஃப்ட் எஸ்.ஏ., சுவிட்சர்லாந்து இயக்குனர் 2000
சன் எஃப் அண்ட் சி அசெட் மேனேஜ்மென்ட் (ஐ) பிரைவேட் லிமிடெட் இயக்குனர் 2000
ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் 2000
மீடியா லேப் ஆசியா லிமிடெட் இயக்குனர் 2002

புத்தகங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "FC Kohli Death: First CEO of Tata Consultancy Services Has Passed Away".
 2. 2.0 2.1 "F C Kohli, Founder of TCS @ Rotman". Business Week. மூல முகவரியிலிருந்து 10 November 2006 அன்று பரணிடப்பட்டது.
 3. "Cognizant rising by Chennai beach". மூல முகவரியிலிருந்து 17 March 2014 அன்று பரணிடப்பட்டது.
 4. "FC Kohli, founder of TCS and father of India's IT industry passes away at 96". மூல முகவரியிலிருந்து 26 November 2020 அன்று பரணிடப்பட்டது.
 5. "FC Kohli, father of Indian IT industry, passes away" (en) (26 November 2020). மூல முகவரியிலிருந்து 26 November 2020 அன்று பரணிடப்பட்டது.
 6. Baruah, Ayushman (26 November 2020). "FC Kohli, doyen of Indian IT, dies" (en). மூல முகவரியிலிருந்து 27 November 2020 அன்று பரணிடப்பட்டது.
 7. 7.0 7.1 Bhattrai, Sushmita (15 January 2020). "Two Countries, Two Lives" (en-GB). மூல முகவரியிலிருந்து 19 September 2020 அன்று பரணிடப்பட்டது.
 8. 8.0 8.1 8.2 "Personality of the Issue - Mr. F. C. Kohli". IEEE Bombay Section (1 March 2002). மூல முகவரியிலிருந்து 24 November 2002 அன்று பரணிடப்பட்டது.
 9. "Dr. Faqir Chand Kohli".
 10. "India's IT Guy As director of Tata Consultancy Services, F. C. Kohli, SM '50, launched the Indian IT outsourcing industry.".
 11. "IT Industrialist & India's largest software exporter, FC Kohli has died at the age of 96". மூல முகவரியிலிருந்து 27 November 2020 அன்று பரணிடப்பட்டது.
 12. 12.0 12.1 12.2 "DR. FAQIR CHAND KOHLI".
 13. 13.0 13.1 13.2 13.3 "F C Kohli".
 14. "F.C. Kohli, father of Indian IT industry, passes away". 26 November 2020. https://www.thehindu.com/business/fc-kohli-father-of-indian-it-industry-passes-away/article33187788.ece. பார்த்த நாள்: 26 November 2020. 
 15. 15.0 15.1 "40 Years ago... and now- Faqir Chand Kohli: The original Indian techie". 4 February 2015. https://www.business-standard.com/article/companies/40-years-ago-and-now-faqir-chand-kohli-the-original-indian-techie-115020400011_1.html. பார்த்த நாள்: 26 November 2020. 
 16. கோலி: இந்திய ஐடியின் முகம், கட்டுரை, புவி, இந்து தமிழ் (நாளிதழ்), 2020 நவம்பர் 30
 17. "Padma Awards Directory (1954-2013)". India Ministry of Home Affairs. மூல முகவரியிலிருந்து 15 November 2014 அன்று பரணிடப்பட்டது.
 18. TCS's F.C. Kohli gets honoured
 19. "Dr F C Kohli conferred ET lifetime achievement award". மூல முகவரியிலிருந்து 4 March 2016 அன்று பரணிடப்பட்டது.
 20. "FC Kohli Center on Intelligent Systems". http://www.thehindu.com/news/national/telangana/tcs-research-centre-on-intelligent-systems-at-iiith/article7456144.ece. 
 21. "All India Management Association - 2017 Awards". மூல முகவரியிலிருந்து 27 November 2020 அன்று பரணிடப்பட்டது.
 22. Krishna, Jayant. "FC Kohli: A Lifetime of Repaying Gratitude to India" (en). மூல முகவரியிலிருந்து 27 November 2020 அன்று பரணிடப்பட்டது.
 23. "India’s IT sector pioneer FC Kohli dead". The Times of India (27 November 2020). மூல முகவரியிலிருந்து 27 November 2020 அன்று பரணிடப்பட்டது.
 24. "Founder and first CEO of Tata Consultancy Services FC Kohli passes away". https://www.cnbctv18.com/buzz/obituary-buzz/founder-and-first-ceo-of-tata-consultancy-services-fc-kohli-passes-away-7579721.htm. 
 25. "FC Kohli, founder of TCS and father of India's IT industry passes away at 96". மூல முகவரியிலிருந்து 26 November 2020 அன்று பரணிடப்பட்டது.
 26. "FC Kohli, father of Indian IT industry, passes away" (en) (26 November 2020). மூல முகவரியிலிருந்து 26 November 2020 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்._சி._கோலி&oldid=3164577" இருந்து மீள்விக்கப்பட்டது