எச். எம். ஜி. எஸ். பலிகக்கார

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச். எம். ஜி. எஸ். பலிகக்கார
H. M. G. S. Palihakkara

இவெசே
வட மாகாணத்தின் 4வது ஆளுநர்
பதவியில்
27 சனவரி 2015 – 14 பெப்ரவரி 2016
முன்னவர் ஜி. ஏ. சந்திரசிறி
பின்வந்தவர் ரெஜினால்ட் குரே
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்
பதவியில்
ஆகத்து 2008 – ஆகத்து 2009
முன்னவர் பிரசாத் காரியவசம்
பின்வந்தவர் பாலித்த கொகொக்க
தனிநபர் தகவல்
பிறப்பு 1947 (அகவை 75–76)
படித்த கல்வி நிறுவனங்கள் பேராதனைப் பல்கலைக்கழகம்
தொழில் அரச சேவையாளர்
சமயம் பௌத்தர்
இனம் சிங்களவர்

ஹேவா மாத்தர கமகே சிறிபால பலிகக்கார (Hewa Matara Gamage Siripala Palihakkara, பிறப்பு: 1947) இலங்கையின் முன்னாள் அரச சேவையாளரும், தூதுவரும், முன்னாள் வட மாகாண ஆளுநரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

மாத்தறையைச் சேர்ந்தவரும், பௌத்தரும் ஆன பலிகக்கார[1] 1947 ஆம் ஆண்டில் பிறந்தவர்.[2] பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.[2][3] திருமணம் புரிந்துள்ள பலிகக்காரவுக்கு ஒரு பிள்ளை உள்ளார்.[1][2]

பணி[தொகு]

1979 ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு சேவையில் இணைந்த பலிகக்கார 1980 இல் ஆத்திரேலியாவில் பயிற்சி எடுத்தார்.[2][3] பின்னர் இவர் லுண்ட் பல்கலைக்கழகம் ராவுல் வலென்பெர்க் கல்விக்கழகத்தில் பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மானுடவியல் சட்டம் பயின்றார்.[2][3]

பலிகக்கார ஐநா செனீவா அலுவலகத்தில் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாகவும், நியூ யார்க்கில் இலங்கையின் ஐநா திட்டத்தின் அதிகாரியாகவும் பணியாற்றினார்.[1] 2001 முதல் 2004 வரை தாய்லாந்தில் (கம்போடியா, லாவோஸ், வியட்நாம் உட்பட) இலங்கைத் தூதராகவும் பணியாற்றினார்.[1][2] அத்துடன் ஆசியா பசிபிக் நாடுகளுக்கான ஐநா பொருளாதார சமூக ஆணையத்தின் இலங்கைப் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார்.[2] 2004 ஏப்ரல் 20 முதல் 2006 டிசம்பர் 31 வரை வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றினார்.[1][2] அமைதித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்துள்ளார்.[1][3]

2008 ஆகத்தில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இச்சேவையில் அவர் 2009 ஆகத்து வரை பணியாற்றினார்.[2][4] ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் "போர் பிரகடனப் படுத்தப்படாத பகுதிகளில்" எவ்வித ஆயுதத் தாக்குதல்களும் நடடத்தப்படவில்லை என இலங்கை ஆயுதப் படையினருக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் உரையாற்றினார்.[5][6]

2010 மே மாதத்தில் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் ஓர் உறுப்பினராக பலிகக்காரவை நியமித்தார்.[7][8] ஈழப்போரின் போது இரு தரப்பின் மீதும் போர்க்குற்றங்கள் சாட்டப்பட்ட வேளையில், பலிகக்கார ஐநா சபையில் இலங்கைப் படையினருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தார் என்ற அடிப்படையில் இவரது நியமனத்துக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்தன.[9][10][11][12]

2015 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிய அரசுத்தலைவரான மைத்திரிபால சிறிசேன 2015 சனவரி 27 இல் பலிகக்காரவை வட மாகாண ஆளுநராக நியமித்தார்.[13][14] 2016 பெப்ரவரியில் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகினார்.[15]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "04COLOMBO685, Sri Lanka: New foreign secretary named". விக்கிலீக்ஸ். 21 ஏப்ரல் 2004.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 "New Permanent Representative of Sri Lanka Presents Credentials". ஐக்கிய நாடுகள் அவை. 25 ஆகத்து 2008.
 3. 3.0 3.1 3.2 3.3 "President appoints Lessons Learnt and Reconciliation Commission". Policy Research & Information Unit, Presidential Secretariat, Sri Lanka. 17 மே 2010. 2015-09-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-01 அன்று பார்க்கப்பட்டது.
 4. "‘Musical chairs’ continue for Sri Lanka’s envoys". சண்டே டைம்சு. 16 ஆகத்து 2009. http://www.sundaytimes.lk/090816/News/nws_15.html. 
 5. "’Temporary truce possible if LTTE allows civilians to leave’". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 29 மார்ச் 2009. Archived from the original on 2015-01-31. https://archive.today/20150131172425/http://www.hindustantimes.com/world-news/temporary-truce-possible-if-ltte-allows-civilians-to-leave/article1-394445.aspx. 
 6. Berenger, Leon (29 மார்ச் 2009). "Rambukwella says Govt. ready to consider ‘humanitarian pause’". சண்டேடைம்சு. http://www.sundaytimes.lk/090329/News/sundaytimesnews_02.html. 
 7. "PART I : SECTION (I) — GENERAL Proclamations & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி 1658/19. 16 June 2010. http://www.documents.gov.lk/Extgzt/2010/PDF/Jun/1658_19/1658_19%20%28E%29.pdf. பார்த்த நாள்: 1 பிப்ரவரி 2015. 
 8. "Commission on Lessons Learnt and Reconciliation". பிபிசி Sinhala. 17 மே 2010. http://www.bbc.co.uk/sinhala/news/story/2010/05/printable/100517_humanrights.shtml. 
 9. Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka. ஐக்கிய நாடுகள் அவை. 31 மார்ச் 2011. பக். 85. http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf. 
 10. "ASA 37/015/2010 Sri Lanka: International inquiry needed to address alleged war crimes (Joint Letter to the Lessons Learned & Reconciliation Commission (LLRC) on Sri Lanka from Amnesty International, Human Rights Watch & International Crisis Group)". பன்னாட்டு மன்னிப்பு அவை. 14 அக்டோபர் 2010. 2015-01-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-02-01 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Sri Lanka: Crisis Group Refuses to Appear Before Flawed Commission". International Crisis Group. 14 அக்டோபர் 2010.
 12. "Factual Supplement to the Report to Congress on Measures Taken by the Government of Sri Lanka and International Bodies To Investigate and Hold Accountable Violators of International Humanitarian and Human Rights Law". அமெரிக்க அரசுத் திணைக்களம். 4 ஏப்ரல் 2012.
 13. "Austin, Ellawala new Governors". டெய்லிமிரர். 27 சனவரி 2015. http://www.dailymirror.lk/62233/six-new-governors-sworn-in. 
 14. "Six Provincial Governors take oaths". த நேஷன். 27 சனவரி 2015. Archived from the original on 2016-03-07. https://web.archive.org/web/20160307032653/http://www.nation.lk/edition/breaking-news/item/37782-six-provincial-governors-take-oaths.html. 
 15. "Reginald Cooray Appointed Governor Of North". கொழும்பு டெலிகிராப். 14 பெப்ரவரி 2016. 14 பெப்ரவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.