எச்டி 149026
நோக்கல் தரவுகள் ஊழி J2000.0 Equinox J2000.0 | |
---|---|
பேரடை | ஹெர்குலஸ் |
வல எழுச்சிக் கோணம் | 16h 30m 29.620s |
நடுவரை விலக்கம் | +38° 20′ 50.31″ |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 8.15 |
இயல்புகள் | |
விண்மீன் வகை | G0IV |
தோற்றப் பருமன் (B) | 8.76 |
B−V color index | 0.611 |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | –18.1 ± 0.4 கிமீ/செ |
Proper motion (μ) | RA: –76.27 ± 0.54[1] மிஆசெ/ஆண்டு Dec.: 53.07 ± 0.69[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 12.59 ± 0.70[1] மிஆசெ |
தூரம் | 260 ± 10 ஒஆ (79 ± 4 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 3.65 ± 0.12[2] |
விவரங்கள் | |
திணிவு | 1.345 ± 0.020[2] M☉ |
ஆரம் | 1.541 +0.046 −0.042[2] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.189 +0.020 −0.021[2] |
ஒளிர்வு | 3.03 +0.20 −0.18[2] L☉ |
வெப்பநிலை | 6147 ± 50[3] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 6.0 ± 0.5[3] கிமீ/செ |
அகவை | 2.6 +0.3 −0.2[2] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
NStED | data |
Extrasolar Planets Encyclopaedia | data |
எச்டி 149026 (HD 149026) என்பது ஒரு மஞ்சள் குறுமீன் (subgiant star) ஆகும். இது தோரயமாக 257 ஒளியாண்டுகள் தூரத்தில் ஹெர்குலஸ் என்ற விண்மீன் குழாமத்தில் உள்ளது[1]. இது சூரியனைவிட திணிவு அல்லது நிறை அதிகமாகவும், பெரியதாகவும், பிரகாசமாகவும் உள்ளது. எச்டி 149026 பி என்ற புறக்கோள் இந்த வீண்மீனைச் சுற்றி வருவதாக 2005 ல் உறுதி செய்யப்பட்டது.
விண்மீன்
[தொகு]இது சூரியனைவிட திணிவு அல்லது நிறை அதிகமாகவும், பெரியதாகவும் மற்றும் பிரகாசமாகவும் உள்ளது. இதன் நிறை அதிகம் என்பதால் இதன் சில பகுதிகளின் விடுபடு திசைவேகம் அதிகமாக இருக்கும். எனவே அந்தப் பகுதிகள் நிலைத் தன்மை இல்லததாக அமைந்துள்ளது. மேலும் இது இளமையான விண்மீனாக (2.0 பில்லியன் ஆண்டுகள் முன்பு தோன்றியது) கருதப்படுகிறது. ஆனால் இது நல்ல விண்மீன் படிமலர்ச்சி பெற்றுள்ளதாக கருதுகிறார்கள். இந்த விண்மீனின் கருவத்தில் ஏற்படும் ஹைட்ரஜன் அணுக்களின் அணுக்கரு இணைவினால் உன்டாகும் வெப்பம் விண்மீனின் மேற்பரப்பு வரை வந்தடைகிறது. மேலும் இவை சிவப்பு அரக்கன் என்ற விண்மீன் நிலையை நோக்கி படிமலர்ச்சி அடைந்துக் கொண்டிருக்கிறது. எச்டி 149026 தோரயமாக 257 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. எனவே இதை வெறும் கண்களால் பார்க்க இயலாது. ஆனால் இருகண் நோக்கி மற்றும் தொலைநோக்கி மூலம் காணமுடியும்.
இந்த விண்மீன் சூரியனைப் போல இரண்டு மடங்கு செறிவூட்டப்பட்ட ஹைட்ரஜன் மற்றும் ஈலியம் தனிமங்களை அதிக அளவில் கொண்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த விண்மீன் அதிக பிரகாசத்துடன் காணப்படுகிறது. என்2கே கூட்டமைப்பின் ஒரு குழு இந்தக் விண்மீனைப் பற்றிய முழு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. [4]
கோள் தொகுதி
[தொகு]2005 ஆம் ஆண்டு எச்டி 149026 பி (HD 149026 b) என்ற ஒரு புறக்கோள் இந்த விண்மீனை சுற்றி வருவாதாக கண்டறிந்தனர்[3]. அதன் வெப்பநிலை 2040°C ஆகும். தன்மேல் விழும் அனைத்து விண்மீன்களின் ஒளியையும் (வெப்பத்தையும்) இந்த கோள் கிரகித்துக் கொள்வதால் இது இந்த அளவு அதிக வெப்பநிலையில் உள்ளது என கணித்துள்ளனர். [5]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
பி | 0.36 ± 0.03 MJ | 0.042 | 2.8766 ± 0.001 | 0 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/articles/aa/full/2007/41/aa8357-07/aa8357-07.html.Vizier catalog entry
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Carter, Joshua A. et al. (2009). "Near-Infrared Transit Photometry of the Exoplanet HD 149026b". The Astrophysical Journal 696 (1): 241–253. doi:10.1088/0004-637X/696/1/241. Bibcode: 2009ApJ...696..241C. http://iopscience.iop.org/0004-637X/696/1/241/fulltext/.
- ↑ 3.0 3.1 3.2 Sato, Bun'ei et al. (2005). "The N2K Consortium. II. A Transiting Hot Saturn around HD 149026 with a Large Dense Core". The Astrophysical Journal 633 (1): 465–473. doi:10.1086/449306. Bibcode: 2005ApJ...633..465S. http://iopscience.iop.org/0004-637X/633/1/465/fulltext/.
- ↑ S.-L. Li, D. N. C. Lin, and X.-W. Liu (2008). "Extent of pollution in planet-bearing stars". The Astrophysical Journal 685 (2): 1210–1219. doi:10.1086/591122. Bibcode: 2008ApJ...685.1210L.
- ↑ Imaginova, Sizzling Hot Planet Makes Some Stars Look Cool (5/9/07).