விடுபடு திசைவேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விடுபடு திசைவேகம் (escape velocity) எனப்படுவது ஒரு பொருளானது கோளின் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டுச் செல்வதற்குக் கோளின் பரப்பில் அப்பொருளுக்கு அளிக்கப்படவேண்டிய மேல் நோக்கிய சிறுமத் திசைவேகம் ஆகும்.

விடுபடு திசைவேகத்தைக் கணித்தல்[தொகு]

m திணிவுள்ள ஒரு பொருள் v_e திசைவேகத்துடன் மேல்நோக்கி எறியப்படும் போது, அதன் இயக்க ஆற்றல் குறைந்து செல்ல, மாறாக அதன் நிலை ஆற்றல் அதிகரிக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதன் நிலை ஆற்றல் தொடக்க இயக்க ஆற்றலுக்குச் சமனாகும் போது பொருள் கண நேரம் நின்று, கீழ்நோக்கி வர ஆரம்பிக்கும். எனவே, பொருள் புவியின் கவர்ச்சியைத் தாண்டிச் செல்ல வேண்டுமானால், அதன் மீது அவ்வெல்லையிலுள்ள நிலை ஆற்றலுக்குச் சமமான இயக்க ஆற்றலைத் தரவேண்டும்.

 \begin{matrix}\frac12\end{matrix} mv_e^2=\frac{GMm}{r}
v_e = \sqrt{\frac{2GM}{r}}

இங்கு

G, ஈர்ப்பு மாறிலி (gravitational constant),

M, பொருள் எந்தக் கோளிலிருந்து எறியப்படுகிறதோ அதன் திணிவு,

m, எறியப்படும் பொருளின் திணிவு,

r, கோளின் மையத்திற்கும் விடுபடு திசைவேகம் கணிக்கப்படும் புள்ளிக்கும் இடைப்பட்ட உயரம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுபடு_திசைவேகம்&oldid=1997066" இருந்து மீள்விக்கப்பட்டது