உயிரியல் வரலாறு

உயிரியல் வரலாறு (History of biology) என்பது உயிர்வாழ் அங்கிகளின் உலகம் பற்றி பண்டைய காலம் முதல் தற்காலம் வரை அடையாளம் காணுதல் ஆகும். உயிரியல் எனும் எண்ணக்கரு ஒரு ஒத்திசைவான துறையாக 19ஆம் நூற்றண்டில் எழுந்தாலும், உயிர் அறிவியல் மருத்துவத் துறையின் தொடக்கத்துடனும் இயற்கை வரலாறு ஆயுர்வேதம் மற்றும் எகிப்திய மருத்துவத்துடனும், பண்டைய கிரேக்க உரோமானிய உலகத்துடன் தொடர்புபட்ட அரிஸ்டோட்டில், கலென் ஆகியோருடனும் தொடக்கமுற்றது. இந்த பண்டைய மரபு மத்திய காலத்தில் இசுலாமிய மருத்துவத்துடனும் இப்னு சீனா முதலானோராலும் விருத்தி செய்யப்பட்டது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்திலும் அடுத்து வந்த நவீன காலத்தின் தொடக்கத்திலும் உயிரியல் பற்றிய சிந்தனைகளும் மறுமலர்ச்சி பெற்று புதிய பல அங்கிகளின் கண்டுபிடிப்புக்கு வித்திட்டது. இந்த இயக்கத்தின் முன்னணியில் உடற்றொழிலியலில் பரிசோதனைகள் மற்றும் அவதானங்களை மேற்கொண்டவர்களான ஆண்ட்ரியசு வெசாலியசு மற்றும் வில்லியம் ஹார்வி ஆகியோரும், இயற்கையியலாளர்களான கரோலஸ் லின்னேயஸ் மற்றும் லூயீஸ் வஃபன் என்பவர்கள் உயிரியல் வகைப்பாடு மற்றும் தொல்லுயிர் எச்சம் ஆகியவற்றைத் தொடங்கியமைக்கும் அதே போல் அங்கிகளின் நடத்தைகள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்குமாக உள்ளனர். நுண்ணங்கிகளின் உலகத்தை தெரிந்து கொள்ளக் காரணாமாயிருந்த கண்டுபிடிப்பான நுணுக்குக் காட்டியைக் கண்டுபிடித்தவர் ஆன்டன் வான் லீவன்ஹூக் இவரது கண்டுபிடிப்பு கலத் தேற்றங்களுக்கு அடித்தளமாகியது.
18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளின் பின் தாவரவியல், விலங்கியல் ஆகியன முக்கிய தொழில்சார் பாடப்பிரிவுகளாக வந்தன. லாவோசியர் மற்றும் ஏனைய பௌதீக அறிவியலாளர்கள் உயிருள்ள , உயிரற்ற உலகத்தை வேதியியல் மற்றும் இயற்பியல் ஊடாக இணைத்தனர். இயற்கை ஆய்வாளரான அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் உயிரங்கிகளுக்கும் சூழலுக்குமான இடைத்தாக்கங்களை ஆராய்ந்தார். இத்தொடர்புகள் மூலம் புவியியல் அடிப்படையாய் அமைகின்ற உயிர்ப் புவியியல், சூழலியல், விலங்கின நடத்தையியல் முதலிய துறைகள் விருத்தி பெற்றன.
பண்டைய மற்றும் இடைக்கால அறிவு
[தொகு]ஆரம்ப பண்பாடு
[தொகு]ஆரம்பகால மனிதன் தமது தப்பிவாழ்தலை அதிகரிக்கும் வகையில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய அறிவினைப் பரப்பினான். இதில் விலங்குகள், மனிதன் பற்றிய உடற்கூற்றியல் அவற்றின் நடத்தைக் கோலங்கள், புலம்பெயர்வு பற்றிய அறிவுகளும் உள்ளடங்கியிருந்தது. எவ்வாறாயினும் முதலாவது உயிரியல் பற்றிய முதன்மையான அறிவு 10,000 ஆண்டுகளுக்கு முன் புதியகற்காலத்தில் ஏற்பட்டது. மனிதன் முதலில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். பின்னர் விலங்கு வளர்ப்பில் ஈடுபட்டான். இது அவனை நிலையான குடியிருப்பு சமூகமாக ஆக்கியது.[1]
பண்டைய கலாசாரங்களான மெசப்பதேமியா, எகிப்து, இந்தியா, மற்றும் சீன வரலாறுகளில் சுஸ்ருதர், சாங் ஷொங்ஜிங் முதலான சுதந்திரமான இயற்கை மெய்யியலினை பிரதிநிதித்துவப் படுத்தும் இயற்கை அறிவியலின் நிபுணர்கள் உருவாகினர். இருப்பினும், புதிய உயிரியலின் வேர் என்பது மதச்சார்பற்ற மரபான பண்டைய கிரேக்க மெய்யியலில் உருவானது.[2]
பண்டைய மெசொப்பொத்தேமியா
[தொகு]
கடவுள் எவ்வாறு இந்த உலகத்தை ஒழுங்குபடுத்தினார் என்பது முதலான இயற்கை உலகு பற்றிய தேடல்கள் மெசெப்பத்தேமியகளிடம் காணப்பட்டது. வருவது கூறல் நோக்குக்காக விலங்கு உடற்றொழிலியல் பற்றி குறிப்பாக உடற்குறிகூறலில் முக்கியத்துவமுடைய ஈரலின் உடற்கூற்றியல் பற்றி கற்றனர். விலங்கு நடத்தைகளையும் குறிசொல்லல் நோக்குக்காக கற்றனர். விலங்குகளை வீட்டு வளர்ப்புக்காக பயிற்றுவித்தல் குறித்த வாய்மூல அறிவும், குதிரைகளை கையாளல் குறித்த எழுத்துமூல அறிவுகளும் காணப்பட்டன.[3]
பண்டைய மெசொப்பத்தேமியர்களுக்கு முறையான அறிவியலுக்கும் மந்திரத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியவில்லை.[4][5][6] ஒருவர் நோய்வாய்ப்பட்டால் வைத்தியர்கள் மந்திர உச்சாடனத்தையும் மருந்தையும் ஒருங்கே பிரயோகித்தனர்.[4][5][6] ஆரம்பகால மருத்துவ குறிப்புகள் மூன்றாவது ஊர் வம்ச காலம் வரை சுமேரிய மொழியிலேயே காணப்பட்டது. (அண். 2112 – அண். 2004 BCE).[7]
பண்டைய சீன மரபுகள்
[தொகு]பண்டைய சீனாவில் உயிரியல் விடயங்கள் சீன மூலிகை மருத்துவம், உடற்கூற்று மருத்துவம், இரசவாதம், சீன மெய்யியல் என பல்வேறு கற்கைப் பிரிவுகளில் பரப்பப்பட்டன. சீன இரசவாதத்தின் தாவோயியம் மரபு சுகாதாரம் குறித்து முன்னுரிமைப்படுத்துவதால் இது உயிர் அறிவியலாக கொள்ளப்படும். இதன் இறுதி இலக்கு முழுநோய்க்குமான மருத்துவம். வகைப்பாடான சீன மருத்துவம் யின் யாங்கு தத்துவத்திலிருந்தும், வூசிங் தத்துவத்திலிருந்தும் உருவாகியது.[8] சுவாங்சீ முதலான தாவோயிய மெய்யியலாளர் பொ.ஊ.மு 4ஆம் நூற்றாண்டில் அந்தந்த வடிவில் உயிர் அங்கிகள் உருவாக்கப்பட்டது என்பதை மறுக்கும் கூர்ப்பு பற்றிய எண்ணங்களை முன்வைத்தனர்.[9]
பண்டைய இந்திய மரபுகள்
[தொகு]ஆயுர்வேதம் இந்திய துணைக் கண்டத்தில் தோன்றய ஒழுங்கமைக்கப்பட்ட மிகப்பழைய மருத்துவ முறை ஆகும். இது பொ.ஊ.மு 1500களில் இந்திய அறிவு, ஞானம், பண்பாடு குறித்து விளக்கும் பண்டைய நூல்களான நால் வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்திலிருந்து தோற்றம் பெற்றது.
பண்டைய எகிப்திய மரபு
[தொகு]ஒரு டசினுக்கும் அதிகமான மருத்துவ ஏடுகள் காணப்படுகின்றன.குறிப்பாக இதுவரை உள்ளவற்றில் மிக்ப் பழமையான சத்திர சிகிச்சை ஏடாக கருதப்படுகின்ற எட்வின் ஸ்மித் ஏடுகள் மற்றும் பல்வேறு நோய்களுக்கான மருந்து சரக்காய்வு நூலான எபெர்ஸ் ஏடுகள் என்பன பொ.ஊ.மு 16ஆம் நூற்றாண்டுக்குரியன.
பண்டைய எகிப்து பிணச்சீரமைப்பு செய்வதிலும் இறந்த மனித உடலங்களை மம்மியாக்கம் செய்து சிதைவடைவதிலிருந்து பாதுகாப்பதிலும் நன்கறியப்பட்டது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Magner, A History of the Life Sciences, pp 2–3
- ↑ Magner, A History of the Life Sciences, pp 3–9
- ↑ McIntosh, Jane R. (2005). Ancient Mesopotamia: New Perspectives. Santa Barbara, California, Denver, Colorado, and Oxford, England: ABC-CLIO. pp. 273–276. ISBN 978-1-57607-966-9.
{{cite book}}: Invalid|ref=harv(help) - ↑ 4.0 4.1 Farber, Walter (1995). Witchcraft, Magic, and Divination in Ancient Mesopotamia. Vol. 3. New York City, New York: Charles Schribner’s Sons, MacMillan Library Reference USA, Simon & Schuster MacMillan. pp. 1891–1908. ISBN 9780684192796. Retrieved 12 May 2018.
{{cite book}}:|journal=ignored (help); Invalid|ref=harv(help)CS1 maint: url-status (link) - ↑ 5.0 5.1 Abusch, Tzvi (2002). Mesopotamian Witchcraft: Towards a History and Understanding of Babylonian Witchcraft Beliefs and Literature. Leiden, The Netherlands: Brill. p. 56. ISBN 9789004123878.
- ↑ 6.0 6.1 Brown, Michael (1995). Israel's Divine Healer. Grand Rapids, Michigan: Zondervan. p. 42. ISBN 9780310200291.
- ↑ R D. Biggs (2005). "Medicine, Surgery, and Public Health in Ancient Mesopotamia". Journal of Assyrian Academic Studies 19 (1): 7–18.
- ↑ Magner, A History of the Life Sciences, p.4
- ↑ Needham, Joseph; Ronan, Colin Alistair (1995). The Shorter Science and Civilisation in China: An Abridgement of Joseph Needham's Original Text, Vol. 1. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 101. ISBN 978-0-521-29286-3.
- ↑ Magner, A History of the Life Sciences, p. 8