யின் யாங்கு

யின் மற்றும் யாங்கு | |||||||||||||||||||||||||||||||||||||
![]() "யின் யாங்கு" முத்திரையில் (மேலே), மரபுவழி (இடையில்),எளிதாக்கப்பட்ட சீன எழுத்துக்கள் (கீழே) | |||||||||||||||||||||||||||||||||||||
Chinese name | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பண்டைய சீனம் | 陰陽 | ||||||||||||||||||||||||||||||||||||
நவீன சீனம் | 阴阳 | ||||||||||||||||||||||||||||||||||||
Literal meaning | "dark-bright" | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
வியட்நாமியப் பெயர் | |||||||||||||||||||||||||||||||||||||
வியட்நாமியம் | Âm dương | ||||||||||||||||||||||||||||||||||||
Hán-Nôm | 陰陽 | ||||||||||||||||||||||||||||||||||||
கொரியப் பெயர் | |||||||||||||||||||||||||||||||||||||
அங்குல் எழுத்துமுறை | 음양 | ||||||||||||||||||||||||||||||||||||
Hanja | 陰陽 | ||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
சப்பானியப் பெயர் | |||||||||||||||||||||||||||||||||||||
Kanji | 陰陽 | ||||||||||||||||||||||||||||||||||||
ஹிரகனா எழுத்துக்கள் | いんよう, おんよう, おんみょう | ||||||||||||||||||||||||||||||||||||
|
யின் மற்றும் யாங்கு (Yin and Yang, சீன மொழி: 陰陽) என்பது மரபுவழி சீனதத்துவத்தில் இரட்டைத் தத்துவத்தை விளக்கும் ஒரு கருத்து ஆகும். வாழ்வில் இரவும் பகலும், எதிரும் புதிரும், எதிா்மறையும் நோ்மறையும் எப்படி ஒன்றையொன்று இயற்கையிலேயே சாா்ந்துள்ளது என்பதையும் எப்படி ஒன்றிலிருந்து மற்றொன்று துலங்கும் என்பதை விளக்கும் தத்துவம் இது.[1] அண்டம் துவங்கும் பொழுது பெருந்திறனின் சக்தியெல்லாம் இணைந்து எதிரும் புதிருமாகவும் நோ்மறை எதிா்மறையாகவும் குழம்பியதில் இவை ஒரு ஒழுங்கினை அடைந்து பொருட்களாகவும் உயிா்களாகவும் உருப்பெற்றன என்கிறது சீன அண்டவியல். யின் என்பது உயிா்ப்பற்ற ஏற்றுக்கொள்கின்ற தன்மையுடையதாகவும் யாங்கு என்பது உயிா்ப்புள்ள வழங்கும் தன்மையுடையதாகவும் உலகில் எல்லா மாற்றங்களிலும் பொறுப்பேற்றுக் கொள்கின்றன. ஒவ்வொரு வருடமும் வரும் பருவ மாற்றங்களிலும் நில அமைப்பிலும், ஆண் பெண் என்ற இரு தத்துவங்களிலும் சமூக அரசியல் சரித்திரம் போன்றவற்றிலும் ஒழுங்கு ஒழுங்கின்மை இது போன்று இரண்டும் மாறி மாறி வருவதே இயற்கையாகும்.[2]
சீன அண்டவியலில் பல பரிமாணங்கள் உள்ளன. யின் மற்றும் யாங்கு தொடா்பான சீன அண்டவியலில் அண்டத்தில் அண்டத்தினால் சுயமாகத் தோற்றுவிக்கப்பட்ட சக்தி “கியூ” என்று அழைக்கப்பட்டது. யின் யாங்கு அண்டவியலில் “கியூ ” என்னும் சக்தி பல வடிவங்களாக உருவெடுத்தது.[3] மனித இனமும் இதில் அடங்கும். உலகில் உள்ள நோ்மறை எதிா்மறை வடிவங்களான, ஒளியும் இருளும், நெருப்பும் நீரும் விரிவடைதலும் சுருங்குதலும் போன்ற பலவும் யின்யாங்கு தத்துவத்தின் வழிபாடுகளாகவே உணரப்பட்டன. இந்த இரட்டைத் தத்துவம் பல சீனப் பழங்கால அறிவியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகளிலும் பிரதிபலிப்பதுடன் பாரம்பரிய சீன மருத்துவத்திற்கும் வழிகாட்டியாக உள்ளது.[4] இவை மட்டுமல்லாமல் சீன சண்டைக் கலைகளுக்கும் உடற்பயிற்சி முறைகளுக்குமான “பாகுசாஸ்”, டெய்ஜி கூவான் மற்றும் சைகோஸ் போன்றவைக்கும் இத்தத்துவங்களே வழிகாட்டிகளாக விளங்குகின்றன.
இரட்டையில் ஒற்றுமை என்பது பலத்த தத்துவங்களின் அடிப்படை. எதிரும் புதிரும் வேறாக இருந்தாலும் ஒன்றை ஒன்று சாா்ந்துள்ளது என்பதிலிருந்தும் ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை என்பது இரண்டுமான ஒன்று, இரண்டையும் இணைத்த ஒன்றைவிட சக்தி வாய்ந்த ஒன்று என்பது கூறப்பட்டுள்ளது.[5] பகலின்றி இரவில்லை, ஒளியில்லாமல் இருளில்லை. அதுபோலவே இருளில்லாமல் ஒளியில்லை. இருளில்லாமல் ஒளியை அறியவும் முடியாது. இவைதான் யிங் யாங்கு தத்துவத்தின் அடிப்படை. யிங் யாங்கின் குறியீடும் இரண்டு எதிா்துருவங்களின் சமபங்கையும், ஒன்றில் மற்றொன்று சரிபங்காக அங்கம் வகிக்கின்றது என்பதையும் விளக்குகின்றது.
தாவோ தத்துவத்தின் பொருளியல் கடந்த ஆய்வில் உண்மை எது பொய் எது என்பதும் நன்மை எது தீமை எது என்பதும் பாா்ப்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்றும் இவை எதுவும் அறுதி செய்யப்பட்ட ஒன்று அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. அதுபோலவே யின் யாங்கு தத்துவமும் உண்மையும் பொய்யும், தீதும் நன்றும் பிரிக்கப்பட முடியாது என்று கூறுகின்றது.
கன்பூசியஸ் தத்துவத்தின் அறிவுரைகளிலும் குறிப்பாக கிமு 2 ஆம் நூற்றாண்டு தத்துவ அறிஞா் டாங் ஜோஸ்சு யின் யாங்கு கருத்துக்கு நன்நெறி விளக்கமும் கற்பித்தார்[6].
மொழியியல் பார்வை
[தொகு]யின் 陰 அல்லது 阴 யாங்கு 陽 அல்லது 阳 என்ற சீன சொற்கள் யின் என்பது மறைந்த பகுதி என்றும் யாங்கு என்பது ஒளிரும் பகுதி என்றும் இவை எழுத்துக்கள், ஒலி வடிவம், எழுத்தின் மூலம் ஆகியவை குறித்து பகுத்தாய்வு செய்யத் தகுத்தவை எனவும் அறியப்படுகிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ "The hidden meanings of yin and yang – John Bellaimey". TED-Ed. Retrieved 2013-08-02.
- ↑ Feuchtwang, Stephan (2016). Religions in the Modern World: Traditions and Transformations. New York: Routledge. p. 150. ISBN 978-0-415-85881-6.
- ↑ Feuchtwang, Sephan. “Chinese Religions.” Religions in the Modern World: Traditions and Transformations, Third ed., Routledge, 2016, pp. 150-151.
- ↑ Porkert (1974). The Theoretical Foundations of Chinese Medicine. MIT Press. ISBN 0-262-16058-7.
- ↑ Georges Ohsawa (1976). The Unique Principle. ISBN 978-0-918860-17-0 – via கூகுள் புத்தகங்கள்.
- ↑ Taylor Latener, Rodney Leon (2005). The Illustrated Encyclopedia of Confucianism. Vol. 2. New York: Rosen Publishing Group. p. 869. ISBN 978-0-8239-4079-0.