சீன மெய்யியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சீன மெய்யியல் சீன நாகரிகத்தில் தோன்றிய எடுத்தாளப்பட்ட மெய்யியல் சிந்தனைகளைக் குறிக்கின்றது. 3000 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான சீன மொழியில் எழுதப்பட்ட சிந்தனைகளைச் சீன மெய்யியல் கொண்டிருக்கின்றது. சீன மெய்யியல் இந்திய, இசுலாமிய, மேற்குலக, ஆபிரிக்க மெய்யியல்களில் இருந்து பல முக்கிய வழிகளில் வேறுபடுகிறது.

சீன மெய்யியல் இயற்கையை சார்ந்தது, காரியத்தையும் நிர்வாகத்தையும் முக்கியப்படுத்துவது. இந்திய மெய்யியல் போலன்றி அது சமயத்தை அல்லது கடவுள்களை முதன்மைப்படுத்தவில்லை. வாழ்க்கை சுழற்சியில் இருந்து விடுதலை பெறுவதை விடுத்து ஒத்துளைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தை இவ்வுலகில் உருவாக்குவத்தே சீன மெய்யியலின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. திறமான நிர்வாகம் மூலம் ஒழுக்கத்தையும் (order) ஒத்துளைவுள்ள வளம்மிக்க சமுதாயத்தையும் உருவாக்க சீன மெய்யியல் விளைகிறது. அரசின் நிர்வாகத்தில் போரும் ஒரு நிகழ்வாக இருந்ததால், போரியலும் சீன மெய்யிலின் ஒரு முக்கிய அங்கம்.

அக்கறைகள்[தொகு]

 • உலகுக்கும் மனிதனுக்குமான உறவு
 • மனிதன், அரசு, சமூகம்
 • சமூகத்தில் மனிதன்
 • மனித இயல்பு
 • தன்னைப் பண்படுத்தல் (Self - Cultivation)
 • குடும்ப உறவுகள், சமூக உறவுகள், மூன்னோர்
 • சமூக இணக்கம் (Social harmony), ஒழுங்கமைப்பு, அரசாட்சி, போர்
 • இயற்கையோடு இணைந்து வாழ்தல் (டாவோ)
 • அண்டவியலின் கட்டமைப்பு, தோற்றம்

வரலாறு[தொகு]

சீன மெய்யியலை நான்கு காலங்களாக பிரிப்பர்:[1]

 • தொன்ம காலம் (கிமு 1000 - கிபி 588)
 • இடைக்காலம் (589 - 959)
 • மறுமலர்ச்சிக் காலம் (960 - 1900)
 • தற்காலம் (1901 - )

தொன்ம காலத்தில் கன்பூசியம், டாவோயிசம், மோகிசம், சட்டவியல் போன்ற சீன மெய்யியல்கள் உருவான காலம் ஆகும். இடைக் காலத்தில் இந்தியாவில் இருந்து பெளத்த சமய மெய்யியல் சீனாவுக்கு வருகிறது. பெளத்தம், டாவோயிசம் மிகுந்த செல்வாக்கப் பெறுகின்றன. மறுமலர்ச்சிக் காலத்தில் மீண்டும் கன்பூசியத் மெய்யியல் முதன்மை பெறுகிறது. கன்பூசிய மெய்யியலில் பெளத்த டாவோயிச தாக்கம் இருக்கிறது. அதை எதிர்த்து கூடிய உலகவாத கான்பூசிய சிந்தனைப் பள்ளிகளும் எழுகின்றன. 19 ம் நூற்றாண்டு சீனாவில் மேற்குலக அரசியல் அறிவியல் தாக்கம் அதிகம் ஆகிறது.

முக்கிய சிந்தனைப் பிரிவுகள்[தொகு]

 • யாங் சூ - (அறவழி தன்முனைப்புவாதம்)
 • Han Confucianism
 • Huang-Lao
 • Sengzhao
 • Tao Sheng
 • Chinese Chán
 • Fan Zhen - Shén Miè Lùn (ஆத்மாவின் முற்றழிவு பற்றி)

மெய்யியலாளர்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Modern Chinese Philosophy

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_மெய்யியல்&oldid=2226617" இருந்து மீள்விக்கப்பட்டது