உயிரிதொழில்நுட்பவியல் துறை (இந்திய அரசு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரிதொழில்நுட்பவியல் துறை
சுருக்கம்DBT
உருவாக்கம்1986
வகைஇந்திய அரசு துறை
தலைமையகம்புது தில்லி
சேவை பகுதி
இந்தியா
செயலர்
முனைவர் ரேணு சுவரூப்பு
சார்புகள்இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
வலைத்தளம்http://dbtindia.gov.in/

உயிரிதொழில்நுட்பவியல் துறை (Department of Biotechnology) என்பது இந்திய அரசுத் துறையாகும். இது இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ், இந்தியாவில் நவீன உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலில் வளர்ச்சி மற்றும் வணிகமயமாக்கலை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. இத்துறை 1986இல் அமைக்கப்பட்டது. [1]

தலைமைத்துவம்[தொகு]

பெயர் பதவி துறை
டாக்டர் ஜிதேந்திர சிங் மத்திய அமைச்சர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
டாக்டர் ரேணு சுவரூப்பு செயலாளர் உயிரிதொழில்நுட்பத் துறை
அபிநவ் குப்தா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரின் தனிச் செயலர் அமைச்சர் அலுவலகம்

நிறுவனங்கள்[தொகு]

தன்னாட்சி நிறுவனங்கள்

புதிய நிறுவனங்கள்

  • தேசிய நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் மதிப்பீட்டு மையம் [2]
பொதுத்துறை நிறுவனங்கள்

தேசிய உயிரி தொழில்நுட்ப மேம்பாட்டு உத்தி[தொகு]

திசம்பர் 2015இல், உயிரித்தொழில்நுட்பத் துறை தேசிய உயிர்தொழில்நுட்ப மேம்பாட்டு வியூகம் 2015–2020 திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தடுப்பூசிகள், மனித மரபணு தொகுப்பு, தொற்று மற்றும் நாட்பட்ட நோய்கள், பயிர் அறிவியல், விலங்கு வேளாண்மை மற்றும் நீர்வுயிரி வளர்ப்பு, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் தூய்மையான ஆற்றலுக்கான தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். உயிர்தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப களங்களில் பங்குதாரர்கள் மூலமாக இந்த நோக்கம் புதிய தயாரிப்புகளை உருவாக்கக் குறிப்பிடத்தக்க முதலீடுகளுடன் செயல்படுத்தப்படுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு வலுவான உள்கட்டமைப்பை உருவாக்குதல், வணிகமயமாக்கல் மற்றும் மனித வளங்களை விஞ்ஞான ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்படுத்தல் இதன் நோக்கமாகும்.[5]

மேலும் காண்க[தொகு]

  • மகாராஜ் கிஷன் பன்

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "DBT - Department of Biotechnology". Dbtindia.nic.in. Archived from the original on 2015-12-15. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
  2. "Department of Biotechnology supported GCLP Facility for Viral Immunogenicity Testing now open for operations". pib.gov.in. Ministry of Science & Technology. 5 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-06-05.
  3. "Biotechnology Industry Research Assistance Council (BIRAC) - India". ECHOcommunity (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
  4. "Website of Biotechnology Industry Research Assistance Council | National Portal of India". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-03-28.
  5. "Govt launches national biotechnology programme". The Hindu. 30 December 2015. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.