ரேணு சுவரூப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேணு சுவரூப்பு
செயலர், உயிர்தொழில்நுட்பவியல் துறை இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
ஏப்ரல் 10, 2018
முன்னையவர்அசுதோடு சர்மா
தலைவர், உயிர்தொழில்நுட்பவியல் தொழில ஆராய்ச்சி உதவி குழுமம்
முன்னையவர்கே. விஜய்ராகவன்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்

ரேணு சுவரூப்பு (Renu Swarup) என்பவர் இந்திய அரசுச் செயலாளராக உள்ளார். இவர் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிர்தொழில்நுட்பவியல் (டிபிடி) தலைவராக உள்ளார்.[1] [2] இந்தியாவின் உயிர்தொழில்நுட்பவியல் திட்டத்தினையும் செயல்பாட்டினையும் முன்னெடுப்பதில் இவர் தீவிரமாகப் பங்களித்துள்ளார்.[3][4] இந்தியாவின் மிகப்பெரிய நுண்ணுயிர் வள மையமான நுண்ணுயிரி வளர்ப்பு சேகரிப்பை நிறுவிய பெருமைக்குரியவர்.[5]

இந்தியாவில் நுண்ணுயிரி பன்முகத்தன்மை ஆராய்ச்சிக்கு இவரின் பங்களிப்பு முக்கியமானது. உயிரியல் பல்வகைமை சட்டம், 2002இன் விதிகளை எளிதாக்கியதற்காகப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிரிச் சிற்றினத்திற்கு நாட்ரியால்பா சுவரூபியா என இவரது நினைவாகத் தேசிய உயிரணு அறிவியல் மையத்தால் சிற்றினப் பெயரிடப்பட்டது.[6][5]

தனது தற்போதைய பணியுடன், கூடுதலாக உயிரிதொழில்நுட்ப தொழிலக ஆராய்ச்சி உதவி குழுமத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுத்துறை நிறுவனமான செயல்படும் இந்நிறுவனம் உயிரிதொழில்நுட்ப துறையில் தொழில் வாய்ப்புகள், தொடக்கநிலை வணிகம், சிறு-குறு தொழில் தொடங்க உதவுகிறது.[7][8]

கல்வி[தொகு]

சுவரூப்பு மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம் துறையில் முனைவர் பட்டத்தினை பெற்றபின் இங்கிலாந்தின் நார்விச்சில் உள்ள ஜான் இன்னெஸ் மையத்தில் பேராசிரியர் ராய் டேவிசின் ஆய்வகத்தில் பொதுநலவாய உதவித்தொகையுடன் தனது முனைவர் பட்ட பிந்தைய முனைவர் ஆராய்ச்சியினை செய்தார். 1989 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பி பின், உயிரி தொழில்நுட்பத் துறையில் அறிவியல் மேலாளராகப் பொறுப்பேற்றார்.[1] [5]

பணி[தொகு]

ரேணு சுவரூப்பு கிட்டத்தட்ட 29 ஆண்டுகளாக உயிரிதொழில்நுட்ப துறையில் பணியாற்றியுள்ளார். ஏப்ரல் 10, 2018 அன்று இந்திய அரசாங்கத்தின் செயலாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு இத்துறையின் மூத்த ஆலோசகராகவும் அறிவியலாளராகவும் இருந்தார்.[9]

உயிர்தொழில்நுடபத் துறையில், சுவரூப்பு, உயிர் வள மேம்பாடு மற்றும் பயன்பாடு பற்றிய தேசிய திட்டங்களை மேற்பார்வையிட்டார்.[10][11] பல்லுயிரியலின் இடஞ்சார்ந்த தன்மை, இரண்டாம் தலைமுறை பயோஎத்தனால் மற்றும் நுண்ணுயிரிகளிலிருந்து மருந்துகள் [12] [13] மற்றும் தேசிய உயிர்மருந்து செயல்இலக்கும் இதில் அடங்கும்.[14]

2001ஆம் ஆண்டில் உயிர்தொழில் நுட்ப தொலைநோக்கு, 2007இல் தேசிய உயிர்தொழில் நுட்ப மேம்பாட்டு செயல்திட்டம்-1 மற்றும் 2, 2015–20இல் நிபுணர் குழுவின் உறுப்பினர் செயலாளராக சுவரூப்பு முக்கிய பங்கு வகித்துள்ளார்.[15][9]

சுவரூப்பு இந்தியாவின் தேசிய அறிவியல் கழகத்தின் (நாசி) உறுப்பினராகவும், வேளாண் அறிவியல் முன்னேற்றத்திற்கான அறக்கட்டளையின் (TAAS) வாழ்நாள் உறுப்பினராகவும் உள்ளார்.[16][17] இந்தியாவின் ஆந்திராவில் உள்ள ஸ்ரீசத்ய சாய் உயர் கற்றல் நிகர்நிலை பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.[18]

சுவரூப்புபெண் விஞ்ஞானிகளின் ஆதரவாளராக இருந்து வருகிறார். இவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பெண்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இவர் மகளிர் விஞ்ஞானிகளுக்கான உயிரிதொழில்நுட்ப தொழில் முன்னேற்றம் (பயோகேர்) என்ற டிபிடி திட்டத்தைத் தொடங்கினார்.[19][9] பிரதமருக்கு அறிவியல் ஆலோசனைக் குழுவால் அமைக்கப்பட்ட விஞ்ஞானத்தில் பெண்கள் தொடர்பான பணிக்குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.[20][3] இவர் வளரும் உலகத்திற்கான அறிவியல் பெண்கள் அமைப்பில் உறுப்பினராக உள்ளார். [21]

இவரது தலைமையின் கீழ், இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதில் உயிரிதொழில்நுட்ப துறை முக்கிய பங்கு வகிக்கிறது.[22][23]

விருதுகள் மற்றும் மரியாதைகள்[தொகு]

  • பயோஸ்பெக்ட்ரம்-ஆண்டின் சிறந்த நபர் விருது (2012) [24]
  • தேசிய தொழில்முனைவோர் விருது (2017) [25]
  • TiE Delhi-NCR WomENABLER விருது (2018) [26]
  • டாக்டர் பி. ஷீல் நினைவு சொற்பொழிவு விருது நாசி (2018) [27]
  • அறிவியல் இராஜதந்திரத்தில் டிடபிள்யுஏஎஸ் பிராந்திய பரிசு (2018) [28]
  • தேசிய அறிவியல் கழகம் இந்தியா சக உறுப்பினர் (2018)[16]
  • வேளாண் ஆராய்ச்சி தலைமைத்துவ விருது (2019) [29]
  • BW இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண் (2019) [30] [2]
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிர் சிற்றினமான நாட்ரியால்பா சுவரூபியா, இவரது நினைவாக (2020) பெயரிடப்பட்டது.[6][5][31] [32]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Dr. Renu Swarup | Department of Biotechnology". www.dbtindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  2. 2.0 2.1 Bureau, BW Online. "BW Most Influential Woman Of India: Renu Swarup, Secretary, Department of Biotechnology". BW Businessworld (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  3. 3.0 3.1 "Women Achievers- DR RENU SWARUP". www.biospectrumindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  4. www.ETHealthworld.com. "Biotechnology in India: Moving towards a USD $ 100 billion Indian bio-economy - ET HealthWorld". ETHealthworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  5. 5.0 5.1 5.2 5.3 "Resilient microbe named after our alumna Dr Renu Swarup". John Innes Centre (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  6. 6.0 6.1 Padmanabhan, Sunderarajan. "NCCS scientists find new microbial species, name it after DBT Secretary". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  7. "10 Leaders, 10 Questions: Renu Swarup". IndiaBioscience. 2019-07-18. பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  8. "Renu Swaroop appointed Secretary- Biotechnology Department | Indian Bureaucracy is an Exclusive News Portal" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-04-10. பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  9. 9.0 9.1 9.2 "Dr. Renu Swarup appointed as Secretary, Department of Biotechnology". Research Matters (in ஆங்கிலம்). 2018-04-10. பார்க்கப்பட்ட நாள் 2020-07-18.
  10. "Vigyan se Vikas- BIRAC Celebrates 7th Foundation Day by Nurturing Innovations to Empower India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  11. "IITH-incubated Startup develops 'Gamified Arm Rehabilitation Device' for stroke victims". www.biospectrumindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  12. "Feedback sought on India's first draft guidelines on nano-medicines". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-02-26. பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  13. "Dr Harsh Vardhan inaugurates new InStem facility". www.biospectrumindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  14. Pioneer, The. "Integrating innovation with national development". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-06.
  15. India, Renu Swarup | Managing Director-Biotechnology Biotechnology Industry Research Assistance Council| (2017-09-18). "Renu Swarup | BioPharma India". BioPharma India 2017 (in ஆங்கிலம்). Archived from the original on 2020-07-18. பார்க்கப்பட்ட நாள் 2020-07-18.
  16. 16.0 16.1 The National Academy of Sciences (2018). ""The National Academy of Sciences, India Fellows Elected for the year 2018"" (PDF).
  17. "TAAS". www.taas.in. பார்க்கப்பட்ட நாள் 2020-07-18.
  18. "SSSIHL | About SSSIHL | University Structure". www.sssihl.edu.in. Archived from the original on 2020-07-07. பார்க்கப்பட்ட நாள் 2020-07-17.
  19. "Renu Swarup on ICGEB and the Women in Science Programme". ICGEB (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-01-10. பார்க்கப்பட்ட நாள் 2020-07-18.
  20. "Report of National taskforce of Women in Science" (PDF). 2004.
  21. "Swarup Renu | OWSD". owsd.net. பார்க்கப்பட்ட நாள் 2020-07-17.
  22. "'COVID has set example of how govt is looking at science, its role of facilitation'". The Indian Express (in ஆங்கிலம்). 2020-04-26. பார்க்கப்பட்ட நாள் 2020-07-18.
  23. "Science Monitor - Interview on COVID-19 with Dr. Renu Swarup, Secretary, DBT, GoI (E)". India Science. பார்க்கப்பட்ட நாள் 2020-07-18.
  24. "BioSpectrum Awards 2012". www.biospectrumindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  25. Official website, BIRAC (2017). "DR RENU SWARUP (SENIOR ADVISOR, DBT AND MD, BIRAC) RECEIVES NATIONAL ENTREPRENEURSHIP AWARD 2016-2017".
  26. "Global Newsletter - July 2018". TiE - Global Entrepreneurship Organization (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  27. "The National Academy of Sciences, India - Memorial Lecture Awards 2018". www.nasi.org.in. Archived from the original on 2019-09-17. பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  28. "TWAS Regional Awards". TWAS (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  29. Dansil, Prabeen (2019-07-11). "Agriculture Leadership Awards 2019 Announced |" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  30. "The Bold And The Influential". www.magzter.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  31. Padmanabhan, Sunderarajan. "NCCS scientists find new microbial species, name it after DBT Secretary". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  32. "Species: Natrialba swarupiae". lpsn.dsmz.de. பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணு_சுவரூப்பு&oldid=3569965" இலிருந்து மீள்விக்கப்பட்டது