தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனம், இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனம் (National Institute of Immunology) என்பது புது டில்லியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஆகும் [1][2]. உயிரியல் தொழிநுட்பத்துறையின் சார்பாக இங்கு நோயெதிர்ப்பு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுக்ஜின்றன [3].

தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனம் 1981 ஆம் ஆண்டு சூன் 24 ஆம் தேதி நிறுவப்பட்டது. பேராசிரியர் எம். கி. கே. மேனன் இந்நிறுவனத்தின் ஆட்சிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய மருத்துவ ஆய்வு மன்றம்-உலக சுகாதார அமைப்பின் தடுப்புத்திறனியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் தில்லியில் தோற்றம் பெற்று பின்னர் 1982 இல் தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனத்துடன் இனைக்கப்பட்டது. இருப்பினும் கௌரவ இயக்குநர் பேராசிரியர் கி.பி. தல்வார் தலைமையின் கீழ் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் ஆய்வகத்திலேயே செயல்பட்டு வந்தது. இதன் புதிய கட்டிடம் சவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டது [4]. கி.பி. தல்வார் இந்நிறுவனத்தின் நிறுவன இயக்குநர் ஆவார்.

லெப்ரோசின் இந்தியா முதல் வகை தடுப்பூசி NII ஆல் உருவாக்கப்பட்டது, இந்தியாவில் தொழுநோய்க்கான எதிர்ப்பு மருந்து முதன்முதலில் இந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. மைக்கோபாக்டீரியம் இண்டிகசு பிரானி என்ற பெயரில் இது அழைக்கப்பட்டது [5].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]