ஈ. பி. ஜெயராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இ.பி. ஜெயராஜன்
E.P Jayarajan
EP Jayarajan.jpg
தொழில் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
பதவியில்
25 மே 2016 - 14 அக்டோபர் 2016
முன்னவர் பி. கே. குஞ்ஞிலிக்குட்டி
பின்வந்தவர் பினராயி விஜயன்
மட்டனூர் சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2011
தனிநபர் தகவல்
பிறப்பு 28 மே 1950 (1950-05-28) (அகவை 70)
இந்தியா, சென்னை மாநிலம், இரிணாவ்
அரசியல் கட்சி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி. பி. கே. இந்திரா
பிள்ளைகள் ஜெய்சன், ஜித்தின்
பெற்றோர் பி. எம். கிருஷ்ணன் நம்பியார்
இ. பி. பார்வதி அம்மா
இருப்பிடம் பாப்பினிச்சேரி

இ.பி. ஜெயராஜன் என்பவர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் கேரளாவின் தொழில் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பினராயி விஜயன் அமைச்சரவையில் இருந்தார். இவர் கண்ணூர் மாவட்டம், மட்டனூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து கேரள சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆவார். இவர் மின்னணு பொறியியலில் பட்டயப்படிப்பு படித்தவர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முதல் அகில இந்தியத் தலைவர் ஆவார். மேலும் கட்சியில் இதழான தேசாபிமானி பத்திரிகையின் பொது மேலாளர் ஆவார். தற்போது இவர் கேரள கர்ஷாகா சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மையக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.

1991 முதல் 1996 மற்றும் 2011 வரை இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2016 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி, பினராயி விஜயன் தலைமையிலான புதிய அமைச்சரவையில் தொழில் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.[1] தனது குடும்ப உறுப்பினர்களை மாநிலத்தின் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவராக நியமித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் அமைச்சர் பதவியை ஜெயராஜன் ராஜினாமா செய்தார்.[2]

சர்ச்சை[தொகு]

2016 சூன் 4 அன்று, ஜெயராஜன் ஒரு தொலைக்காட்சி செய்தி அலைவரிசைக்கு செவ்வியளித்தபோது, அதில் அவர் மறைந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரரான முகமது அலிக்கு மரியாதை செலுத்தி, அவரை "கேரளாவின் பெருமை என்றும், ஒலிம்பிக்கில் மாநிலத்திற்கு தங்க பதக்கம் வென்றவர் " என்று கூறியது சமூக ஊடகங்களில் பிரபலமாக பரவியது.[3][4][5]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._பி._ஜெயராஜன்&oldid=2486421" இருந்து மீள்விக்கப்பட்டது