ஈசானன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈசானன்
அதிபதி
வகைசிவன், தேவன்

ஈசானன் (Ishana) ( சமசுகிருதம் : ईशान), ஒரு இந்துக் கடவுள். இவர் பெரும்பாலும் இந்து கடவுளான சிவனின் வடிவங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[2][3] மேலும் பதினொரு உருத்திரர்களில் அடிக்கடி வகைப்படுத்தப்படுகிறார். [3] இந்து சமயம், [4] [2] சில பௌத்தப் பள்ளிகள், [5] சைன மதத்தில் [6] இவர் வடகிழக்கு திசையின் திக்பாலகர்களில் ஒருவராக இருக்கிறார். வாஸ்து சாஸ்திரத்தில், ஒரு நிலத்தின் வடகிழக்கு மூலை "ஈசான மூலை" என்று குறிப்பிடப்படுகிறது. [7] ஈசானன் சம்கார பைரவருடன் குணங்களைப் பகிர்ந்து கொள்கிறார். எனவே அட்ட பைரவர்களின் ஒரு பகுதியாக இருக்கிறார்.

இந்து மதத்தில்[தொகு]

வேதங்களில்[தொகு]

யசுர்வேதத்தின் (கி.மு. 1200) தைத்திரிய ஆரண்யகத்தில் (TA 10.21.1) [8] காணப்படும் பஞ்சபிரம்ம மந்திரங்களில் ஈசானனைப் பற்றிய ஆரம்பக் குறிப்பு உள்ளது:

"பகவான் ஈசானன் - பரமாத்மா, ஈசுவரன் மற்றும் ஆன்மீகத் துறைகள் மூலம் சிறிய அறிவை வெளிப்படுத்துபவர். அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்பவர் மற்றும் கட்டுப்படுத்துபவர். வடகிழக்கு திசையை இயக்குபவர், வித்யேசுவரர்களின் (சிவன்) முக்கிய நேரடி அதிகாரத்தால் வழிநடத்தப்படுபவர். பிரம்மா, விஷ்ணு மற்றும் பிறரை இயக்குபவர் - வித்யேசுவரராக இருப்பவர் இந்த சிவலிங்கத்தில் காட்சியளிக்கட்டும். அத்தகைய தீங்கற்ற இருப்பின் மூலம், சிவனின் பூரண தூய்மையும் மங்களமும் ஏற்படட்டும். ஓம்"

சுக்ல யஜுர்வேதத்தின் (VS 27.35) வாஜஸ்நேயி மத்யந்தின சம்கிதையிலும் ஈசானன் குறிப்பிடப்பட்டுள்ளார். [9] இதை சிவபுராணம் "ஈசான மந்திரம்" என்று அழைக்கிறது. [10] இருப்பினும் சிவமகாபுராணம் அதே சம்கிதையில் இருந்து ஈசானனைப் பற்றியும் ஈசான மந்திரத்தையும் வேறுபட்ட வசனத்தைக் குறிப்பிடுகிறது. (VS 39.8) [11] [12]

புராணங்களில்[தொகு]

பல புராணங்கள் ஈசானனைக் குறிப்பிடுகின்றன; அவற்றில் சில இங்கே விரிவாக உள்ளன:

சிவபுராணம்[தொகு]

சிவபுராணத்தில், ஈசானன் சிவனின் ஒரு வடிவம் அல்லது அம்சமாக விவரிக்கப்பட்டுள்ளார்.[13][14] புத்திசாலிகளுக்கு ஈசான அறிவும் செல்வமும் அளிப்பதாகவும், அதே சமயம் தீயவர்களைக் கட்டுப்படுத்துவதாகவும் புராணம் கூறுகிறது.[15] ஈசானன் காது, பேச்சு, ஒலி மற்றும் அண்டம் ஆகியவற்றிற்கு தலைமை தாங்கும் சிவனின் வடிவமாகவும், "தனி ஆன்மா, பிரகிருதியை அனுபவிப்பவர்" என்றும் அறிவிக்கப்படுகிறது.[16]

இலிங்கங்களை பீடங்களில் பொருத்தும் போதும்,[10] உருத்ராட்ச மணிகளை தலையில் அணியும் போதும் [12] அல்லது (சிலருக்கு மட்டும்) திருநீறு பூசும் போது "ஈசான மந்திரம்" சொல்லப்பட வேண்டும் என்றும் புராணம் வலியுறுத்துகிறது.[17]

இலிங்க புராணம்[தொகு]

இலிங்க புராணத்தின் ஒரு வசனம் ஈசானனை "எல்லாவற்றுக்கும் எங்கும் நிறைந்த இறைவன்" என்று விவரிக்கிறது.[18] மற்றொரு வசனத்தில், ஈசான சிலையை செய்பவர் "விஷ்ணு லோகத்தில் மரியாதைக்குரியவர்" என்று கூறப்படுகிறது.[19] ஒரு வசனத்தில், அவர் ஒரு கோடாரியை வைத்திருப்பதாகக் கூறுகிறது.[20] மற்றொரு வசனத்தில், அவர் திரிசூலத்தை ஏந்தியவர் என்று விவரிக்கப்பட்டுள்ளது. [21] ஒவ்வொரு உயிரினத்திலும் பேச்சின் உறுப்பு என ஈசானன் விவரிக்கிறார். [22]

வீரபத்திரனால் தாக்கப்பட்ட தட்சனின் வேள்வியில் இருந்த தெய்வங்களில் ஈசானனையும் ஒருவராக புராணம் குறிப்பிடுகிறது.[23] அவர் சிவனுக்காக பார்வதியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டதாகவும் விவரிக்கப்படுகிறது.[24]

பிரம்மவைவர்த்த புராணம்[தொகு]

கிருட்டிணனின் இடது கண்ணில் இருந்து ஈசானன் பிறந்தார் என்று பிரம்மவைவர்த்த புராணம் கூறுகிறது. அவர் புலியின் தோலை அணிந்தவராகவும், தலையில் பிறையை கிரீடமாக அணிந்து கொண்டவராகவும், மூன்று கண்களை உடையவராகவும், திரிசூலம், வாள் மற்றும் சங்கை ஏந்தியவராகவும் விவரிக்கப்படுகிறார். மேலும், திக்பாலர்களின் தலைவராகவும் குறிப்பிடப்படுகிறார்.[25]

பஞ்சபிரம்மங்களில் ஒருவராக[தொகு]

பஞ்சபிரம்மங்கள் என்பது சிவனின் ஐந்து குறிப்பிட்ட அம்சங்களாகும். [26] இந்த அம்சங்களில் சத்யோஜாதர், வாமதேவர், பைரவர், தத்புருசர் மற்றும் ஈசானன் ஆகியோர் அடங்குவர். [26] இந்த அம்சங்கள் ஒவ்வொன்றும் தைத்திரீய ஆரண்யகத்தில் (TA 10.17-21) உள்ள பஞ்சபிரம்ம மந்திரத்தில் அவற்றின் சொந்த மந்திரத்தில் மகிமைப்படுத்தப்பட்டுள்ளன.

சிவனின் இந்த அம்சங்கள் பெரும்பாலும் ஐந்து முக லிங்கங்களில் சித்தரிக்கப்படுகின்றன. ஐந்து முக இலிங்கங்களின் ஒவ்வொரு முகமும் மந்திரங்களில் ஒன்றோடு தொடர்புடையது. சிவனின் குறிப்பிட்ட வெளிப்பாட்டைக் குறிக்கிறது.[27]

பஞ்சபிரம்மங்களில் ஒருவராக, ஈசானன் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து உலகங்களுக்கும் தன்னிச்சையான கருணையின் ஆதாரமாக இருக்கிறார்.[28]

வாஸ்து சாஸ்திரத்தில்[தொகு]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீடுகள் மற்றும் அலுவலகங்கள் வடகிழக்கில் அமைந்திருப்பது மங்களகரமானது. வடக்கு என்பது செல்வம் வசிக்கும் திசை, குபேரனுடன் தொடர்புடையது. கிழக்கு என்பது அறிவு இருக்கும் திசை. இந்திரனுடன் தொடர்புடையது. இந்த காரணத்திற்காக, ஈசானன் அறிவு மற்றும் செல்வம் ஆகிய இரண்டாலும் குறிப்பிடப்படுகிறார்.

உருவம்[தொகு]

ஈசானன், மூன்று கண்களை கொண்டவராகவும், அமைதியான தோற்றமுடையவராகவும், வெண்மை நிறமுடையவராகவும், வெள்ளை துணியையும் புலித்தோலையும் அணிந்தவராகவும் விவரிக்கப்படுகிறார்.[29] அவர் தனது தலையில், பிறை சந்திரனை மகுடமாகக் கொண்டிருப்பார். [29] அவர் ஒரு வெள்ளைக் காளையின் மீது அமர்ந்திருப்பார் அல்லது வெறுமனே பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார் என்றாலும் காளையின் மீது அமர்ந்திருப்பது விரும்பத்தக்கது.

சான்றுகள்[தொகு]

  1. Grimes 1996, ப. 142.
  2. 2.0 2.1 Gopinatha Rao, T. A. (1916). Elements Of Hindu Iconography, Vol. II Part II. பக். 537. http://archive.org/details/ElementsOfHinduIconographyVol.IIPartII. 
  3. 3.0 3.1 Apte, Vaman Shivram (1965). The Practical Sanskrit-English Dictionary. https://archive.org/details/practicalsanskri0000apte. 
  4. Gopinatha Rao, T. A.. Elements Of Hindu Iconography, Vol. II Part II. பக். 515. http://archive.org/details/ElementsOfHinduIconographyVol.IIPartII. 
  5. English, Elizabeth. Vajrayogini: Her Visualization, Rituals, and Forms. பக். 313, 142. https://books.google.com/books?id=PTcLAAAAYAAJ. 
  6. Bhattacharya, B. C.. The Jaina Iconography (1939). பக். 115. http://archive.org/details/in.ernet.dli.2015.507554. 
  7. Acharya, Prasanna Kumar. Architecture Of Manasara Vol.5. பக். 39. http://archive.org/details/in.ernet.dli.2015.31242. 
  8. Sarma, Subramania (November 2005). "Taittiriya Aranyaka Edited By Subramania Sarma" (PDF). SanskritWeb. Archived from the original (PDF) on 10 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 August 2021.
  9. "Samhita Patha 21-30 – Adhyaya – 27 | Vedic Heritage Portal". Vedic Heritage Portal. Archived from the original on 20 July 2020. பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.
  10. 10.0 10.1 Siva Purana - English Translation - Part 1 of 4. http://archive.org/details/SivaPuranaJ.L.ShastriPart1. 
  11. "Samhita Patha 31-40 – Adhyaya – 39 | Vedic Heritage Portal". Vedic Heritage Portal. Archived from the original on 12 July 2020. பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.
  12. 12.0 12.1 Siva Purana - English Translation - Part 1 of 4. http://archive.org/details/SivaPuranaJ.L.ShastriPart1. 
  13. J.L.Shastri (1950). Siva Purana - English Translation - Part 1 of 4. Motilal Banarsidass. பக். 110. http://archive.org/details/SivaPuranaJ.L.ShastriPart1. 
  14. Shastri, J.L. (1950). Siva Purana - English Translation - Part 1 of 4. Motilal Banarsidass. பக். 208. http://archive.org/details/SivaPuranaJ.L.ShastriPart1. 
  15. Shastri, J.L. (1950). Siva Purana - English Translation - Part 4 of 4. Motilal Banarsidass. பக். 1914. http://archive.org/details/SivaPuranaJ.L.ShastriPart4. 
  16. J.L., Shastri (1950). Siva Purana - English Translation - Part 4 of 4. Motilal Banarsidass. பக். 1917. http://archive.org/details/SivaPuranaJ.L.ShastriPart4. 
  17. J.L.Shastri (1950). Siva Purana - English Translation - Part 1 of 4. Motilal Banarsidass. பக். 157. http://archive.org/details/SivaPuranaJ.L.ShastriPart1. 
  18. Shastri, J.L. (1951). Linga Purana - English Translation - Part 1 of 2. Motilal Banarsidass. பக். 55. http://archive.org/details/LingaPuranaJ.L.ShastriPart1. 
  19. Shastri, J.L.. Linga Purana - English Translation - Part 1 of 2. பக். 374. http://archive.org/details/LingaPuranaJ.L.ShastriPart1. 
  20. Shastri, J.L. (1951). Linga Purana - English Translation - Part 1 of 2. Motilal Banarsidass. பக். 421. http://archive.org/details/LingaPuranaJ.L.ShastriPart1. 
  21. Shastri, J.L.. Linga Purana - English Translation - Part 2 of 2. பக். 564. http://archive.org/details/LingaPuranaJ.L.ShastriPart2. 
  22. J.L.Shastri. Linga Purana - English Translation - Part 2 of 2. பக். 652. http://archive.org/details/LingaPuranaJ.L.ShastriPart2. 
  23. Shastri. Linga Purana - English Translation - Part 2 of 2. மோதிலால் பனர்சிதாசு. பக். 556. http://archive.org/details/LingaPuranaJ.L.ShastriPart2. 
  24. J.L.Shastri. Linga Purana - English Translation - Part 2 of 2. மோதிலால் பனர்சிதாசு. பக். 563. http://archive.org/details/LingaPuranaJ.L.ShastriPart2. 
  25. Shanti Lal Nagar (2003-01-01). Brahma Vaivarta Purana - English Translation - All Four Kandas. Parimal Publications. பக். 21. http://archive.org/details/brahma-vaivarta-purana-all-four-kandas-english-translation. 
  26. 26.0 26.1 Gopinatha Rao, T. A. (1916). Elements Of Hindu Iconography, Vol. II Part II. பக். 375. http://archive.org/details/ElementsOfHinduIconographyVol.IIPartII. 
  27. Kramrisch, Stella (1981). The Presence of Shiva. Princeton University Press. பக். 179. https://archive.org/details/presenceofsivamy00skra. 
  28. "Five Powers of Siva : Sadasiva in the Agama Scriptures" (PDF). Hinduism Today. Kapaa, Hawaii: Himalayan Academy. July 2012. p. 46. Archived (PDF) from the original on 25 September 2017. பார்க்கப்பட்ட நாள் 10 August 2021.
  29. 29.0 29.1 Gopinatha Rao, T. A. (1916). Elements Of Hindu Iconography, Vol. II Part II. பக். 537–538. http://archive.org/details/ElementsOfHinduIconographyVol.IIPartII. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈசானன்&oldid=3582513" இலிருந்து மீள்விக்கப்பட்டது