தட்சனின் வேள்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதி தட்சனை எதிர்கொள்கிறாள்.

தட்சனின் வேள்வி (Daksha yajna) என்பது இந்து வரலாற்றில் [1] [2] ஒரு முக்கியமான நிகழ்வாகும்.[3] [4] இதைப்பற்றி பல்வேறு இந்து மத நூல்களில் கூறப்பட்டுள்ளது. இது தட்சனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு வேள்வியைக் (யாகம்) குறிக்கிறது.[5]

இதில் அவனது மகள் சதி தன்னைத்தானே எரித்துக் கொண்டாள். சதியின் கணவரான சிவபெருமானின் கோபத்தினால் யாகம் அழிந்தது.[6][7] இந்த கதை தட்ச-யக்ஞ-நாசம் ("தட்சனின் வேளிவியை அழித்தல்) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கதை இந்து தெய்வீக அன்னையின் கோவில்களான சக்தி பீடங்களை நிறுவுவதற்கான அடிப்படையை உருவாக்குகிறது.[8][9][10][11][12] [13] இது தாட்சாயிணியின் மறுபிறவியான பார்வதியின் கதையின் முன்னோடியாகவும் உள்ளது. இவர், பின்னர் சிவனை மணந்தார்.[14]

இந்தக் கதை முக்கியமாக வாயு புராணத்தில் கூறப்பட்டுள்ளது . கந்த புராணத்தின் காசி காண்டம்,[4] கூர்ம புராணம், அரிவம்ச புராணம் , பத்ம புராணம் ஆகியவற்றிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது . லிங்க புராணம், சிவபுராணம், மச்ச புராணம் ஆகியவையும் இந்த சம்பவத்தை விவரிக்கின்றன.[15][16]

பின்னணி[தொகு]

தாட்சாயிணி[தொகு]

தட்சன் பிரம்மாவின் மகனான பிரஜாபதியின் மகன்களில் ஒருவனும் அவரது முதன்மையான படைப்புகளில் ஒருவனுமாவான். தட்சன் என்ற பெயருக்கு "திறமையானவன்" என்று பொருள். தட்சன் மனுவின் மகள் பிரசுதியை மணந்தான். சில சமயங்களில் தட்சனின் மற்றொரு மனைவியான அசிக்னியுடன் சமமாக இருந்தாள். இவனது இளைய மகளான சதி ("உமா" என்றும் அழைக்கப்படுகிறார்) தட்சனின் செல்லப் பிள்ளையாவாள். அவன் அவளை எப்போதும் தன்னுடனே சுமந்து செல்வான் . சதி தட்சனின் வழியைப் பின்பற்றியதால் தாட்சாயிணி என்றும் அழைக்கப்பட்டாள்.[6]

யாகத்தை அழித்தல்[தொகு]

சதி என்கிற தாட்சாயினி சிவன் மீது கொண்ட காதலால், தவமிருந்து சிவனின் அன்பை பெறுகிறாள். இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்து நின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார்.

இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன் தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள்.

இதனால் சிவபெருமான் ருத்திரன், மகாகாளி, வீரபத்திரன் முதலிய அவதாரங்களை உருவாக்கி தட்சனை அழித்தார்.

நினைவு விழாக்கள்[தொகு]

சதியின் சடலத்தை (வலதுபுறம்) சுமந்து செல்லும் சிவன் , தட்சேசுவர மகாதேவர் கோயில்.

கொட்டியூர், கேரளம் போன்ற பல்வேறு தலங்கள்; பீகாரில் உள்ள சப்ராவின் ஆமி மந்திர்; உத்தர காண்டத்திலுள்ள கன்கால், தட்சேசுவர் மகாதேவர் கோயில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திரக்சாரமம் ஆகிய இடங்கள் தட்சனினின் யாகம் நடந்த இடமாகவும் சதி தீக்குளித்த இடம் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

கொட்டியூர் வைசாக மகோத்சவம், தட்ச யாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கொட்டியூர் மலைக்காடு பகுதியில் 27 நாள் யாகம் நடத்தப்படுகிறது. பூசையும் சடங்குகளும் சங்கராச்சாரியாரால் வகைப்படுத்தப்பட்டன.

சான்றுகள்[தொகு]

 1. "SHIVA PURANA Destruction of Daksha Yagna by".
 2. "Vaayu Purana". Horace Hayman Wilson. pp. 62–69. 12 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
 3. "ഇതു ദക്ഷ യാഗ ഭൂമി". Malayala Manorama. 2013. 2013-07-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-07-23 அன்று பார்க்கப்பட்டது.
 4. 4.0 4.1 Skanda Purana (Pre-historic Sanskrtit literature), G. V. TAGARE (Author) (August 1, 1992). G.P. Bhatt. ed. Skanda-Purana, Part 1. Ganesh Vasudeo Tagare (trans.) (1 ). Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120809661. 
 5. (Translator), Swami Vijnanananda (2007). The Srimad Devi Bhagavatam. Munshiram Maniharlal. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8121505918. 
 6. 6.0 6.1 Ramesh Menon (2011). Siva: The Siva Purana Retold (1, Fourth Re-print ). Rupa and Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8129114952. 
 7. "Lord Shiva stories, Shiva purana". Sivaporana.blogspot.in. 2009. 2013-07-23 அன்று பார்க்கப்பட்டது.
 8. Roger Housden (1996). Travels Through Sacred India (1 ). Thorsons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1855384973. https://archive.org/details/travelsthroughsa0000hous. 
 9. "Manikyamba devi, Draksharamam (Andhra Pradesh)". specialyatra.com. 10 September 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
 10. "18 Shakti peethas". shaktipeethas.org. 2 August 2013 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
 11. "Mahalakshmi Temple Kolapur". mahalaxmikolhapur.com. 2010. 2 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Jogulamba Temple, Alampur". hoparoundindia.com. 2 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Travel Guru: Ashta Dasha Shakti Peethas (Shankari devi, Kamakshi Devi, Srigala Devi, Chamundeshwari devi, Jogulamba devi, Bhramaramba devi, Mahalakshmi devi, Ekaveerika Devi, Mahakali devi, Puruhutika devi, Girija Devi, Manikyamba devi, Kamarupa devi, Madhaveswari devi, Vaishnavi devi, Sarvamangala devi, Vishalakshi devi, Saraswathi devi)". Badatravelguru.blogspot.in. 2014-02-17 அன்று பார்க்கப்பட்டது.
 14. "If one is hurt by the arrows of an enemy, one is not as aggrieved as when cut by the unkind words of a relative, for such grief continues to rend one's heart day and night". Naturallyyoga.com. 2013-08-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-17 அன்று பார்க்கப்பட்டது.
 15. "What are Puranas? Are they Myths?". boloji.com. 12 August 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
 16. Wendy Doniger, தொகுப்பாசிரியர் (1993). Purana Perennis: Reciprocity and Transformation in Hindu and Jaina Texts. State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780791413814. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்சனின்_வேள்வி&oldid=3609115" இருந்து மீள்விக்கப்பட்டது