இளையபெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இல. இளையபெருமாள்
L. Elayaperumal
தலைவர்,
அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டி
பதவியில்
1965–1972
தலைவர்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
பதவியில்
1979–1980
முன்னவர் ஜி. கே. மூப்பனார்
பின்வந்தவர் எம். பி. சுப்பிரமணியம்
தனிநபர் தகவல்
பிறப்பு 26 சூன் 1924
காட்டுமன்னார்கோயில்,
தென் ஆற்காடு மாவட்டம்,
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியா (தற்போது
கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு 9 செப்டம்பர் 2005(2005-09-09) (அகவை 81)
சிதம்பரம்,
கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
குடியுரிமை இந்தியர்
தேசியம் தமிழர்
அரசியல் கட்சி Indian National Congress Flag.svg இந்திய தேசிய காங்கிரசு
(? - 1989; 2003-05)
இந்திய மனித உரிமைக்கட்சி (1983-2003)
வாழ்க்கை துணைவர்(கள்)
தையல்முத்து
(தி. 1944; இற. 2005)
பிள்ளைகள் வெற்றி வீரமணி
ஜோதி மணி
நந்தகுமார்
பெற்றோர் இலட்சுமணன் (தந்தை)
படைத்துறைப் பணி
பற்றிணைவு பிரித்தானிய இந்திய இராணுவம்
பணி ஆண்டுகள் 1945 - சனவரி 1946
தர வரிசை சிப்பாய்

இலட்சுமணன் இளையபெருமாள் (L. Ilayaperumal, 26 சூன் 1924 - 9 செப்டம்பர் 2005) பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இருபது வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும்பணியாற்றியவர். இந்திய மனித உரிமைக்கட்சி ஆரம்பித்து மக்களுக்காக போராடியவர்.

வாழ்க்கை[தொகு]

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பிறந்தவர் இளையபெருமாள். பள்ளிகளில் பறையர்களுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக தனி பானையும் இருப்பதை பார்த்திருக்கிறார். எவருக்கும் தெரியாமல், பறையர்களின் பானை என்று எழுதப்பட்டிருக்கும் பானையை தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் உடைக்கும் போது பள்ளி முதல்வரிடம் பிடிபட்ட போதும், தன்னுடைய செய்கையின் நியாயத்தினை முன்வைக்கத் தயங்கவில்லை. அவரால் அன்று முதல் மாணாக்கர்களுக்கு இருந்து வந்த இரட்டைக்குவளை முறை நீக்கப்பட்டது.

சாதிய எதிர்ப்பு போராட்டம்[தொகு]

இளையபெருமாள் 1945ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1946ல் காட்டுமன்னார்கோவிலுக்குத் திரும்பும் போது ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. உடல் நிலை சரியில்லாததால், வேலைக்கு இரு நாள் செல்லாத பறையர் ஒருவர், பண்ணையார் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். காயமுற்றவரை இளையபெருமாள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும், குற்றப்பத்திரிக்கை பதிவு செய்ய மறுத்துள்ளனர். பட்டியலின மக்களை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் இளையபெருமாள். துன்புறுத்திய அந்த பண்ணையாரிடமிருந்து நூறு ரூபாய் அபராதம் பெற்று தரும்வரை இளையபெருமாள் ஓயவில்லை.நிலமற்ற கூலிவேலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்த்தும், சூத்திர சாதியினர் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிகளை பறையடித்து அறிவிப்பதற்காக மட்டுமே பறையர்கள் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்தும் அவர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். சூத்திர சாதி மக்களால் போலிக்குற்றம் சாட்டப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைபட்டார். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு இவருடைய சமூக சேவைக்காக தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சி பணி[தொகு]

1980ம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் 6ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திரா காங்கிரஸ் போட்டியிட்ட 24 நாடாளுமன்றத் தொகுதிகளில் 21-ஐ கைப்பற்றியது. வெற்றிபெற்றவர்களில் விழுப்புரம் ராமசாமி படையாச்சியார், ஆர்.வெங்கட்ராமன், ஆர்.வி.சுவாமிநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்திரா காங்கிரஸ் - திமுக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்றதால், எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அமைச்சரவை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று இளையபெருமாள் வலியுறுத்தினார். இளையபெருமாள் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 1952 முதல் 1967 வரை தொடர்ந்து 3 முறை பதவி வகித்தார். இவர் 1962 முதல் 1967 வரை அப்போது பிரதமராக இருந்த நேருவின் அரசில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியை உருவாக்கி அதன் முதல் தலைவராக பணியாற்றினார்.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்ட போது, இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரிவின் தமிழக தலைவராக 1979ல் பதவியேற்று பணியாற்றினார். 1980ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திராகாந்தி திமுகவுடன் கூட்டணி அமைத்தார். முன்னதாக 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், இந்திராகாந்தியும் ஒரே மேடையில் பேசினர். இந்திரா காங்கிரஸ் தலைவர் ஐயா இளையபெருமாளும் உடன் இருந்தார். கருப்பையா மூப்பனார், நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்டோரும் அந்த மேடையில் இருந்தனர். அந்த மேடையில் தான் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சித் தருக என்று கருணாநிதி பேசினார். 1980-ல் சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றினார். கருத்துவேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்த இளையபெருமாள் 1989-ல் இந்திய மனித உரிமை கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். 2003-ல் காங்கிரஸ் கட்சியில் சோனியாகாந்தி முன்னிலையில் மீண்டும் இணைந்தார்.

அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி உருவாக்கம் (ம) இளையபெருமாள் கமிட்டி அறிக்கை[தொகு]

இந்தியாவில் 1955 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1976 இல் பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர் இளைய பெருமாள் தலைமையில் ஒரு கமிட்டியை நாடாளுமன்றம் அமைத்தது. காந்தி பிறந்த ஊரில், பிரதமர் இந்திராகாந்தி தொகுதியில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது” என்று 1969 - ல் இளையபெருமாள் கமிட்டி அறிக்கையில் சுட்டிக்காட்டியது. ஆனால், அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவைகள் அவருடைய காலத்திலேயே புறக்கணிக்கப்பட்டது பட்டியலின தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம்[தொகு]

இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் பட்டியல் இன மக்களை காப்பதற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் மிகவும் தாமதமாக கடந்த 1995ல் தான் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இளையபெருமாள் அவர்களின் பரிந்துரையின் பேரில் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய தற்போது உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

குடும்பம்[தொகு]

மனைவி தையல்முத்து, மகன்கள் வெற்றி வீரமணி, ஜோதி மணி, நந்தகுமார் ஆகியோர். மனைவி தையல்முத்து, உடல்நலக்குறைவால் காலமாகி ஐந்தாவது மாதத்தில் அய்யா இளையபெருமாள் காலமானார்.மகன் பல் மருத்துவர் நந்தகுமார் சிறுநீரக கோளாறால் உயிரிழந்தார். நந்தகுமார் சில காலம் விடுதலை சிறுத்தை கட்சி யில்

இணைந்து பணியாற்றினார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி எஸ்தர்ரூபி மகள்கள் அனோஷ்கா தெரசா மற்றும் மகன் இளையபெருமாள் உள்ளனர்.

தலைவர்களிடம் நன்மதிப்பு[தொகு]

தந்தை பெரியார், காமராசர், பி. கக்கன், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர், போன்றவர்களின் நன்மதிப்பை பெற்றவர். தோழர் ஜீவாவை தனது ரோல் மாடலாக கொண்டு வாழ்ந்து வந்தவர் இளையபெருமாள். சூத்திரர்களால் புறக்கணிக்கப்பட்ட பட்டியல் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தார் என்கிற காரணத்தாலே தென்னாட்டு அம்பேத்கர் என அன்புடன் அழைக்கப்படுகிறார். 1998 இல் தி.மு.க. அரசு இளையபெருமாளுக்கு அம்பேத்கர் விருது கொடுத்து, அவரின் சமூக உழைப்பைக் கவுரவித்தது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளையபெருமாள்&oldid=3698283" இருந்து மீள்விக்கப்பட்டது