உள்ளடக்கத்துக்குச் செல்

இராகவேந்திர மடம் (மந்திராலயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராகவேந்திர சுவாமி மடம், மந்திராலயம்

இராகவேந்திர மடம் (Raghavendra Math) இராயர் மடம் எனவும் கும்பகோணம் மடம் எனவும் அழைக்கப்படும் இது மூன்று முக்கிய துவைத வேதாந்த மடங்களில் மந்திராலயத்தை மையமாகக் கொண்ட முக்கியமான ஒன்றாகும். [1] [2] இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ள மந்திராலயத்தில் இராகவேந்திர மடம் அமைந்துள்ளது.

இராகவேந்திர மடம், உத்தராதி மடம் மற்றும் வியாசராஜ மடம் ஆகியவை துவைத வேதாந்தத்தின் மூன்று பிரதான மடங்களாகக் கருதப்படுகின்றன. [3] [3] இம்மடங்களின தலைவர்களும் அறிஞர்களும் பல நூற்றாண்டுகளாக மத்துவரின் துவைத வேதாந்தத்தின் கொள்கை வடிவமைப்பாளர்களாக இருந்தனர்.

வரலாறு

[தொகு]

சமசுகிருத அறிஞர் சுரேந்திரநாத் தாசுகுப்தாவின் கூற்றுப்படி, இந்தியாவின் தெற்குப் பகுதியில் துவைதத்தை பரப்புவதற்காக உத்தராதி மடத்திலிருந்து (பிரதான பரம்பரை) கிளைத்த இரண்டு மடங்களில் இம்மடமும் ஒன்றாகும். இதற்கு கும்பகோணம் மடம் என்று பெயரிடப்பட்டது. பின்னர் விஜயேந்திர தீர்த்தருக்குப் பிறகு சுதீந்திர தீர்த்தரால் இம்மடம் விஜயேந்திர மடம் அல்லது விஜயேந்திர சுவாமிகள் என் மாற்றப்பட்டது. கும்பகோணத்தில் சிறிது காலம் தங்கிய பின்னர், அவர் இராமேசுவரம், இராமநாதபுரம், திருவரங்கம், மற்றும் மதுரா இடங்களுக்கு யாத்திரை மேற்கொண்டதாகத் தெரிகிறது. பின்னர் அவர் மேற்கு நோக்கி உடுப்பி மற்றும் சுப்பிரமணியாவுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து பண்டரிபுரம், கோலாப்பூர் மற்றும் பிஜாப்பூர் ஆகிய இடங்களுக்கும் சென்றார். கோலாப்பூரில், அவர் நீண்ட காலம் தங்கியதாகவும், பிஜாப்பூரில் பல மதமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. [3] அதன் பிறகு அவர் இறுதியில் கும்பகோணத்திற்கு திரும்பினார். 1663 வாக்கில் அவர் மைசூருக்குப் புறப்பட்டார். அங்கு அவர் தொட்ட தேவராய உடையாரிடமிருந்து மானியம் பெற்றார். பின்னர் அவர் மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து, இறுதியாக ஆந்திராவின் ஆதோனி என்ற இடத்தில் துங்கபத்ரா ஆற்றின் கரையில் உள்ள மந்திராலயம் என்ற கிராமத்தில் குடியேறினார். புனித நதியில் அவர் 1671 இல் சமாதியானார். [3]

இம்மடம், பின்னர் இராகவேந்திர தீர்த்தரின் பெயரைக் கொண்டது.

குரு பரம்பரை

[தொகு]
  1. மத்துவாச்சாரியர்
  2. பத்மநாப தீர்த்தர்
  3. நரஹரி தீர்த்ர்
  4. மாதவ தீர்த்தர்
  5. அக்சோபிய தீர்த்தர்
  6. ஜெயதீர்த்தர்
  7. வித்யாதிராஜ தீர்த்தர்
  8. கவீந்திர தீர்த்தர்
  9. வாகீச தீர்த்தர்
  10. இராமச்சந்திர தீர்த்தர்
  11. விபுதேந்திர தீர்த்தர்
  12. ஜிதமித்ர தீர்த்தர்
  13. இரகுநந்தனா தீர்த்தர்
  14. சுரேந்திர தீர்த்தர்
  15. விஜயேந்திர தீர்த்தர்
  16. சுதீந்திர தீர்த்தர்
  17. இராகவேந்திர தீர்த்தர்
  18. யோகீந்திர தீர்த்தர்
  19. சூரேந்திர தீர்த்தர்
  20. சுமதேந்திர தீர்த்தர்
  21. உபேந்திர தீர்த்தர்
  22. வதேந்திர தீர்த்தர்
  23. வசுதேந்திர தீர்த்தர்
  24. வரதேந்திர தீர்த்தர்
  25. தீரேந்திர தீர்த்தர்
  26. புவனேந்திர தீர்த்தர்
  27. சுபோதேந்திர தீர்த்தர்
  28. சுஜனேந்திர தீர்த்தர்
  29. சுஜ்னனேந்திர தீர்த்தர்
  30. சுதர்மேந்திர தீர்த்தர்
  31. சுகுனேந்திர தீர்த்தர்
  32. சுப்ராஜேந்திர தீர்த்தர்
  33. சுக்ருதீந்திர தீர்த்த
  34. சுசீலேந்திர தீர்த்தர்
  35. சுவிரதேந்திர தீர்த்தர்
  36. சுயமீந்திர தீர்த்தர்
  37. சுஜயீந்திர தீர்த்தர்
  38. சுசமீந்திர தீர்த்தர்
  39. சுயதேந்திர தீர்த்தர்
  40. சுபுதேந்திர தீர்த்தம் - தற்போதைய தலைவர்

குறிப்புகள்

[தொகு]
  1. Venkataraya Narayan Kudva (1972). History of the Dakshinatya Saraswats. Samyukta Gowda Saraswata Sabha.
  2. Purabhilekh-puratatva: Journal of the Directorate of Archives, Archaeology and Museum, Panaji-Goa, Volume 2. The Directorate. 2001.
  3. 3.0 3.1 3.2 3.3 Sharma 2000.

நூலியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]