அக்சோபிய தீர்த்தர்
அக்சோபிய தீர்த்தர் | |
---|---|
பிறப்பு | 1282 வட கர்நாடகா |
இறப்பு | 1365 மல்கெடா |
இயற்பெயர் | கோவிந்த சாத்திரி |
சமயம் | இந்து சமயம் |
தத்துவம் | துவைதம் |
குரு | மத்துவர் |
அக்சோபிய தீர்த்தர் (Akshobhya Tirtha) ( அண். 1282- அண். 1365) இவர் ஓர் துவைத அறிஞரும் இறையியலாளரும் ஆவார். [1] இவர் ஒரு வலிமையான வாதத்திறமை வாய்ந்தவர். [2] இவர் விஜயநகர பேரரசு தழைத்தோங்கிய காலத்தில் இருந்த வித்யாரண்யர் மற்றும் வேதாந்த தேசிகரின் சமகாலத்தவராக கருதப்படுகிறார். [3]
சந்நியாசம்
[தொகு]கோவிந்த சாத்திரியாக பிறந்து, மத்துவரிடமிருந்து சந்நியாசத்தைப் பெற்றார். பின்னர் மாதவ தீர்த்தருகுப் பிறகு மத்வாசாரியரின் பீடத்தின் தலைவரானார் (1350 - 1365). பாரம்பரியமாக, இவர் வேதாந்த தேசிகர் நடுவராய் இருந்த ஒரு விவாதத்தில் வித்யாரண்யரை வென்றதாக அறியப்படுகிறது. [1] [2] மத்வ தந்திர சம்கிரகா என்ற பெயரில் இவர் படைத்த ஒரு படைப்பு தற்போது கிடைக்கவில்லை. [1]
கடைசி ஆண்டுகள்
[தொகு]இவர் தனது கடைசி ஆண்டுகளில் பண்டரிபுரம் சென்று ஓய்வு பெற்றார் என்று வரலாற்றாசிரியர் சர்மா வாதிடுகிறார். அங்கு பீமா ஆற்றங்கரையில் தோண்டு பந்த் என்ற இளைஞரை சந்தித்தார். பின்னர் அவர் இவரது சீடராகவும் வாரிசாகவும் மாறி ஜெயதீர்த்தர் என்ற பெயரைப் பெற்றார். [1] கர்நாடகாவில் உள்ள ஒரு நகரமான, குல்பர்கா மாவட்டத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள மல்கெடாவில் இவரது பிருந்தாவனம் உள்ளது..
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Sharma 2000.
- ↑ 2.0 2.1 Jackson 2007.
- ↑ Rao 1949.
நூலியல்
[தொகு]- Sharma, B. N. Krishnamurti (2000). A History of the Dvaita School of Vedānta and Its Literature, Vol 1. 3rd Edition. Motilal Banarsidass (2008 Reprint). ISBN 978-8120815759.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Rao, S. Hanumantha (1949). Journal Of Indian History. Vol. 27. The University Of Travancore.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Jackson, William (2007). Vijaynagar Visions: Religious Experience and Cultural Creativity in a South Indian Empire. University of Michigan. ISBN 9780195683202.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]