இரவீந்திர பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரவீந்திர பாரதி
Map
பொதுவான தகவல்கள்
வகைகலையரங்கம்
கட்டிடக்கலை பாணிகலையம்சம்
இடம்ஐதராபாத்து, இந்தியா
ஆள்கூற்று17°24′12″N 78°28′02″E / 17.4033°N 78.4672°E / 17.4033; 78.4672
திறக்கப்பட்டது11 மே 1961
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)முகமது பயாசுதீன்
தெலங்காணா மாநில உருவாக்க நாளில் நாளில் ஒளி விளக்கில் ஒளிரும் இரவீந்திர பாரதி

இரவீந்திர பாரதி (Ravindra Bharathi) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரில் அமைந்துள்ள ஒரு கலையரங்கம் ஆகும் இதற்கு இரவீந்திரநாத் தாகூரின் பெயரிடப்பட்டது.

வரலாறு[தொகு]

1960 மார்ச் 23 அன்று, அப்போதைய உத்தரபிரதேச ஆளுநரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான பேஜவாடா கோபால் ரெட்டி இதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடத்தை இலண்டனின் கட்டிடக்கலை சங்கப் பள்ளி கட்டிடக்கலை மாணவரான முகமது பயாசுதீன் என்பவர் வடிவமைத்தார். [1] இரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டப்பட்ட இந்த கலையரங்கத்தை ஆந்திரப் பிரதேச அரசு ஒரு வருடத்திற்கும் மேலாக கட்டியது. 1961 மே 11 அன்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் இப்பகுதியின் கலாச்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இதைத் திறந்து வைத்தார். [2][3][4] தாகூரின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக உசுமானியா பல்கலைக்கழக நாடகக் கழகத்தின் அனுசரணையில் தாகூரின் முக்தா தாரா (அருவி) என்ற நிகழ்ச்சி தொடக்க நிகழ்ச்சியாக இருந்தது. [5]

தங்க விழா கொண்டாட்டங்கள்[தொகு]

மே 11, 2010 அன்று, கலையரங்கத்தின் தங்க விழா கொண்டாட்டங்களை ஆந்திர அரசு ஏற்பாடு செய்தது. சோபா நாயுடு, அவரது குழுவினரால் குச்சிப்புடி நடனமும், உள்ளூர் வங்காள சமுதாயத்தால் ஒரு பெங்காலி பாலேவையும் ஏற்பாடு செய்ய கலாச்சாரத் துறை உதவியது. கூடுதலாக, பின்னணிப் பாடகர் கவிதா கிருஷ்ணமூர்த்தி, வயலின் கலைஞர் எல். சுப்பிரமணியம் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. [4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவீந்திர_பாரதி&oldid=3544018" இருந்து மீள்விக்கப்பட்டது