சோபா நாயுடு
சோபா நாயுடு | |
---|---|
பிறப்பு | 1956 அனகாபள்ளி மண்டலம், ஆந்திரப் பிரதேசம் |
இறப்பு | அக்டோபர் 14, 2020 (அகவை 63–64) ஐதராபாது |
பணி | பாரம்பரிய இந்திய நடனம் |
விருதுகள் | பத்மசிறீ (2001) |
வலைத்தளம் | |
sobhanaidu.org |
சோபா நாயுடு (Shobha Naidu, 1956 – 14 அக்டோபர் 2020)[1] இந்தியாவின் முன்னணி குச்சிப்புடி நடனக் கலைஞர்களில் ஒருவராவார். மேலும் புகழ்பெற்ற ஆசிரியர் வேம்பதி சின்ன சத்யத்தின் சிறந்த சீடருமாவார். இவர் குச்சிபுடியின் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றார். மிகவும் இளம் வயதிலேயே நடன-நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடனமாடத் தொடங்கினார். இவர் தனது குருவுடன் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், சத்தியபாமா மற்றும் பத்மாவதி போன்ற வேடங்களில் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தி சிறந்து விளங்கினார். இவர் ஒரு சிறந்த தனி நடனக் கலைஞரும் கூட. ஐதராபாத்தில் உள்ள குச்சிப்புடி நடன நிறுவனத்தின் முதல்வர் சோபா நாயுடு கடந்த சில ஆண்டுகளாக சிறு வயது மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.[2] 2010 ஆம் ஆண்டில், 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை பள்ளிக் கொண்டாடியது. இவர் பல நடன-நாடகங்களை நிகழ்த்தியுள்ளார். சென்னை கிருட்டிண கானசபாவிலிருந்து நிருத்யா சூடாமணி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
தாயகத்தில் ஒரு கலைஞராக இவர் தற்போது சிறீ வெங்கடேசுவரா பக்தித் தொலைகாட்சியில் பாரம்பரிய நடன பயிற்சி நிகழ்ச்சியான "சாதனா" என்ற நிகழ்ச்சியை நடத்தினார். (2008 வரை) கலை வடிவத்தில். கல்யாண சீனிவாசத்தில் பத்மாவதி என்ற நடிப்பால் ஈர்க்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தனம் இந்தியா முழுவதும் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததுடன், ஒரு சில பாலேக்களின் வீடியோ பதிவுகளுக்கும் நிதியுதவி அளித்தது.[3]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சோபா நாயுடு 1956ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் அனகாபள்ளியில் பிறந்தார்.[4] இவர் சென்னை, இராணி மேரிக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[5]
குடும்ப எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், இவரது தாயார் சரோஜினி தேவி ராஜமகேந்திரவரத்தில் பி.எல். ரெட்டியின் கீழ் ஆரம்பப் பயிற்சிக்கு இவரை அனுப்பினார். அதன் பிறகு இவர் புகழ்பெற்ற வேம்பதி சின்ன சத்யத்தின் கீழ் பயிற்சி பெற்றார்.[5] பின்னர், இவர் வெம்பதியின் சிறந்த மாணவியானார்.[4]
விருதுகள் மற்றும் சாதனைகள்
[தொகு]12 ஆண்டுகால கடுமையான சாதனைகளுடன், இவரது சிறந்த பாத்திரங்களில் சில சத்தியபாமா, பத்மாவதி மற்றும் சந்தாலிகா ஆகியவை அடங்கும். இவர் 80 தனி நடனங்கள், 15 குழு நடனங்கள் ஆகியவற்றை நிகழ்த்தியுள்ளார். மேலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.[6] 1991 ஆம் ஆண்டில் மத்திய சங்க நாடக கலா அகாடமியின் மதிப்புமிக்க விருதும் வழங்கப்பட்டது. 1991இல் மும்பையின் சிருங்கார சம்சாத் வழங்கிய "நிருத்யாவிகார்", 1996இல் சென்னை, நுங்கம்பாக்கம் கலாச்சார சங்கத்தில், "நிருத்யா கலா சிரோமணி" என்ற பட்டம் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். தனது கலைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இவர், கலைத் துறையை அதன் அழகிய தூய்மையுடன் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு திரையுலகில் இருந்து வந்த இலாபகரமான வாய்ப்பை நிராகரித்தார்.[3]
நாயுடு உல்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் போற்றப்பட்டார். அமெரிக்கா முழுவதும் பயணம் செய்துள்ளார். இங்கிலாந்து, சோவியத் நாடு, சிரியா, துருக்கி, ஆங்காங், பாக்தாத், கம்பூச்சியா, மற்றும் பாங்காக் போன்ற நாடுகளில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளிலும் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய அரசாங்கத்தின் சார்பாக, நாயுடு மேற்கிந்திய தீவுகள், மெக்ஸிகோ, வெனிசுலா, துனிஸ், கியூபா ஆகிய நாடுகளுக்கு ஒரு கலாச்சாரக் குழுவை வழிநடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவிற்கும் சென்று வந்துள்ளார்.[7]
- குச்சிப்புடி நடனத்திற்கு இவர் ஆற்றிய பணியினை பாராட்டி இந்திய அரசு 2001இல் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[8]
- சென்னை கிருட்டிண கான சபாவிடமிருந்து 1982இல் நிருத்யா சூடாமணி விருது பெற்றுள்ளார்.[4]
- குச்ப்சிபுடி நடனத்தில் இவர் செய்த பங்களிப்புக்காக 1991இல் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார்.
- 1996இல் நிருத்யா கலா சிரோமணி விருது, 1988இல் மறைந்த என். டி. ராமராவ் விருது, மற்றும்
- ஆந்திர மாநில அரசிடமிருந்து அம்சா விருது போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Renowned Kuchipudi Dancer Sobha Naidu Dies In Hyderabad Hospital, NDTV, 14-10-2020
- ↑ "I explained it when I danced it". sobhanaidu.org. Archived from the original on 10 August 2017. பார்க்கப்பட்ட நாள் 25 Aug 2017.
- ↑ 3.0 3.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-10. பார்க்கப்பட்ட நாள் 2020-03-10.
- ↑ 4.0 4.1 4.2 "Shobha Naidu Success Story". mahilalu.com. 29 Jan 2016. பார்க்கப்பட்ட நாள் 25 Aug 2017.
- ↑ 5.0 5.1 "Personalities: Sobha Naidu". Andhra Portal. 16 May 2016. பார்க்கப்பட்ட நாள் 25 Aug 2017.
- ↑ "Dancer with a difference". Deccan Herald. 29 Apr 2012. பார்க்கப்பட்ட நாள் 25 Aug 2017.
- ↑ "I explained it when I danced it". sobhanaidu.org. Archived from the original on 10 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 Aug 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.