இரண்டாம் அலாவுதீன் பிரூசு சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் அலாவுதீன் பிரூசு சா
வங்காள சுல்தானகம்
ஆட்சிக்காலம்1533
முன்னையவர்நசிருதின் நசரத் சா
பின்னையவர்கியாசுதீன் மக்மூத் சா
பிறப்புபிரூசு பின் நசரத்
இறப்பு1533
வங்காள சுல்தானகம்
புதைத்த இடம்1533
மரபுஉசைன் ஷாஹி வம்சம்
தந்தைநசிருதின் நசரத் சா
மதம்சுன்னி இசுலாம்
சிட்டகொங்கின் ஆளுநர்
பதவியில்
1533 இல் மூன்று மாதங்கள் மட்டும்
ஆட்சியாளர்நசிருதின் நசரத் சா
முன்னையவர்சுட்டி கான்

இரண்டாம் அலாவுதீன் பிரூசு சா (Alā ad-Dīn Fīrūz Shāh) வங்காளத்தின் சுல்தான் நசிருதீன் நஸ்ரத் ஷாவின் மகனும் அவரது வாரிசுமாவார். இவர் தனது தந்தையின் ஆட்சியின் போது சிட்டகொங்கின் ஆளுநராக பணியாற்றினார். மேலும் வங்காள இலக்கியத்தின் புரவலராகவும் இருந்தார்.[1][2] 1533 இல் பிரூசு சா அரியணை ஏறினார். இருப்பினும் இது வங்காளத்தின் அனைத்து பிரபுக்களாலும் ஒருமனதாக அங்கீகரிக்கப்படவில்லை. அகோம் இராச்சியத்துடனான மோதல் இவரது ஆட்சியின் போதும் தொடர்ந்தது. துர்பக் கான் தலைமையிலான வங்காள இராணுவம் கலியா வரை சென்று போரிட்டது. சுல்தானாக மூன்று மாதங்கள் மட்டுமே இருந்த இவர் தனது மாமாவால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு சுல்தான் கியாசுதீன் மஹ்மூத் ஷா சுல்தானானார்.[3]

ஆரம்ப காலம்[தொகு]

பிரூசு வங்காள சுல்தானகத்தில் உசைன் ஷாஹி வம்சம் என்று அழைக்கப்படும் ஒரு பிரபுத்துவ வங்காள சுன்னி இசுலாம் குடும்பத்தில் பிறந்தார்.[4] இவரது தந்தை, நசிருதீன் நஸ்ரத் ஷா, வங்காளத்தின் சுல்தான் அலாவுதீன் ஹுசைன் ஷாவின் மகனும், டெல்லியின் சுல்தான் இப்ராஹிம் லோடியின் மருமகனும் ஆவார். சிறு வயதிலிருந்தே, பிரூசு வங்காள இலக்கியத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். [5] இளவரசர் மற்றும் சிட்டகொங்கின் ஆளுநராக இருந்தபோது,[6]வித்யா-சுந்தர் என்ற காதல் கதையை வங்காளக் கவிதை வடிவில் இயற்றுமாறு திவிஜா ஸ்ரீதரன் என்ற எழுத்தாளரிடம் இவர்கேட்டுக் கொண்டார்.[7][8][9] பின்னர் தான் சுல்தானாக பதவியேற்றாம் இப்பணி முடிக்கப்பட்டது. கவிஞர் சுல்தானின் நல்ல நடத்தை மற்றும் ஞானத்திற்காக கவிதையில் பிரூசை தொடர்ந்து பாராட்டி எழுதினார்.[1]

ஆட்சி[தொகு]

சுல்தான் நுசரத் சா தனது தந்தை அலாவுதீன் உசைன் சாவின் கல்லறைக்குச் சென்று திரும்பும்போது ஒரு திருநங்கையால் படுகொலை செய்யப்பட்டார்.[10] அவரது மரணத்தைத் தொடர்ந்து, அரியணைக்காக அவரது மகன் பிரூசு மற்றும் இவரது சகோதரர் மக்மூதுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. ஆயினும்கூட, வடக்கு பீகார் ஆளுநரும் மக்மூத்தின் மைத்துனருமான மக்தூம் ஆலம் உட்பட சுல்தானகத்தின் பிரபுக்கள், பிரூசு சாவை அரியணையில் அமர்த்தினார்கள்.[11] ஆனாலும் மக்மூத் பிருசு சாவின் ஆட்சியின் போது ஒரு அமீர் ஆக பணியாற்றினார் என 20 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் ஜதுநாத் சர்க்கார் மக்மூத் அரச அடையாளங்களை ஆரம்பத்தில் பயன்படுத்தியதால் வெளிப்படையான வாரிசு என்று கூறுகிறார்.

பிரூசு சா பதவியேற்ற மூன்று மாதங்களுக்குள், தனது மாமா மக்மூத் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்குப் பின் வங்காள சுல்தானாக மக்மூத் பதவியேற்றார்.[12][13]

மரபு[தொகு]

கி.பி.1787 இல் குலாம் உசேன் சலீம் என்பவர் எழுதிய இரியாசு-உசு-சலாதின் என்பது வங்காளத்தில் முஸ்லிம் ஆட்சிப் பற்றிய வரலாற்று நூல் ஆகும். இது பிரூசு சாவைக் குறிப்பிடுகிறது. இவருடைய பெயர் பெரிஷ்தா மற்றும் நிஜாமுதீன் அக்மத் போன்றவர்களின் முந்தைய எழுத்துகளில் இல்லை. சலீமின் ஆதாரம் தெரியவில்லை என்றாலும், ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, என்ரிச் பிளாச்மேன் கல்னா ஷாஹி பள்ளிவாசலை ஒட்டிய கல்வெட்டை கண்டு வெளியிட்டார். கல்வெட்டு இசுலாமிய நாட்காட்டியின் 939 ரமலானின் முதல் நாளில் (27 மார்ச் 1533), வர்த்மானின் கல்னாவில் பிரூசு சாவின் ஆளுநராகவும், தளபதியாகவும், அமைச்சராகவும் இருந்த உலக் மசுனத் கான் என்பவரால் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது என கூறுகிறது.[14] அங்கே பிரூசு சா காலத்து நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.[15]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 Roy, Atul Chandra (1986). History of Bengal, Turko-Afghan Period. Kalyani Publishers. பக். 311. 
 2. Aniruddha Ray (2011). The Varied Facets of History: Essays in Honour of Aniruddha Ray. Primus Books. பக். 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789380607160. 
 3. வார்ப்புரு:Cite Banglapedia
 4. "[H]e identified himself so whole-heartedly that his alien origin was forgotten" (Sarkar 1973, ப. 151)
 5. Ali, Muhammad Mohar (1985). History of the Muslims of Bengal. Riyadh, Saudi Arabia. பக். 856–858. 
 6. Abdur Rahim, Mohammad (1995). Islam in Bangladesh Through Ages. Islamic Foundation Bangladesh. பக். 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789840690121. 
 7. Ali, Syed Ashraf (21 February 2010). "Bangla: The history of a language". The Daily Star (Bangladesh). https://archive.thedailystar.net/suppliments/2010/02/21stfeb/page3.html. 
 8. Alam, Muhammad Khurshid (2006). Urbanization under the Sultans of Bengal during 1203-1538 A.D. (PDF) (Thesis). Aligarh Muslim University. p. 215.
 9. வார்ப்புரு:Cite Banglapedia
 10. வார்ப்புரு:Cite Banglapedia
 11. Sarkar (1973), ப. 159.
 12. Salim, Gulam Hussain; tr. from Persian; Abdus Salam (1902). Riyazu-s-Salatin: History of Bengal. Asiatic Society, Baptist Mission Press. பக். 137. https://archive.org/details/riyazussalatinhi00saliuoft/page/136/mode/2up. 
 13. R. C. Majumdar, தொகுப்பாசிரியர் (1960). "Bengal". The Delhi Sultanate. 6. Mumbai: Bharatiya Vidya Bhavan. பக். 221. https://archive.org/details/in.ernet.dli.2015.97301/page/n259/mode/2up. 
 14. Ahmad Hasan Dani (17 September 2023). "Analysis of the Inscriptions". Asiatic Society Of Pakistan Vol-ii. பக். 75. https://archive.org/details/in.ernet.dli.2015.126929/page/81/mode/2up. 
 15. Heinrich Blochmann (1872). "On a new king of Bengal". Journal of the Asiatic Society of Bengal (Asiatic Society of Bengal]) 41: 332, 339.