இரியாசு-உசு-சலாதின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரியாசு-உசு-சலாதின்
நூலாசிரியர்குலாம் உசேன் சலீம்
நாடுவங்காள மாகாணம்
மொழிபாரசீகம்
வகைவரலாற்று ஆவணம்
வெளியிடப்பட்ட நாள்
1788

இரியாசு-உசு-சலாதின் ( Riyaz-us-Salatin) ("ராஜாக்களின் தோட்டம்") என்பது1788 இல் வங்காளத்தில் வெளியிடப்பட்ட வங்காளத்தில் முஸ்லீம் ஆட்சி பற்றிய முதல் பிரித்தானியர் கால வரலாற்று புத்தகம் ஆகும். குலாம் ஹுசைன் சலீம் ஜைத்புரி இதை எழுதியுள்ளார்.

பெயக் காரணம்[தொகு]

இரியாசு என்றால் பாரசீக மொழியில் "தோட்டம்" எனப்பொருள் படும். சலாதின் என்பது "ராஜா" எனப் பொருள். எனவே இது "ராஜாக்களின் தோட்டம்" எனப் பொருள்.

உள்ளடக்கம்[தொகு]

வங்காளத்திற்கு முஸ்லிம் ஆட்சியைக் கொண்டு வந்த தெற்கு ஆப்கானித்தானைச் சேர்ந்த துருக்கி இனத்தைச் சேர்ந்த[1] படைத்தளபதி பக்தியார் கில்ஜியின் வருகையுடன் புத்தகங்கள் தொடங்குகின்றன. பிளாசி சண்டை மற்றும் வங்காளத்தில் முஸ்லிம் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த ஆங்கிலேயர்களால் வங்காளத்தின் முஸ்லிம்கள் நவாப்களைத் தோற்கடிப்பதில் புத்தகங்கள் முடிவடைகின்றன. முகலாயப் பேரரசின் கீழும் சயிஸ்ட் கானின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சியின் கீழும் வங்காள சுபாவைப் பற்றிய செய்திகளில் சில தவறுகளும் இருக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Minhāju-s Sirāj (1881). Tabaḳāt-i-nāsiri: a general history of the Muhammadan dynastics of Asia, including Hindustān, from A.H. 194 (810 A.D.) to A.H. 658 (1260 A.D.) and the irruption of the infidel Mughals into Islām. Bibliotheca Indica #78. 1. Calcutta, India: Royal Asiatic Society of Bengal (printed by Gilbert & Rivington). பக். 548.  (translated from the Persian by Henry George Raverty)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரியாசு-உசு-சலாதின்&oldid=3816898" இலிருந்து மீள்விக்கப்பட்டது