ஜதுநாத் சர்க்கார்
சர் ஜதுநாத் சர்க்கார் | |
---|---|
![]() ஜதுநாத் சர்க்கார், அண். 1926[1] | |
பிறப்பு | 10 திசம்பர் 1870 கராச்மரியா, சிங்காரா, நத்தோர் மாவட்டம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 19 மே 1958 (வயது 87) கொல்கத்தா, இந்தியா |
பணி | வரலாற்றாளர் |
வாழ்க்கைத் துணை | லேடி காதம்பரி சர்க்கார் |
சர் ஜதுநாத் சர்க்கார் (Sir Jadunath Sarkar ) (10 திசம்பர் 1870 - 19 மே 1958) இவர் ஓர் முக்கிய இந்திய வரலாற்றாளராவார். குறிப்பாக முகலாய வம்சத்தைப் பற்றி எழுதினார். .
கல்வி வாழ்க்கை
[தொகு]
இவர், 1870 திசம்பர் 10 ஆம் தேதி உள்ளூர் ஜமீந்தாரான ராஜ்குமார் சர்க்காருக்கு வங்காளத்தின் நந்தோரின் கராச்மரியா என்ற கிராமத்தில் பிறந்தார்.[2][3][4] 1891இல் கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். 1892ஆம் ஆண்டில், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1897 இல் பிரேம்சந்த் ராய்சந்த் நினைவு உதவித்தொகையினையும் பெற்றார்.
1893 ஆம் ஆண்டில், கொல்கத்தாவின் ரிப்பன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய பீடமாக சேர்க்கப்பட்டார் (பின்னர் சுரேந்திரநாத் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது).[5] 1898ஆம் ஆண்டில், மாநிலக் கல்லூரியில் மாகாணக் கல்விச் சேவைகளில் தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேர்ந்தார். இடையில், 1917 முதல் 1919 வரை, இவர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் நவீன இந்திய வரலாற்றையும், 1919-1923 முதல் ஆங்கிலத்தையும், வரலாற்றையும் கட்டக்கின் ராவன்ஷா கல்லூரியில் கற்பித்தார். 1923 இல், இவர் இலண்டனின் அரச ஆசியச் சங்கத்தின் கௌரவ உறுப்பினரானார். ஆகத்து 1926 இல், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். 1928 இல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சர் டபிள்யூ. மேயர் விரிவுரையாளராக சேர்ந்தார்.
வரலாற்று ஆய்வு
[தொகு]வரவேற்பு
[தொகு]வரலாற்றின் மார்க்சிய மற்றும் பிந்தைய காலனித்துவ பள்ளிகளின் வருகையுடன், சர்க்காரின் படைப்புகள் பொது நினைவிலிருந்து மங்கிவிட்டன.[6] [7]
மரியாதை
[தொகு]“இந்திய பேரரசின் ஒழுங்கு” என்ற மரியாதையுடன் இவரை பிரித்தானிய அரசு கௌரவித்தது. மேலும் 1929 பிறந்தநாள் மரியாதை பட்டியலில் இடம் பெற்றார்.[8] 1929 ஆகத்து 22 இல் பொறுப்பு ஆளுநராக இருந்த, கோசென் பிரபு என்பவரால் சிம்லாவில் வீரத்திருத்தகை வழங்கப்பட்டது.[9]
மரபு
[தொகு]கொல்கத்தாவின் தன்னாட்சி ஆராய்ச்சி மையமான சமூக அறிவியல் ஆய்வுகளுக்கான மையம் இவரது வீட்டில் நிறுவப்பட்டுள்ளது. இது இவரது மனைவியால் மாநில அரசுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. முதன்மை ஆதாரங்களின் அருங்காட்சியகம் மற்றும் காப்பகமான ஜதுநாத் பவன் அருங்காட்சியகம் மற்றும் வள மையத்தையும் இது கொண்டுள்ளது. [10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chakrabarty 2015, ப. ii.
- ↑ "Sarkar, Jadunath". வங்காளப்பீடியா. 19 March 2015. Archived from the original on 8 June 2020. Retrieved 30 November 2019.
- ↑ Bellenoit, Hayden J. (17 February 2017). The Formation of the Colonial State in India: Scribes, Paper and Taxes, 1760-1860. Taylor & Francis. p. 14. ISBN 978-1-134-49429-3. Archived from the original on 15 July 2024. Retrieved 29 March 2024.
- ↑ Kumar, Dr R. K. Bhatt & Mr Manish (10 September 2021). Development of Social Sciences: A Librarians Companion. K.K. Publications. p. 152. Archived from the original on 15 July 2024. Retrieved 29 March 2024.
- ↑ "Sarkar, Jadunath - Banglapedia". en.banglapedia.org. Retrieved 2019-11-30.
- ↑ Kaushik Roy (2004). India's Historic Battles: From Alexander the Great to Kargil. Orient Blackswan. p. 10. ISBN 978-81-7824-109-8.
- ↑ A Textbook of Historiography, 500 B.C. to A.D. 2000, E. Sreedharan, p. 448
- ↑ "Sir Jadunath Sarkar". Encyclopædia Britannica. 11 May 2024. Archived from the original on 6 June 2023. Retrieved 28 February 2023.
- ↑ "Viewing Page 6245 of Issue 33539". London-gazette.co.uk. 1 October 1929. Retrieved 26 March 2014.
- ↑ "In the memory of Jadunath Sarkar". The Telegraph (in ஆங்கிலம்). Retrieved 2019-11-30.
கூடுதல் ஆதாரங்கள்
[தொகு]- Chakrabarty, Dipesh (2015). The Calling of History: Sir Jadunath Sarkar and His Empire of Truth. Chicago and London: University of Chicago Press. ISBN 978-0-226-10044-9.
மேலும் படிக்க
[தொகு]- Gupta, Hari Ram, ed. (1957). Sir Jadunath Sarkar Commemoration Volume. Vol. I. Hoshiarpur: Department of History, Panjab University. OCLC 251228572.
- ————————; Kaushal, Paras Ram; Talwar, Shanti Swarup, eds. (1958). Sir Jadunath Sarkar Commemoration Volume. Vol. II. Hoshiarpur: Department of History, Panjab University. OCLC 470654377.
- Jha, Ajay Kumar (2004). "Profile of a Historian: Sir Jadunath Sarkar (1870-1958)". Proceedings of the Indian History Congress 65: 880–890. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937.
- Pawar, Kiram (1985). Sir Jadunath Sarkar: A Profile in Historiography. New Delhi: Books & Books.
வெளி இணைப்புகள்
[தொகு]
- Ray, Aniruddha (2012). "Sarkar, Jadunath". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம்.
- Sir Sarkar at Britannica Encyclopedia
- குட்டன்பேர்க் திட்டத்தில் Jadunath Sarkar இன் படைப்புகள்
- ஆக்கங்கள் ஜதுநாத் சர்க்கார் இணைய ஆவணகத்தில்