உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் காவல்துறைப் பதவிகள் மற்றும் சின்னங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சட்டம் ஒழுங்கு என்பது அந்தந்த மாநில அரசின் பொறுப்பாகும்[1][2].


நிறுவன கட்டமைப்பு

[தொகு]

அதிகாரிகள்

  • காவல்துறைத் தலைமை இயக்குனர் (டிஜிபி)
  • காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (ஏடிஜிபி)
  • காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி)
  • காவல்துறைத் துணைத்தலைவர் (டி.ஐ.ஜி)
  • தேர்வுநிலை காவல் கண்காணிப்பாளர்
  • காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்பி)
  • காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (அட்டிஷனல்.எஸ்பி)
  • காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (அஸிஸ்டண்ட் எஸ்பி)/காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி அல்லது டி.வை.எஸ்.பி)

கீழ்நிலை அதிகாரிகள்

  • ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்)
  • உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ)
  • உதவியாளர் துணை ஆய்வாளர்(ஏ.எஸ்.ஐ)
  • தலைமைக் காவலர் (எச்.சி)
  • காவலர் (பிசி)

பதவி சின்னம்

[தொகு]
காவல்துறைப் பதவி மற்றும் குறியீடுகள்
பதவி பதவிச் சின்னம்
காவல்துறைத் தலைமை இயக்குனர் (DGP)

Director general of police

அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (ADGP)

Addl.Director General of Police

அசோகச் சின்னம்,அதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் தலைவர் (IG)

Inspector General of Police

ஐந்துமுனை நட்சத்திரம் ஒன்று இதன் கீழ் குறுக்காக வைக்கப்பட்ட வாளும் குறுந்தடியும் அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறைத் துணைத்தலைவர் (DIG)

Deputy inspector general of police

அசோகச் சின்னம், அதன்கீழ் ஃ வடிவில் மூன்று நட்சத்திரங்கள், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
தேர்வுநிலை காவல் கண்காணிப்பாளர்/மூத்த காவல் கண்காணிப்பாளர்

(SSP) Senior Superintendent of Police

அசோகா சின்னம், அதற்குக் கீழே இரண்டு நட்சத்திரம், அதற்குக் கீழே ஐபிஎஸ் என்ற ஆங்கில எழுத்து
காவல்துறைக் கண்காணிப்பாளர் (SP)

Superintendent of Police

அசோகச் சின்னம், அதன்கீழ் ஒரு நட்சத்திரம், அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது எழுத்து
காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் (Addl. SP/ADSP)

Additional Superintendent of Police

அசோகச் சின்னம், அதன்கீழ் ஆங்கிலத்தில் IPS அல்லது TPS எழுத்து
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (ASP)

Assistant Superintendent of Police

மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் IPS எழுத்து
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DSP/DYSP)

Deputy Superintendent of Police

மூன்று நட்சத்திரம் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்திருக்கும். அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் TPS எழுத்து
ஆய்வாளர் (Insp.)

Inspector of Police

மூன்று நட்சத்திரம் அதற்குக் கீழ் கருநீலம், சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
உதவி ஆய்வாளர் (SI)

Sub-inspector of police

இரண்டு நட்சத்திரம் அதற்குக் கீழ் சிகப்பு ரிப்பன் அதன் கீழ் தமிழில் த.கா.துறை என்று இருக்கும்
காவல் உதவி துணை ஆய்வாளர் (ASI)

Assistant Sub-Inspector

ஒரு நட்சத்திரம் மற்றும் சிவப்பு மற்றும் நீல நிற ரிப்பன்.
தலைமைக் காவலர் (HC)

Head Constable

சட்டையின் மேற்கையில் மூன்று பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
முதல்நிலைக் காவலர் (PC-I)

Senior Constable

சட்டையின் மேற்கையில் இரண்டு பட்டை ஆங்கில எழுத்து V வடிவில் இருக்கும்
இரண்டாம்நிலைக் காவலர் (PC-II)

Police Constable

பட்டை எதுவுமில்லை.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]