திருச்சபைச் சட்டத் தொகுப்பு
திருச்சபைச் சட்டத் தொகுப்பு என்பது ஒரு கிறித்தவ அமைப்பு அல்லது திருச்சபையின் உறுப்பினர்களின் சமய நிர்வாகம் சார்ந்த விதிகள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். பெரும்பாலும் இது அவ்வமைப்பின் அதிகாரிகளால் இயற்றப்படும். கத்தோலிக்க திருச்சபை (இலத்தீன் மற்றும் மரபுவழி வழிபாட்டு முறைகளுக்கு தனித்தனி சட்டம் உண்டு), கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கத்திய மரபுவழி திருச்சபைகள், ஆங்கிலிக்க ஒன்றியத்தில் உள்ள திருச்சபைகள் ஆகியவை தற்போது தமக்கென தனிச் சட்டத் தொகுப்பு வைத்துள்ளன.[1] ஆயினும் இத்திருச்சபைகள் இச்சட்டங்களை இயற்றும், விளக்கும், மற்றும் செயல்படுத்தப்படும் முறைகள் வெவ்வேறானவை. ஆயினும் இத்திருச்சபைகளில் தற்போது நடப்பில் உள்ள சட்டங்கள் அனைத்தும் ஒரு பேரவையால் (church council) ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
கத்தோலிக்க திருச்சபையில்
[தொகு]கத்தோலிக்க திருச்சபையின் சட்டத்தொகுப்பு என்பது, கத்தோலிக்க திருச்சபையினையும் அதன் அமைப்புகளையும் நிர்வகிக்கவும் ஒழுங்குபடுத்தவும் மேலும் திருச்சபையினரை அதன் இவ்வுலக பணிவாழ்வில் ஒருசேர இயக்கவும் திருச்சபையின் ஆட்சியமைப்பின் ஆளுநர்களால் நடைமுறைப்படுத்தப்படும் ஒழுங்குமுறைகள் அல்லது விதிமுறைகளாகும்.[2] கத்தோலிக்க திருச்சபையின் சட்டங்கள், அதில் திருமுழுக்குப் பெற்ற, போதுமான அறிவுப் பயன்பாடுள்ள, ஏழு வயது நிரம்பியவரைக் கட்டுப்படுத்தும்.
இச்சட்டத்தில் இரண்டுவகை உள்ளது. ஒன்று இலத்தீன் வழிபாட்டு முறை திருச்சபைக்கும், மற்றொன்று (Code of Canons of the Eastern Churches) திருத்தந்தையோடு முழு உறவு ஒன்றிப்பில் இருக்கும் ஐந்து மரபுவழி வழிபாட்டு முறைக்குழுக்களுக்குமானதாகும். இச்சட்டங்களின் முழுமையான நேரடியான மற்றும் பொதுவான பணியுடன் இணைந்த அதிகாரத்தைத் திருத்தந்தை பெற்றுள்ளார்; இவ்வதிகாரத்தை இவர் எப்பொழுதும் தன்னுரிமையுடன் பயன்படுத்த முடியும்.[3] திருத்தந்தையின் தீர்ப்பிற்கு அல்லது ஆணைக்கு எதிராக மேல்முறையீடோ துணைநாடலோ கிடையாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Boudinhon, Auguste. "Canon Law." The Catholic Encyclopedia. Vol. 9. New York: Robert Appleton Company, 1910. 9 Aug. 2013
- ↑ Ramstein, Fr. Matthew (1948). Manual of Canon Law. Terminal Printing & Pub. Co., p. 3
- ↑ "Code of Cannon Law: Book II, Part II, Section I, Chapter I, Article I, Canon 331". 1983 Code of Canon Law\publisher=Libreria Editrice Vaticana.