தொழில் நிறுவனங்கள்
Appearance
தொழில் நிறுவனம்(business organization) எனப்படுவது இலாபத்தினை உழைப்பதற்காக தனியாளாகவோ அல்லது கூட்டாகவோ வணிகத்தினை நடாத்துவதற்காக உருவாக்கப்படும் சட்டபூர்வமான அமைப்பு ஆகும்.[1][2][3]
இத்தகைய நிறுவனங்கள் இலாபநோக்கற்ற நிறுவனங்களிலிருந்து முழுமையாக வேறுபடும். தொழில் நிறுவனத்தின் அமைப்பாக்கத்திற்கு பௌதீகவளம், மனிதவளம், நிதிவளம் மற்றும் தகவல்வளம் என்பன அவசியமாகும். இவ் வளங்களினைக் கொண்டு தொழில் நிறுவனங்களானது உற்பத்தி, கொள்வனவு, விற்பனை, சேவைகள் வழங்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
நிறுவனங்களின் வகைகள்
[தொகு]நபர்களின் எண்ணிக்கை,கடன் பொறுப்புக்கள் தொடர்பில் பின்வருமாறு தொழில் நிறுவனங்கள் வகைப்படுத்தப்படும்:
- தனியாள் வணிகம் - தனியொருவரால் நடத்தப்படுவது. இதன் காரணத்தால் உண்மையில் நிறுவன வகைக்குள் அடங்காது.
- பங்குடைமை
- வரையறுக்கப்பட்ட நிறுவனம் (LLC, Ltd.).
- கூட்டுத்தாபனம் (Inc., Co., Corp.).
- கூட்டுறவு சங்கம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ John Armour, Henry Hansmann, Reinier Kraakman, Mariana Pargendler "What is Corporate Law?" in The Anatomy of Corporate Law: A Comparative and Functional Approach(Eds Reinier Kraakman, John Armour, Paul Davies, Luca Enriques, Henry Hansmann, Gerard Hertig, Klaus Hopt, Hideki Kanda, Mariana Pargendler, Wolf-Georg Ringe, and Edward Rock, Oxford University Press 2017)1.1
- ↑ RC Clark, Corporate Law (Aspen 1986) 2; H Hansmann et al., Anatomy of Corporate Law (2004) ch 1 set out similar criteria, and in addition state modern companies involve shareholder ownership. However this latter feature is not the case in many European jurisdictions, where employees participate in their companies.
- ↑ Black's Law Dictionary, 8th edition (2004), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-314-15199-0