உதவி ஆய்வாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதவி ஆய்வாளர் ( எஸ்.ஐ, Sub-inspector ) என்பது தெற்காசியாவில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள ஒரு காவல்துறை பதவியாகும்: வங்கதேசம், பாகித்தான், இந்தியா, இலங்கையின் காவல்துறை படைகளில், இந்தப் பதவி முதன்மையாக பிரித்தானிய மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இது முன்னர் பெரும்பாலான பிரித்தனானி குடியேற்ற நாடுகளின் காவல்துறை படைகளிலும் சில பிரித்தானிய காவல்துறை படைகளிலும் பயன்படுத்தப்பட்டது. இப்பதவியானது பொதுவாக ஒரு துணைக்காவல் நிலையத்தின் பொறுப்பாளராகவோ அல்லது ஆய்வாளருக்கு உதவியான ஒரு பதவியாவோ இருக்கும்.

இந்தியா[தொகு]

காவல் உதவி ஆய்வாளர் பதவியில் உள்ள இந்தியக் காவல் பணி அதிகாரியின் சின்னம்

உதவி ஆய்வாளர் (SI) என்பவர் பொதுவாக சில காவலர்களுக்கும், தலைமைக் காவலருக்கும் கட்டளையிடும் கட்டளை அதிகாரியாவார். இந்திய காவல்துறையின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் படி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடிய, பொதுவாக முதல் விசாரணை அதிகாரியாக இருக்கும் அதிகாரிக்கான மிகக் குறைந்த தகுதிப் பதவி இதுவாகும். இவருக்கு கீழ் உள்ள அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியாது. ஆனால் இவர் சார்பாக வழக்கு தொடர்பாக விசாரிக்க மட்டுமே முடியும். கேரளா போன்ற சில மாநிலங்களில் அவர்கள் காவல்நிலைய அதிகாரிகளாக இருக்கலாம்.

உதவி ஆய்வாளர் பதவியானது உதவி துணை ஆய்வாளருக்ககு (ஏ.எஸ்.ஐ) மேலேயும், ஆய்வாளருக்கு கீழேயும் இருக்கும். பெரும்பாலான உதவி ஆய்வாளர்கள் நேரடியாக காவல்துறையில் பணியமர்த்தப்படுகிறார்கள். இவர்கள் கீழ்நிலை காவல் அதிகாரிகளை விட சிறந்த கல்வித் தகுதிகளைக் கொண்டுள்ளனர்.

மத்திய ஆயுதக் காவல் படைகள், மாநில ஆயுத சேமக் காவல் படைகள் மற்றும் ஆயுதப் படைகள் போன்ற சிறப்புப் பிரிவுகளில் உள்ள துணை ஆய்வாளர்கள் ஒரே தரத்தைக் கொண்டவர்கள். ஆனால் பொதுவாக இந்த அதிகாரிகளுக்கு விசாரணை அதிகாரம் இல்லை. உதவி ஆய்வாளர் (இசைக்குழு) மற்றும் உதவி ஆய்வாளர் (போக்குவரத்து) போன்ற பிற இந்திய சட்ட அமலாக்க நிறுவனங்களில் சிறப்பு புலனாய்வு அல்லாத துறைகளிலும் இந்த அதிகாரிகள் உள்ளனர்.

உதவி ஆய்வாளருக்கான தகுதி சின்னம் இரண்டு (ஐந்து முனை) நட்சத்திரங்கள் மற்றும் தோள்பட்டையின் வெளிப்புற முனையில் சிவப்பு மற்றும் நீல நிறக் கோடுகள் கொண்ட நாடா. இது இந்திய இராணுவத்தில் உள்ள சுபேதாரின் முத்திரையைப் போன்றது. உதவி ஆய்வாளருக்கு ஒரு (ஐந்து முனைகள்) நட்சத்திரமும், தோள்பட்டைகளின் வெளிப்புற முனையில் சிவப்பு மற்றும் நீல நிறக் கோடுகள் கொண்ட நாடாவும் இருக்கும். இது இந்திய இராணுவத்தில் உள்ள நைப் சுபேதாரின் அடையாளத்தை ஒத்தது. முதன்மை உதவி ஆய்வாளர் மற்றும் கூடுதல் உதவி ஆய்வாளருக்கான தகுதி சின்னம் ஒன்றுதான்.

உதவி ஆய்வாளர் மற்றும் உதவி உதவி ஆய்வாளர் பதவிக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய சேமக் காவல் படை, இந்திய - திபெத் எல்லைக் காவல்படை, நடுவண் புலனாய்வுச் செயலகம், சசசுத்திர சீமா பல், மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை, மற்றும் பிற மத்திய ஆயுதப்படை காவல்துறை படைகளில் தேசிய அளவில் தகுதியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கிறது. மத்திய ஆயுதக் காவல் படை மற்றும் மாநில காவல் படைகளின் துணை ஆய்வாளர்கள் ஒரே ஊதிய நிலையைக் கொண்டவர்கள். ஆனால் இந்திய ஆயுதப்படையின் சுபேதார் மற்றும் இளம் வாரண்ட் அதிகாரி அதாவது இந்திய இராணுவம், இந்தியக் கடற்படை மற்றும் இந்திய வான்படை ஆகியவற்றில் மத்திய ஆயுதப்படை அல்லது மாநில போலீஸ் படைகளை விட சிறந்த ஊதிய நிலை மற்றும் சலுகைகளை பெறுகின்றனர்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதவி_ஆய்வாளர்&oldid=3325234" இலிருந்து மீள்விக்கப்பட்டது