ஆத்திரேலிய நெட்டைக்காலி
ஆத்திரேலிய நெட்டைக்காலி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Anthus |
இனம்: | Template:Taxonomy/AnthusA. australis
|
இருசொற் பெயரீடு | |
Anthus australis Vieillot, 1818 |
ஆத்திரேலிய நெட்டைக்காலி ( Australian pipit ) என்பது குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு சிறிய பறவையாகும். இது மோட்டாசில்லிடே குடும்பத்தின், நெட்டைக்காலி பேரினத்தை சேர்ந்தது. இப்பறவை ஆத்திரேலியா மற்றும் நியூ கினிவில் திறந்த வெளிகளில் காணப்படுகிறது.
இது முன்பு ரிச்சர்டு, ஆப்ரிக்கன், மலை, நெல்வயல் நெட்டைக்காலிகளுடன் ஒரே இனத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. பல ஆய்வாளர்கள் ஆஸ்ட்ரேலேஷியன் நெட்டைக்காலியை இரண்டு வகைகளாகப் பிரித்தனர்: ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஸ்திரேலிய நெட்டைக்காலி ( அந்தஸ் ஆஸ்ட்ராலிஸ் [1]) மற்றும் நியூ கினியா மற்றும் நியூசிலாந்து நெட்டைக்காலி ( அந்தஸ் நோவாசீலாண்டியே ) என்பவையாகும்.
விளக்கம்
[தொகு]இது ஒல்லியான பறவையாகும். இப்பறவை 16 முதல் 19 செ.மீ. நீளமும், 40 கிராம் எடையும் கொண்டது. இறகுகள் மேலே வெளிர் பழுப்பு நிறத்தில் இருண்ட கோடுகள் கொண்டதாக இருக்கும். மார்பகத்தின் மீது கோடுகளும் கீழ்ப்பகுதி வெளிறியதாகவும் இருக்கும். கண்ணின் மேல் பகுதியில் புருவம் போல வெளிறிய பட்டையும், கருமையான கன்னமும், மீசைக் கோடுகளும் உள்ளன. இதன் நீண்ட வாலானது வெள்ளை வெளிப்புற இறகுகளைக் கொண்டுள்ளது. வாலை அடிக்கடி மேலும் கீழும் அசைக்கும் பழக்கம் உடையது. கால்கள் நீளமாகவும் இளஞ்சிவப்பு-பழுப்பு நிறமாகவும் இருக்கும் அதே சமயம் அலகு மெல்லியதாகவும் பழுப்பு நிறமாகவும் இருக்கும்.
இது ஒரு சிட்டுக்குருவி போன்ற சிணுங்கல் ஒலியை எழுப்பும்.
சூழலியல்
[தொகு]
இது புல்வெளிகள், விளைநிலங்கள், சாலையோரங்கள், வறண்ட ஆற்றுப் படுகைகள், மணல் திட்டுகள், திறந்த வனப்பகுதிகள் போன்ற திறந்தவெளி வாழ்விடங்களில் காணப்படும் பறவையாகும். இது வண்டுகள், சிலந்திகள், பூச்சிகளின் குடம்பிகள் போன்ற சிறிய முதுகெலும்பிலி உயிரினங்களை தரையில் உணவாக தேடி உண்ணும். இது புற்கள் போன்றவற்றின் விதைகளையும் உண்ணும்.
இதன் இனப்பெருக்க காலம் ஆகத்து மாதத்தில் தொடங்குகிறது. தாவரங்களின் அடிப்பகுதியில் அல்லது கல் தங்குமிடங்களில் கோப்பை வடிவ கூட்டைக் கட்டுகிறது. கூட்டை புற்களைக் கொண்டு பெண் பறவை கட்டுகிறது. இரண்டு முதல் ஐந்து முட்டைகளை இடலாம் என்றாலும் பொதுவாக மூன்று அல்லது நான்கு முட்டைகளை பொதுவாக இடும். அவை வெண்மை நிறத்திவையாகவும் பழுப்பு நிறப்புள்ளிகளுடன் காணப்படும். முட்டை 14 முதல் 15 நாட்கள் வரை அடைகாக்கப்படும். குஞ்சுகளுக்கு பெற்றோர் இருவரும் உணவு ஊட்டுகின்றன. குஞ்சுகள் 14 முதல் 16 நாட்களுக்குப் பிறகு பறந்து செல்கின்றன.
துணை இனங்கள்
[தொகு]இதில் பல துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:
- A. a. australis, ஏ.என். பில்பாலி (ம) ஏ. என். ரோஜெர்சி - ஆத்திரேலியாவின் பிரதான நிலப்பகுதி
- A. a. bistriatus - தசுமேனியா
- A. a. exiguus - நியூ கினியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Menkhorst, Peter; Rogers, Danny; et al. (2017). The Australian Bird Guide. Clayton South, Victoria: CSIRO. p. 500. ISBN 9780643097544.