உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன்னம்
கொழு கொழு கன்னம் உடைய பெண்
விளக்கங்கள்
தமனிவாய்ப்புற தமனி
நரம்புவாய்ப்புற நரம்பு, முக நரம்பின் வாய்ப்புறக் கிளை
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்வாய்ப்புறப்பகுதி
MeSHD002610
TA98A01.1.00.008
A05.1.01.014
TA2116
FMA46476
உடற்கூற்றியல்

கண்களுக்குக் கீழே உள்ள முகத்தின் பகுதி, மூக்கு மற்றும் இடது அல்லது வலது காதுகளின் இடையே உள்ள பகுதியே கன்னங்கள் எனப்படும்." வாய்ப்புறப்பகுதி " என்பது கன்னத்தோடு தொடர்புடையது. மனிதர்களில், இப்பகுதி வாய்ப்புற அல்லது கன்ன நரம்புகளால் சூழப்பட்டுள்ளது. கன்னத்தின் உட்புறப்பகுதிக்கும் பற்கள் மற்றும் ஈறுகளுக்கும் இடையே உள்ள பகுதி வாய்ப்புறக் குழி எனப்படும். இது வாயின் ஒரு பகுதியாகும். பிற விலங்குகளில் கன்னங்கள் ஜோல்ஸ்(jowls) என்று குறிப்பிடப்படுகிறது.

அமைப்பு[தொகு]

கன்னங்கள் மனிதர்களில் சதைப்பற்று மிக்கவை,[1] தசை மற்றும் தாடைகளில் தோல் புதைந்து , மனித வாயின் பக்கவாட்டு சுவரை உருவாக்கி, கண்களுக்குக் கீழே உள்ள கன்ன எலும்பைத் தொடுகின்றன . கன்னத்தின் உட்புறப்பகுதி ஒரு கோழை போன்ற படலத்தினால் (வாய்ப்புற சவ்வு, வாய் உட்பகுதியின் ஒரு பாகம்) ஆனது.

மெல்லுதலின் போது, கன்னங்கள் மற்றும் நாக்கு ஆகியவை பற்களுக்கு இடையில் உணவுகளை வைக்க உதவுகின்றன.

பிற விலங்குகள்[தொகு]

கன்னங்கள் வெளிப்புறமாக முடி நிறைந்த சருமத்தாலும் உட்புறமாக பட்டையான ஸ்குவாமஸ் எபிதீலியம் செல்களால்சூழப்பட்டுள்ளன, மற்றும் . இவை பெரும்பாலும் மென்மையானவை, ஆனால் பின்பகுதியை நோக்கிய நுண்ணிழையைப் (பாபிலா) பெற்றிருக்கும். (எ.கா., அசை போடும் விலங்குகள் ) [2] வாய்ப்புறச் சுரப்பிகளில் இருந்து கோழையானது உயர்ந்த மற்றும் தாழ்வான குழுக்களில் வழங்கப்படுகின்றது. ஊன் உண்ணிகளில், மேல்புற வாய்ப்புறச் சுரப்பி பெரிய மற்றும் தனித்துவமானது: சைகோமேடிக் சுரப்பி. மெல்லுதலின் போது, கன்னங்கள் மற்றும் நாக்கு ஆகியவை பற்களுக்கு இடையில் உணவுகளை வைக்க உதவுகின்றன.

அணில்கள் மற்றும் வெள்ளெலிகள் போன்ற சில விலங்குகள் உணவு அல்லது வேறு பொருள்களை எடுத்துச் செல்ல வாய்ப்புறக் குழியினைப் பயன்படுத்துகின்றன.

சில முதுகெலும்புகளில்,பெரும்பாலும் இனங்கள் அல்லது தனிநபர்களுக்கிடையே உள்ள முக்கியமான வேறுபாட்டைக் கண்டறிய குறிப்பாக கண்ணுக்குக் கீழே கன்னப் பகுதியில் காணப்படும் அடையாளங்கள், , பயன்படுகின்றன.

பிட்டம்[தொகு]

சில நேரங்களில் மக்கள் தங்கள் பிட்டத்தை அதன் அரை வட்டத் தோற்றத்தின் காரணமாக "கன்னங்கள்" என்றும் குறிப்பிடுகின்றனர்.

சமூகம் மற்றும் கலாச்சாரம்[தொகு]

டி.என்.ஏ மாதிரியை (கன்னத்தசையை சுரண்டி எடுக்கும் போது) எடுப்பதில் கன்னமே ஒரு முக்கிய இடமாகத் திகழ்கிறது.

குறிப்புகள்[தொகு]

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் cheek
  2. Klaus-Dieter Budras, Klaus-Dieter Budras (2003). Bovine Anatomy: An Illustrated Text. Schlütersche. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-89993-000-2.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னம்&oldid=2690405" இலிருந்து மீள்விக்கப்பட்டது