ஆதிகவி நன்னய்யா பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 17°1′1.44″N 81°46′57.87″E / 17.0170667°N 81.7827417°E / 17.0170667; 81.7827417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதிகவி நன்னய்யா பல்கலைக்கழகம்
Adikavi Nannaya University
வகைபொது
உருவாக்கம்22 ஏப்ரல் 2006; 17 ஆண்டுகள் முன்னர் (2006-04-22)
துணை வேந்தர்மொக்க ஜகநாத ராவ்[1]
அமைவிடம், ,
17°1′1.44″N 81°46′57.87″E / 17.0170667°N 81.7827417°E / 17.0170667; 81.7827417
வளாகம்நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக்குழு
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

ஆதிகவி நன்னய்யா பல்கலைக்கழகம் (Adikavi Nannaya University IAST : adikavi Nannaya Viśvavidyālayamu ) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமன்றியில் அமைந்துள்ள மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும்.[2][3] இது 22 ஏப்ரல் 2006 அன்று ஆந்திரப் பிரதேச அரசு சட்டம் 2006ஆம் ஆண்டு எண் 28 மூலம் நிறுவப்பட்டது.[4]

ஆதிகவி நன்னய்யா பல்கலைக்கழகம் என்பது தெலுங்கு மொழியில் இயற்றப்பட்ட நூலின் முதல் சான்றளிக்கப்பட்ட ஆசிரியரான நன்னய்யாவின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகம் இரு கோதாவரி மாவட்டங்களின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இந்த இரு மாவட்டத்தில் அமைந்துள்ள எழுபத்து நான்கு முதுகலை கல்வி நிறுவனங்களும், 403 பட்டயக் கல்லூரிகளும் ஆதிகவி நன்னய்யா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகள் முன்பு ஆந்திரப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தன.

இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக, கலை மற்றும் வணிகக் கல்லூரி, பல்கலைக்கழகக் கல்வியியல் கல்லூரி, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகக் கல்லூரி எனச் செயல்படுகின்றன.

ஆதிகவி நன்னய்யா பல்கலைக்கழகம் காக்கிநாடா மற்றும் தாடேபள்ளிகுடத்தில் விரிவாக்க வளாகத்தைக் கொண்டுள்ளது.

இந்தப் பல்கலைக்கழகம் புவி-தகவல் மற்றும் பெட்ரோலிய ஆய்வுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இது ஆந்திரப் பிரதேசத்தில் முதன்முறையாகவும் நாட்டிலுள்ள சிலவற்றில் ஒன்றாகும். இரண்டாவது கட்டத்தில், ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகளை ஊக்குவிக்கும் அரசாங்கக் கொள்கையைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகம் கணிதம் மற்றும் கணினியில் புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்து வழங்கியது. இது தகவல் தொழில்நுட்பத் துறைக்குப் பயிற்சியளிக்கப்பட்ட திட்டங்களை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.[5][6][7][8][9]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vice Chancellor". aknu.edu.in. Adikavi Nannaya University. பார்க்கப்பட்ட நாள் 30 August 2019.
  2. "Adikavi Nannaya varsity to be developed to impart standard education: Srinivasa Rao". தி எகனாமிக் டைம்ஸ். 12 April 2015. பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.
  3. "Andhra Pradesh State University". University Grants Commission (India). பார்க்கப்பட்ட நாள் 8 August 2015.
  4. "Adikavi Nannaya University". www.aknu.edu.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-04.
  5. "Raavi Sastry's 100th birth anniversary celebrated at Adikavi Nannaya University". The New Indian Express. 30 July 2022. பார்க்கப்பட்ட நாள் 3 September 2022.
  6. "Adikavi Nannayya University to set up Kandukuri Kala Peetham". Deccan Chronicle. 20 April 2022. பார்க்கப்பட்ட நாள் 3 September 2022.
  7. "Nannaya university to go for NAAC accreditation this academic year". The Hindu. 30 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 September 2022.
  8. "Rajamahendravaram: Adikavi Nannaya University receives ISO certificates for gender equality". Hans India. 9 March 2022. பார்க்கப்பட்ட நாள் 3 September 2022.
  9. "Adikavi Nannaya University to launch distance education courses soon". The Hindu. 12 April 2022. பார்க்கப்பட்ட நாள் 3 September 2022.

வெளி இணைப்புகள்[தொகு]