ஆட்டு பாலாடைகட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆட்டு பாலாடைகட்டி

ஆட்டு பாலாடைக்கட்டி என்பது ஆட்டுப் பாலில் இருந்து தயாாிக்கப்படும் பாலாடைக்கட்டி ஆகும். பிரெஞ்ச் மொழியில் செவிா் என்று ஆட்டு பாலாடைகட்டியைக் குறிப்பிடுவர்.

பண்புகள்[தொகு]

மாட்டு பால் மற்றும் ஆடு பால்  ஒரேமாதிாியான  கொழுப்பு உள்ளடக்கங்களை கொண்டுள்ளது.[1] ஆயினும், அதிக அளவு விகிதம் கொண்ட ஓரளவு தொடா் கொழுப்பு அமிலங்களான காப்பிரிக் மற்றும் கேப்ரிக் அமிலம் போன்றவை உள்ளதால் ஆட்டுப் பாலாடைக் கட்டிக்கு புளிப்பு சுவையை அளிக்கிறது. (கொழுப்பு அமிலத்தை குறிப்பிடும் சொல்லான fatty acids என்ற சொல்லில் உள்ள fatty என்ற சொல் லத்தின் மொழியில் ஆட்டைக் குறிப்பிடும் சொல்லில் இருந்து வந்தது.)[2]

ஆட்டு பாலாடையானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்யப்பட்டு வருகிறது, மேலும் அநேகமாக இது பழங்காலத்திலே தயாரிக்கப்பட்ட பால் பொருட்களில் ஒன்றாகும். ஆட்டுப் பாலாடையானது மிகவும் எளிமையான வடிவத்தில் செய்யப்படுகிறது, ஆட்டு பாலாடையானது பச்சையான பாலை இயற்கையாகவே தயிராகவிட்டு  பின்னர் வடிகட்டி, தயிரை அழுத்தி தயாாிக்கப்படுகிறது.  மற்ற உத்திகளில் பாலாடையை தயாரிக்க அமிலத்தைப் பயன்படுத்துகின்றனர் (வினிகர் அல்லது எலுமிச்சை சாறு போன்றவை).  மென்மையான ஆட்டு பாலாடைக்கட்டிகள் உலகளாவிய சமையலறைகளில் தயாரிக்கப்படுகின்றன, சமையல்காரர்கள் பல நாட்களுக்கு சூடான சமையலறையில் பாலாடைக்கட்டி நிறைந்த துணிகளை கட்டி தொங்கவிட்டு வடிகட்டி தரமான பாலாடைக் கட்டிகளை உருவாக்குகிறாா்கள்.  

மேற்கோள்கள்[தொகு]

  1. "Content of Milk by Species". havemilk.com.
  2. "Capric acid," Chemical LAND21.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆட்டு_பாலாடைகட்டி&oldid=3313272" இருந்து மீள்விக்கப்பட்டது