அழகிய கண்ணே (2023 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அழகிய கண்ணே
இயக்கம்ஆர். விஜயகுமார்
தயாரிப்புசேவியர் பிரிட்டோ
இசைஎன். ஆர். ரகுநந்தன்
நடிப்பு
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புசங்கத்தமிழன்
கலையகம்எஸ்தெல் என்டர்டெய்னர்ஸ்
விநியோகம்கண்ணன் ரவி குரூப்
வெளியீடுசூன் 23, 2023 (2023-06-23)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அழகிய கண்ணே (Azhagiya Kanne) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆர். விஜயகுமார் இயக்கியுள்ளார். மேலும், லியோ சிவகுமார் மற்றும் சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 23 சூன் 2023 அன்று வெளியிடப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இப்படம் இயக்குனர் சீனு ராமசாமியின் சகோதரரான ஆர்.விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகும் படம். பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ. லியோனியின் மகனான லியோ சிவகுமாரின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் திரைப்படமாகும். அவர் இதற்கு முன்பு மாமனிதன் (2022) மற்றும் கண்ணை நம்பாதே (2023) ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது.

சீனு ராமசாமியின் நீண்டகால நண்பராகவும், ஒத்துழைப்பாளராகவும் இருந்ததால், நடிகர் விஜய் சேதுபதி, ஒரு சிறிய தோற்றத்தில் தோன்றுவதற்காக ஒத்துக்கொண்டு ஒரு நாள் மட்டுமே நடித்துக் கொடுத்தார். விஜய் சேதுபதி தனது பாத்திரத்திற்காக சம்பளம் வாங்கவில்லை, மேலும் அவரது அலுவலகத்தில் படப்பிடிப்பை நடத்தவும் அனுமதித்தார். இயக்குநர் பிரபு சாலமன் தனது முதல் முறையா நடிகராக இப்படத்தில் நடித்தார். மேலும், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தனது பகுதிகளை முடித்தார்

வரவேற்பு[தொகு]

இப்படம் 23 ஜூன் 2023 அன்று தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்பட்டது. படத்தை மதிப்பாய்வு செய்து, டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு விமர்சகர் பின்வருமாறு எழுதினார், "படத்தின் நோக்கங்கள் சில இடங்களில் நன்றாக உள்ளன, ஆனால் எழுத்து பலவீனமாக உள்ளது அத்தோடு படத்தில் ஆச்சரியங்கள் அல்லது திருப்பங்கள் இல்லை". [1] ஃபிலிமிபீட்டின் ஒரு விமர்சகர் "கணிக்கக்கூடிய திரைக்கதை படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் தடுக்கிறது" என்று குறிப்பிட்டார். [2] தி இந்து மற்றும் தினபூமி நாளிதழ்களின் விமர்சகர்களும் படத்திற்கு நடுநிலையான விமர்சனங்களை வழங்கினர். [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Azhagiya Kanne Movie Review : Cliched plot and uninspiring ideas let down Azhagiya Kanne" இம் மூலத்தில் இருந்து 2023-06-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230629060946/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/azhagiya-kanne/movie-review/101185170.cms. 
  2. "Azhagiya Kanne Review: Dindigul I Leoni's Son Leo Sivakumar Needs Training In Acting". June 22, 2023. Archived from the original on June 30, 2023. பார்க்கப்பட்ட நாள் June 30, 2023.
  3. "அழகிய கண்ணே விமர்சனம்". Archived from the original on 2023-06-30. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
  4. "திரை விமர்சனம்: அழகிய கண்ணே". June 25, 2023. Archived from the original on June 30, 2023. பார்க்கப்பட்ட நாள் June 30, 2023.