உள்ளடக்கத்துக்குச் செல்

மாமனிதன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாமனிதன்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்சீனு இராமசாமி
தயாரிப்புயுவன் சங்கர் ராஜா
சான் சுதர்சன்
கதைசீனு இராமசாமி
இசைஇளையராஜா
யுவன் சங்கர் ராஜா
கார்த்திக் ராஜா
நடிப்புவிஜய் சேதுபதி
காயத்ரி
குரு சோமசுந்தரம்
ஷாஜி சென்
ஜுவெல் மேரி
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புஏ. ஸ்ரீகர் பிரசாத்
கலையகம்ஒய்.எஸ்.ஆர் புரொடக்சன்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாமனிதன் (Maamanithan) என்பது இயக்குநர் சீனு இராமசாமி எழுத்து, இயக்கத்தில் 2022-இல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பாக இத்திரைப்படத்திற்குத் தயாரிப்பாளராக உள்ளார். விஜய் சேதுபதி, யுவன் சங்கர் ராஜா, சீனு ராமசாமி ஆகிய மூவருக்கும் தென்மேற்கு பருவகாற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை போன்ற படங்களுக்குப் பிறகு இணையும் நான்காவது படமாகும்.[3][4] மேலும், யுவன் தனது தந்தை இளையராஜாவுடன் இணைந்து இசையமைத்தார். நடிகை காயத்ரி ஒரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தார்.

கதைச்சுருக்கம்

[தொகு]

தனி ஒட்டுநரான இராதாகிருஷ்ணன் தன் மகளையும் மகனையும் தனியார் பள்ளியில் படிக்கவைப்பதற்காக தன் தொழிலில் இருந்து மாறி படுகுழியில் விழுகிறார். இதனால் ஏற்பட்ட சிக்கல்களால் தன் குடும்பத்தையும், ஊரையும் விட்டுத் தலைமறைவாகிறார். இச்சூழலில் தன் குடும்பத்தைக் காக்க என்ன செய்தார் என்பதை இப்படம் சித்தரிக்கிறது.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

2018 திசம்பர் 15 அன்று ஓர் எளிய விழாவுடன் மதுரையில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.[6] படப்பிடிப்புக்கான இரண்டாவது கட்டமாக கேரளம் மற்றும் வாரணாசியில் நடைபெற்றது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vijay Sethupathi's long-delayed 'Maamanithan' releases in theatres; here's what the audience has to say". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 24 June 2022 இம் மூலத்தில் இருந்து 13 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220713203346/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vijay-sethupathis-long-delayed-maamanithan-releases-in-theatres-heres-what-the-audience-has-to-say/articleshow/92430760.cms. 
  2. "Release date of Vijay Sethupathi's 'Maamanithan' sees a change". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 May 2022 இம் மூலத்தில் இருந்து 13 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220713203447/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/release-date-of-vijay-sethupathis-maamanithan-sees-a-change/articleshow/91703918.cms. 
  3. "Will Vijay Sethupathi's new film reunite Ilaiyaraaja and Vairamuthu?". www.hindustantimes.com (in ஆங்கிலம்). 2017-04-18. Retrieved 2018-12-17.
  4. Siva (2018-12-16). "இளையராஜா, யுவன் கெரியரில் முதல் முறையாக நடக்கும் அந்த அதிசயம்". Retrieved 2018-12-17.
  5. "Kuttipuli actor turns director again - Times of India". The Times of India.
  6. "'Makkal Selvan' Vijay Sethupathi begins shooting for Maamanithan". Sify (in ஆங்கிலம்). Archived from the original on 2018-12-15. Retrieved 2018-12-17.
  7. admin (2018-12-17). "Maamanithan to be shot in Kerala, Varanasi, Madurai, Rameswaram". WwGossip (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-12-18. Retrieved 2018-12-17.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாமனிதன்_(திரைப்படம்)&oldid=4240950" இலிருந்து மீள்விக்கப்பட்டது