திண்டுக்கல் ஐ. லியோனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திண்டுக்கல் ஐ. லியோனி என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர். இவர் கங்கா கௌரி என்ற திரைப்படமொன்றில் நடித்துள்ளார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

ஆசிரியப் பணி[தொகு]

இவர் திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். 2011-ம் ஆண்டு திமுகவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.[1] 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும்[2], 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை[3] ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.[4][5]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டுக்கல்_ஐ._லியோனி&oldid=2718431" இருந்து மீள்விக்கப்பட்டது