உள்ளடக்கத்துக்குச் செல்

அரேபியப் பாலைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அராபியப் பாலைவனம்
சார்ஜாவிற்கு அருகில் பாலைவனம்
அரேபிய பாலைவன சுற்றுச்சூழல் வரைபடம்
சூழலியல்
மண்டலம்பேலியார்ட்டிக்கு மண்டலம்
பல்லுயிர்த் தொகுதிபாலைவனங்களும் செரிக் புதர்களும்
எல்லைகள்
பட்டியல்
  • ஓமன் வளைகுடா பாலைவனம்
  • மெசப்பத்தாமியப் புதர்ப் பாலைவனம்
  • மத்திய கிழக்குப் புல்வெளி
  • வடக்கு சகாராப் புல்வெளியும் வனப்பகுதிகளும்
  • பாரசீகக் குடாப் பாலைவனம்
  • செங்கடல் நுபோ-சிந்திய வெப்பமண்டலப் பாலைவனம்
  • திகிரிசு-யூப்ரடீசு வண்டலுப்பு சதுப்பு நிலம்
புவியியல்
பரப்பளவு1,855,470[1] km2 (716,400 sq mi)
நாடுகள்
வளங்காப்பு
வளங்காப்பு நிலைஆபத்தான/அருகிய[2]

அரேபியப் பாலைவனம் (Arabian Desert) மேற்கு ஆசியாவில் கிட்டத்தட்ட முழு அரபுத் தீபகற்பத்திலும் பரவியுள்ள பாலவனப் பகுதி ஆகும்.[3] இது ஏமனில் இருந்து பாரசீக வளைகுடா வரையும், ஓமானிலிருந்து ஜோர்தான், ஈராக்கு வரையும் பரந்து விரிந்து கிடக்கிறது. இது 2,330,000 சதுர கிலோமீட்டர் (900,000 சதுர மைல்) பரப்பளவில் அரேபிய தீபகற்பத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இது உலகின் ஐந்தாவது பெரிய பாலைவனமாகவும், ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலைவனமாகவும் உள்ளது. அதன் மையத்தில் உலகின் மிகப்பெரிய தொடர்ச்சியான மணல் அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் அரூப்' அல்-காலி உள்ளது. இது சகாரா பாலைவனத்தின் விரிவாக்கம் ஆகும்.[4]

இங்கு தட்பவெப்பநிலை பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும் பகுதியில் வருடத்திற்கு 100 மி.மீ. மழை பெய்கிறது, அரிதாக சில இடங்களில் 50 மிமீ மழை பெய்கிறது. மிக அதிக வெப்பத்திலிருந்து, பருவ காலத்தில் இரவுநேர உறைபனி வரை இதன் வெப்பநிலை மாறுபடுகிறது. வேட்டையாடுதல், மனித ஆக்கிரமிப்பு மற்றும் வாழ்விடம் அழித்தல் போன்ற காரணங்களால் வரிகள் உடைய கழுதைப்புலி, நரி மற்றும் தேன்வளைக்கரடி ஆகிய சில வகையினம் இப்பகுதியில் மரபற்றழிந்தன. பிற வகை இனமான மணல் மான் ) வெற்றிகரமாக மீள் அறிமுகம் செய்யப்பட்டு காப்புக்காடுகளில் பாதுகாக்கப்படுகின்றன.

நிலவியல் மற்றும் புவியியல்

[தொகு]

சவூதி அரேபியாவின் வடக்கில் இருக்கும் பெரிய பாலைவனமான அன்-நவூத் பாலைவனத்தையும் (65,000 சதுர கி.மீ. அல்லது 40,389 சதுர மைல்கள்) தென்கிழக்கில் இருக்கும் ரப்-அல்-காலியையும் இணைக்கும் பாலமாக இருக்கும் மணற்பாங்கான நிலப்பகுதியே அத்-தஹ்னா பாலைவனம் எனப்படுகிறது. ஓமானின் வாகிபா மணல்கள் கிழக்கு கடற்கரையின் எல்லையாக அமையப்பெற்ற ஒரு தனித்த மணல் கடல் ஆகும்.

உயிர்ச்சூழலியலும் இயற்கை வளங்களும்

[தொகு]

அரேபியப் பாலைவனத்தில் கிடைக்கும் சில இயற்கை வளங்களாவன: எண்ணெய், இயற்கை வாயு, பாஸ்பேட்டுகள், கந்தகம் ஆகியன ஆகும். ரப்-அல்-காலியில் வரையறுக்கப்பட்ட பூக்களின் பல்வகைமை காணப்படுகிறது. இங்கு 20 வகையினம் மணல் பரப்பின் முக்கியப் பகுதிகளிலும், 17 வகையினம் வெளிப்புற எல்லைகளிலும் ஆக மொத்தம் 37 வகையினம் மட்டுமே காணப்படுகிறது. இவற்றில் ஒன்றிரண்டு வகையினம் மட்டுமே ஆண்டு முழுவதும் காணப்படுகிறது. தாிசான மணற்குன்றுகளைத் தவிர தாவரத் தொகுதிகள் இங்கு பரவலாகக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Arabian Desert and East Sahero-Arabian xeric shrublands". Digital Observatory of Protected Areas. Accessed 22 November 2020. [1]
  2. "Arabian Desert". Terrestrial Ecoregions. World Wildlife Fund.
  3. "Arabian Desert | Facts, Definition, Temperature, Plants, Animals, & Map | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-22.
  4. "Arabian Desert: Middle East". geography.name. பார்க்கப்பட்ட நாள் 2022-10-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபியப்_பாலைவனம்&oldid=3622117" இலிருந்து மீள்விக்கப்பட்டது