அயோத்தி மசூதி, தன்னிபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அயோத்யா மசூதி, தன்னிபூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அயோத்யா மசூதி
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்26°45′43″N 82°00′07″E / 26.762°N 82.002°E / 26.762; 82.002
சமயம்இசுலாம்
மாவட்டம்அயோத்தியா மாவட்டம்
கட்டிடக்கலை தகவல்கள்
அளவுகள்
அயோத்திச் சிக்கல்
அயோத்தி பிரச்சினை
பாபர் மசூதி
பாபர் மசூதி இடிப்பு
ராம ஜென்மபூமி
குழந்தை இராமர் கோயில்
அயோத்தி மசூதி
அயோத்தி அகழாய்வுகள்
அயோத்தி கல்வெட்டு
விஷ்ணு ஹரி கல்வெட்டு
2005 ராமஜென்மபூமி தாக்குதல்
லிபரான் ஆணையம்
2019 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
ஆட்களும் அமைப்புகளும்
கல்யாண் சிங்
எல். கே. அத்வானி
அடல் பிகாரி வாஜ்பாய்
முரளி மனோகர் ஜோஷி
விசுவ இந்து பரிசத்
நிர்மோகி அகாரா
பாரதிய ஜனதா கட்சி
இந்து மகாசபை
அனைத்திந்திய பாபர் மசூதி நடவடிக்கைக் குழு
சன்னி வக்ஃபு வாரியம்
கோயென்ராட் எல்ஸ்ட்
ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளை

அயோத்யா மசூதி (Ayodhya Mosque) என்பது உத்தரபிரதேசத்தின் அயோத்தி சர்ச்சை தொடர்பான தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு வரும் மசூதியாகும். மசூதி மற்றும் அதனுடன் தொடர்புடைய வளாகத்தின் கட்டுமானப் பணியானது இந்தோ-இசுலாமிய கலாச்சார அறக்கட்டளை (ஐ.ஐ.சி.எஃப்) நிறுவனத்தின் கீழ் உள்ளது. [1] [2] தன்னிபூர் மசூதிக்கான இடமானது அயோத்தியின் ராம் மந்திரிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. [3]

இதன் கட்டுமானம் 26 ஜனவரி 2021 இல் தொடங்கியது. மசூதிக்கு 1857 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போரில் கலந்து கொண்ட தலைவர்களில் ஒருவரான மவுலவி அகமதுல்லா ஷாவிற்கு கெளரவப்படுத்தும் விதத்தில் அகமதுல்லா ஷா மசூதி என்று அதிகார பூர்வமாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. [4]

அமைவிடம்[தொகு]

தன்னிபூர் அதிகார பூர்வமாக அயோத்தி மாவட்டமான பைசாபாத் மாவட்டத்தில் சோஹாவால் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு குக்கிராமமாகும் . மசூதிக்கு நியமிக்கப்பட்ட இடமானது பாபர் மசூதி தளத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கட்டுமானம்[தொகு]

இந்த திட்டத்தின் கட்டுமானமானது உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியத்தால் 2021 குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி, மரக்கன்றுகளை நட்டு முறையாக தொடங்கியது. மசூதி வளாகத்தில் ஒரு மருத்துவமனை, அருங்காட்சியகம், நூலகம், ஒரு நாளைக்கு 2000 பேருக்கு உணவளிக்கக்கூடிய ஒரு சமூக சமையலறை, மசூதி மட்டுமல்லாது கூடுதலாக இந்தோ-இசுலாமிய கலாச்சார ஆராய்ச்சி மையம் மற்றும் நூல் வெளியீட்டு மாளிகை ஆகியவை கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. [5]

சர்ச்சை[தொகு]

மசூதி கட்டுவது வக்ஃப் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஷரியத் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. [6] இசுலாமிய கொள்கைகளின்படி மசூதியில் கட்டுமானம் மற்றும் பிரார்த்தனைக்கு பணம் நன்கொடை அளிப்பது ஹராம் (தடைசெய்யப்பட்டுள்ளது) என்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார், அதற்கு மசூதி அறக்கட்டளை "மனிதகுலத்திற்கு சேவை செய்வது ஹராம் அல்ல" என்று பதிலளித்தது. [7]

உரிமையாளர் தகராறு[தொகு]

டெல்லியைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மசூதி கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 28 ஏக்கர் இடம் ஆகியவற்றிற்கு உரிமை கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த இடம் பாகப்பிரிவினையின் போது தங்கள் தந்தைக்கு வழங்கப்பட்ட இடம் என்று உரிமை கோரியுள்ளனர். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Razak, Hanie Abdul (2021-01-19). "Construction of Ayodhya mosque to begin with flag-hoisting on Republic Day". The Siasat Daily (in ஆங்கிலம்). 2021-01-26 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Ayodhya Mosque Work Starts On Republic Day With Tricolour Hoisting". NDTV.com. 2021-01-26 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Dhannipur near Ayodhya already has 15 mosques, local Muslims want hospital and college too".
  4. "Ahmadullah Shah: Ayodhya Mosque to be named after the maulana who died for India's Independence". The Times of India (in ஆங்கிலம்). 25 January 2021. 2021-01-26 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Ayodhya's Dhannipur mosque project launched with unfurling of tricolour on Republic day". https://www.hindustantimes.com/india-news/ayodhyas-dhannipur-mosque-project-launched-with-unfurling-of-tricolour-on-rday-101611667926019.html. 
  6. "Ayodhya mosque against Waqf Act, illegal under Shariyat law: AIMPLB". https://www.hindustantimes.com/india-news/ayodhya-mosque-against-waqf-act-illegal-under-shariyat-law-aimplb/story-0QrFb4aJkLrQA8HwjzkceJ.html. 
  7. "Contributing for construction and prayers at masjid in Ayodhya is haraam: Owaisi". https://www.deccanchronicle.com/nation/politics/270121/contributing-for-construction-and-prayers-at-masjid-in-ayodhya-is-h.html. 
  8. "Delhi siblings claim ownership of land offered for Ayodhya mosque, move court". https://www.thehindu.com/news/national/delhi-siblings-claim-ownership-of-land-offered-for-ayodhya-mosque-move-court/article33746388.ece/amp/.