அம்லோடிபின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்லோடிபின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(ஆர்எஸ்)-3-எதில் 5-மெதில் 2-[(2-அமினோஈதாக்சி)மெதில்]-4-(2-குளோரோபினைல்)-6-மெதில்-1,4-டைஐதரோபிரிடின்-3,5-டைகார்பாக்சிலேட்டு
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் Norvasc, others
AHFS/திரக்ஃசு.காம் ஆய்வுக் கட்டுரை
மெட்லைன் ப்ளஸ் a692044
கட்டுப்பாட்டு உரிமத் தரவு EMA:[[[:வார்ப்புரு:EMA-EPAR]] Link]US Daily Med:link
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை C(AU) C(US)
சட்டத் தகுதிநிலை ? Prescription only
வழிகள் By mouth
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு 64–90%
புரத இணைப்பு 93% [1]
வளர்சிதைமாற்றம் கல்லீரல்
அரைவாழ்வுக்காலம் 30–50 hours
கழிவகற்றல் சிறுநீர்
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 88150-42-9 Yes check.svgY
ATC குறியீடு C08CA01
பப்கெம் CID 2162
IUPHAR ligand 6981
DrugBank DB00381
ChemSpider 2077 Yes check.svgY
UNII 1J444QC288 Yes check.svgY
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D07450 Yes check.svgY
ChEBI [1] Yes check.svgY
ChEMBL CHEMBL1491 Yes check.svgY
வேதியியல் தரவு
வாய்பாடு C20

H25 Br{{{Br}}} Cl N2 O5  

மூலக்கூற்று நிறை 408.879 g/mol
SMILES eMolecules & PubChem

அம்லோடிபின், நோர்வாஸ்க் என்ற வணிகப்பெயரில் விற்கப்படுகிற இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் குருதி ஊட்டக்குறை இதய நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆகும். [2] இதய செயலிழப்பிற்கு பொதுவாக பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், உயர் இரத்த அழுத்தம் அல்லது இதயம் தொடர்பான மார்பு வலிக்கு சிகிச்சையளிக்க பிற மருந்துகள் போதுமானதாக இல்லாவிட்டால் அம்லோடிபின் பயன்படுத்தப்படலாம். இது வாய் வழியாக உட்கொள்ளப்பட்டு குறைந்தது ஒரு நாளுக்கு நீடிக்கும் விளைவைக் கொண்டுள்ளது.

பொதுவான பக்க விளைவுகளில் வீக்கம், சோர்வு, வயிற்று வலி மற்றும் குமட்டல் ஆகியவை அடங்கும். [2] கடுமையான பக்க விளைவுகளில் குறைந்த இரத்த அழுத்தம் அல்லது மாரடைப்பு இருக்கலாம். கர்ப்ப காலத்தில் பயன்பாடு பாதுகாப்பானதா அல்லது தாய்ப்பாலூட்டலின் போது கொடுப்பது பாதுகாப்பானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் வயதான நகர்களில் பயன்படுத்தப்படும்போது, அளவைக் குறைக்க வேண்டும். இரத்த நாள விரிவூக்க செயல்பாட்டின் மூலம் அம்லோடிபின் பகுதியளவு செயல்படுகிறது. இது டைஹைட்ரோபிரிடின் வகையின் நீண்ட காலமாக செயல்படும் கால்சியம் கால்வாய் தடுப்பான் ஆகும்.

அம்லோடிபின் 1982 ஆம் ஆண்டில் காப்புரிமை பெறப்பட்டது மற்றும் 1990 ஆம் ஆண்டில் மருத்துவ பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பானது அவசியமான மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான மருந்துகளை பட்டியலிடுகிறது. உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் அத்தகைய பட்டியலில் உள்ளது.[3] இது பொதுவான மருந்தாக கிடைக்கிறது. [2]

மருத்துவப் பயன்கள்[தொகு]

அம்லோடிபின் உயர் இரத்த அழுத்தம் [4] மற்றும் குருதி ஊட்டக்குறை இதய நோய் உள்ள நபர்களில் உடல் மற்றும் மனவெழுச்சி சார்ந்த மார்பு நெரிப்பு [5] அல்லது இதய செயலிழப்பு இல்லாத குழலிசிவு நெரிப்பு ஆகியவை தொடர்பான சிகிச்சைகளில் பயன்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் அல்லது குருதி ஊட்டக்குறை இதய நோயை நிர்வகிப்பதற்கான ஒற்றை சிகிச்சை அல்லது கூட்டு சிகிச்சையாக இதைப் பயன்படுத்தலாம். அம்லோடிபினை பெரியவர்கள் மற்றும் 6–17 வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கலாம்.[1] அம்லோடிபின் உள்ளிட்ட கால்சியவழித் தடுப்பான்கள் மற்ற வகை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளை விட பக்கவாதத்திற்கு எதிராக அதிக பாதுகாப்பை வழங்கக்கூடும்.[6]

ரேய்நாவ்ட் நோய்க்குறிக்கான மருந்தியல் நிர்வாகத்தில் முதல் தெரிவாக அம்லோடிபின் மற்றும் அதனுடன் இதர கால்சியவழித் தடுப்பான்கள் அமைகின்றன. [7]

மருந்தாக்கவியல்[தொகு]

அம்லோடிபின் ஒரு நீடித்து செயல்படும் கால்சியம்வழி எதிர் வினையூக்கியாகும். இது செல் சவ்வுகளில் கால்சியம் அயனி உட்பாய்வை தேர்ந்தெடுத்த முறையில் தடுக்கும்.[8] இது நோயுணர்வு சமிக்ஞை மற்றும் வலி உணர்வில் ஈடுபட்டுள்ள, தசை செல்களில் எல்-வகை கால்சிய வழிகளையும், மைய நரம்பு மண்டலத்தில் என்-வகை கால்சிய வழிகளையும் குறிவைக்கிறது.[9][10] அம்லோடிபினானது, மென்மையான தசைச் செல்களில் கால்சியம் உட்பாய்வைத் தடுப்பதற்கான சுருங்கும் செயல்பாட்டைத் தடுக்கும் விளைவினை அம்லோடிபின் கொண்டுள்ளது.

தீய விளைவுகள்[தொகு]

அமோலோடிபினின் சில பொதுவான அளவைச் சார்ந்த பாதகமான விளைவுகளுள் இரத்த நாள விரிவு விளைவுகள், புற உடலில் நீர்கோப்பு, தலைச்சுற்றல், படபடப்பு மற்றும் சிவந்து போதல் ஆகியவை அடங்கும். [11]புறஉடல் நீர்க்கோவை(திசுக்களில் திரவம் குவிதல்) 10-மி.கி மருந்தளவில் 10.8% வீதத்தில் நிகழ்கிறது. (மருந்தற்ற மருந்து 0.6% க்கு எதிராக), இது ஆண்களை விட பெண்களில் மூன்று மடங்கு அதிகம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "Norvasc Prescribing Information". மூல முகவரியிலிருந்து 16 February 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 July 2017.
 2. 2.0 2.1 2.2 "Amlodipine Besylate". American Society of Hospital Pharmacists. மூல முகவரியிலிருந்து 4 June 2016 அன்று பரணிடப்பட்டது.
 3. "WHO Model List of Essential Medicines (19th List)" (April 2015). மூல முகவரியிலிருந்து 13 December 2016 அன்று பரணிடப்பட்டது.
 4. Wang, JG (2009). "A combined role of calcium channel blockers and angiotensin receptor blockers in stroke prevention". Vascular Health and Risk Management 5: 593–605. doi:10.2147/vhrm.s6203. பப்மெட்:19688100. 
 5. MedlinePlus Encyclopedia Stable angina
 6. "Long-Term Anti-Hypertensive Therapy and Stroke Prevention: A Meta-Analysis". Am J Cardiovasc Drugs 15 (4): 243–57. August 2015. doi:10.1007/s40256-015-0129-0. பப்மெட்:26055616. 
 7. Baumhäkel, M; Böhm, M (2010-04-15). "Recent achievements in the management of Raynaud's phenomenon". Vascular Health and Risk Management 6: 207–214. doi:10.2147/vhrm.s5255. பப்மெட்:20407628. 
 8. Ananchenko, Gennady; Novakovic, Jasmina; Lewis, Johnathan (1 January 2012). "Chapter 2 - Amlodipine Besylate". Profiles of Drug Substances, Excipients and Related Methodology (Academic Press) 37: 31–77. doi:10.1016/b978-0-12-397220-0.00002-7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780123972200. பப்மெட்:22469316. 
 9. "Amlodipine". பார்த்த நாள் 30 January 2019.
 10. Clusin, William T.; Anderson, Mark E. (1 January 1999). Calcium Channel Blockers: Current Controversies and Basic Mechanisms of Action. Advances in Pharmacology. 46. Academic Press. பக். 253–296. doi:10.1016/s1054-3589(08)60473-1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780120329472. 
 11. Russell, R. P. (1988). "Side effects of calcium channel blockers.". Hypertension 11 (3 Pt 2): II42–4. doi:10.1161/01.HYP.11.3_Pt_2.II42. பன்னாட்டுத் தர தொடர் எண்:0194-911X. பப்மெட்:3280492. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்லோடிபின்&oldid=2882965" இருந்து மீள்விக்கப்பட்டது