அமெரிக்க இலக்கியம்
அமெரிக்க இலக்கியம் (American literature) என்பது ஐக்கிய அமெரிக்கா மற்றும் அந்நாடு குடியேறிய நாடுகளில் எழுதப்பட்ட இலக்கியம் ஆகும். அமெரிக்கப் புரட்சிப் போருக்கு முன்பாக தற்போதைய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்க இலக்கியத்தின் ஆதிக்கம் அதிகம் காணப்பட்டது.
இலக்கியப் புரட்சி காலத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் கட்டுரையாளர்களாக பெஞ்சமின் பிராங்கிளின், அலெக்சாண்டர் ஆமில்டன் ஆகியோர் அறியப்பட்டனர். மேலும் தாமஸ் பெய்னும் தாமஸ் ஜெபர்சனின் அமெரிக்க விடுதலைச் சாற்றுரை எனும் நூலின் மூலம் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்பட்டார். 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேசத்தின் முதல் புதினம் வெளியானது. 1971 ஆம் ஆண்டில் வில்லியம் ஹில் பிரவுனின் தெ பவர் ஆஃப் சிம்பதி வெளியானது. இந்த புதினத்தில் உடன்பிறந்த இருவர் தங்களது உறவுநிலை தெரியாமல் காதலிப்பதனை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
தனித்துவமான அமெரிக்க இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பல இலக்கிய நபர்கள் தங்களின் படைப்புகளை வெளியிட்டனர். அதில் வாஷிங்டன் இர்விங் மற்றும் எட்கர் ஆலன் போ ஆகியோர் மிக முக்கியமான புதின எழுத்தாளர்கள் ஆவர். 1836 ஆம் ஆண்டில் ஆழ்நிலை சங்கம் எனபதனை ரால்ப் வால்டோ எமர்சன் உருவாக்கினார். இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, ஹென்றி டேவிட் தூரோ வால்டன் என்பதனை எழுதினார்.இந்த நூல் தனித்துவம் , இயற்கை மற்றும் இரையொருமை வாத உந்துதல்கள் போன்றவற்றிற்காக தற்போது வரை எழுத்துலகில் கொ ண்டாடப்படுகிறது. வில்லியம் லாயிட் கேரிசன் மற்றும் ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் ஆகியோரின் புகழ்பெற்ற நாவலான அங்கிள் டாம்'ஸ் கேபினால் ஒழிப்பு வாதத்திற்கு ஊக்கமாய் அமைந்தது.
சிறு புனைகதை மற்றும் கவிதை
[தொகு]போருக்குப் பிந்தைய காலத்தில் சிறுகதைகள் மீண்டும் வளர்ச்சி பெறத் துவங்கியது. அதன் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களில் ஒருவராக ஃபிளனெரி ஓ'கானர் அறியப்பட்டார். இவ் அரின் படைப்புகள் மத நம்பிக்கைகள் கொன்டனவாக அறியப்பட்டது. எ குட் மேன் இஸ் ஹார்ட் டூ ஃபைன்ட் மற்றும் எவ்ரிதிங் தட் ரைசஸ் மஸ்ட் கவரெஜ் ஆகியவை மற்றும் 1952 ஆம் ஆண்டில் வெளியான ஒயிஸ் பிளட் மற்றும் 1960 ஆம் ஆண்டில் வெளியான தெ வயலண்ட் பியர் இட் அவே ஆகிய இவரின் இரு புதினங்கள் குறிப்பிடத் தகுந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இந்தப் படைப்புகள் இவர் உண்மையினைத் தேடுதல் என்பதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும். கேத்ரின் அன்னே போர்ட்டர், யூடோரா வெல்டி, ஜான் சீவர், ரேமண்ட் கார்வர், டோபியாஸ் வோல்ஃப் மற்றும் டொனால்ட் பார்தெல்ம் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர். இலக்கியத்தில் ஆங்கில மொழியின் தாக்கம் தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தது.[1]
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்கள்
[தொகு]1930: சிங்ளேர் லூயிஸ் (நாவலாசிரியர்) 1936: யூஜின் ஓ நீல் (நாடக ஆசிரியர்)
1938: பெர்ல் எஸ். பக் (சுயசரிதை மற்றும் நாவலாசிரியர்) 1948: தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் (கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர்)
1949: வில்லியம் பால்க்னர் (நாவலாசிரியர்) 1954: ஏர்னஸ்ட் ஹெமிங்வே (நாவலாசிரியர்)
1962: ஜான் ஸ்டீன்பெக் (நாவலாசிரியர்) 1976: சவுல் பெல்லோ (நாவலாசிரியர்)
1978: ஐசக் பாஷெவிஸ் சிங்கர் (நாவலாசிரியர், இத்திஷ் மொழியில் எழுதினார்) 1987: ஜோசப் ப்ராட்ஸ்கி (கவிஞரும் கட்டுரையாளருமான இவர் ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் எழுதினார்)
1993: டோனி மாரிசன் (நாவலாசிரியர்) 2016: பாப் டிலான் (பாடலாசிரியர்)
சான்றுகள்
[தொகு]- ↑ Baym, Nina, ed. The Norton Anthology of American Literature. New York: W.W. Norton & Company, 2007. Print.