அலெக்சாண்டர் ஆமில்டன்
அலெக்சாண்டர் ஹாமில்டன் | |
---|---|
![]() | |
முதல் நிதி அமைச்சர் | |
பதவியில் செப்டம்பர் 11, 1789 – சனவரி 31, 1795 | |
குடியரசுத் தலைவர் | சியார்ச் வாசிங்டன் |
முன்னவர் | பதவி நிறுவப்பட்டது |
பின்வந்தவர் | ஓலிவர் வால்காட்டு |
படைத்துறை மூத்த அதிகாரி | |
பதவியில் திசம்பர் 14, 1799 – சூன் 15, 1800 | |
குடியரசுத் தலைவர் | ஜான் ஆடம்ஸ் |
முன்னவர் | சியார்ச் வாசிங்டன் |
பின்வந்தவர் | ஜேம்சு வில்கின்சன் |
கூட்டாட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நியூ யோர்க் மாநிலத்திலிருந்து | |
பதவியில் நவம்பர் 3, 1788 – மார்ச்சு 2, 1789 | |
முன்னவர் | எக்பெர்ட்டு பென்சன் |
பின்வந்தவர் | பதவி அழிக்கப்பட்டது |
பதவியில் நவம்பர் 4, 1782 – சூன் 21, 1783 | |
முன்னவர் | பதவி நிறுவப்பட்டது |
பின்வந்தவர் | பதவி அழிக்கப்பட்டது |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சார்லசுடவுண், நெவிசு, பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகள் | சனவரி 11, 1755
இறப்பு | சூலை 12, 1804 (அகவை 49 அல்லது 47) நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு |
அரசியல் கட்சி | கூட்டரசுக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | எலிசபெத் சூய்லெர் |
பிள்ளைகள் | பிலிப் ஆஞ்செலிகா அலெக்சாண்டர் ஜேம்சு அலெக்சாண்டர் ஜான் சர்ச்சு வில்லியம் ஸ்டீபன் எலிசா ஹோல்லி ஃபில் |
படித்த கல்வி நிறுவனங்கள் | கொலம்பியா கல்லூரி |
சமயம் | எபிசுகோபாலியன் |
கையொப்பம் | ![]() |
படைத்துறைப் பணி | |
பற்றிணைவு | ![]() ![]() |
கிளை | ![]() ![]() ![]() |
பணி ஆண்டுகள் | 1775–1776 (Militia) 1776–1781 1798–1800 |
தர வரிசை | ![]() U.S. Army Senior Officer |
சமர்கள்/போர்கள் | அமெரிக்கப் புரட்சிப் போர் • Battle of Harlem Heights • Battle of White Plains • Battle of Trenton • Battle of Princeton • Battle of Monmouth • Siege of Yorktown Quasi-War |
அலெக்சாண்டர் ஆமில்டன் (Alexander Hamilton, சனவரி 11, 1755 அல்லது 1757 – சூலை 12, 1804) ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத் தந்தையர்களில்,[1] ஒருவராகவும் தளபதி வாசிங்டனுக்கு முதன்மை அலுவலராகவும் அரசியலமைப்பை ஊக்குவித்த மற்றும் தெளிவுபடுத்தக்கூடிய மிகவும் செல்வாக்குள்ளவர்களில் ஒருவருமாகவும் இருந்தவர். மேலும் நாட்டின் நிதி முறைமையை நிறுவியவரும் முதல் அமெரிக்க அரசியல் கட்சியை தோற்றுவித்தவரும் இவரே.
முதல் கருவூலச் செயலராக (அமெரிக்க நிதி அமைச்சர்) பொறுப்பேற்ற ஆமில்டன் சியார்ச் வாசிங்டன் நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகளை வடித்ததில் முதன்மைப் பங்காற்றினார். குறிப்பாக மாநிலங்களின் கடன்களை தீர்க்க கூட்டரசின் உதவி, தேசிய வங்கி உருவாக்கம், வரிவிதிப்பு முறைமைகள், பிரித்தானியாவுடன் நட்பான வணிக உறவு என்பன இவரது முக்கிய பங்களிப்புகளாகும். இவருடன் ஒத்தக் கருத்துடையோருடன் உருவான பெடரலிஸ்ட்டு கட்சிக்குத் தலைவராகவும் விளங்கினார். இவரது கருத்துக்களை தாமஸ் ஜெஃவ்வர்சன் மற்றும் ஜேம்ஸ் மாடிசன் தலைமையேற்ற மக்களாட்சி-குடியரசுக் கட்சி எதிர்த்து வந்தது.
மேற்சான்றுகள்[தொகு]
