உள்ளடக்கத்துக்குச் செல்

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகிலுள்ள பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சி மிக்க அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி பகுதிகளிலுள்ள முப்பத்தி ஒன்று ஏரிகளையும், நாற்பது ஊராட்சி ஒன்றியக் குளங்களையும், ஏனைய 538 நீர் நிலைகளையும் நிரப்பும், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல், குடிநீர் வழங்கல் திட்டமாகும். இத்திட்டம் நிறைவேறும் போது இப்பகுதிகளில் வாழும் முப்பத்தி ஐந்து இலட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படும். மேலும் 1.30 இலட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

முதன் முதலில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி இப்பகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாரப்ப கவுண்டர் தமிழக அரசிடம் 1957ஆம் ஆண்டில் கோரிக்கை வைத்தார்.[1]

அறுபது ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி இப்பகுதி மக்களின் தொடர் போராட்டத்தின்[2] விளைவாக, அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில், 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு - செலவு திட்டத்தை 2016 பெப்பிரவரி 16 அன்று தாக்கல் செய்கையில் தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.[3][4] இத்திட்டம் 34 மாதங்களில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 60 ஆண்டு கனவான அத்திக்கடவு–அவினாசி திட்டம்
  2. ஆறாவது நாளாக உண்ணாவிரதம்
  3. அத்திக்கடவு - அவினாசி திட்டம்: தமிழக பட்ஜெட்டில் அரசு உறுதி
  4. "அடிக்கல் நாட்டல்". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 1 மார்ச்சு 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]