உள்ளடக்கத்துக்குச் செல்

அசோக் மேனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு
அசோக் மேனன்
Ashok Menon
நீதிபதி, கேரள உயர் நீதிமன்றம்
பதவியில்
30 நவம்பர் 2017 – 13 ஆகத்து 2021
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 ஆகத்து 1959 (1959-08-15) (அகவை 65)
குடியுரிமைஇந்தியர்
தேசியம் இந்தியா
முன்னாள் கல்லூரிஅரசு சட்டக் கல்லூரி, கோழிக்கோடு
இணையத்தளம்High Court of Kerala

அசோக் மேனன் (பிறப்பு 15 ஆகத்து 1959) கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஆவார். கேரள உயர் நீதிமன்றம் இந்தியாவின் கேரள மாநிலம் மற்றும் லட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மிக உயர்ந்த நீதிமன்றமாகும். கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளத்தில், கொச்சியில் அமைந்துள்ளது.[1][2][3][4][5][6]

இளமை

[தொகு]

அசோக் கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்தார். திருச்சூரில் உள்ள தூய தோமசு கல்லூரியில் பட்டம் பெற்றார். கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.[1]

பணி

[தொகு]

அசோக் 1981ஆம் ஆண்டு திருச்சூர் மற்றும் வடக்காஞ்சேரி நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இவர் 1988-ல் முன்சிப்-நீதிபதியாகப் பணியாற்றத் தொடங்கினார். இதன்பின் 1995ல் துணை நீதிபதியாகவும், 2002ல் மாவட்ட நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். அசோக் 2009-ல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். 2010 முதல் 2013 வரை புது தில்லியின் போட்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் பதிவாளராகத் தொடர்ந்தார். இதன்பிறகு 2013 முதல் 2015 வரை கொல்லத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். 2015ல் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 30, 2017 அன்று அசோக் கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டு, ஆகத்து 29, 2019 அன்று கேரள உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ஆனார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Official".
  2. "Appointment Notification" (PDF).
  3. "Centre clears appointment of Ashok Menon, Annie John, Narayana Pisharadi as additional judges of Kerala HC".
  4. "SC Collegium recommends 3 Additional Judges of the Kerala HC as Permanent Judges".
  5. "Recommendation" (PDF).
  6. "Three Additional Judges of Kerala High Court made Permanent".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_மேனன்&oldid=3995403" இலிருந்து மீள்விக்கப்பட்டது