அகன்ற அலகு உள்ளான்
அகன்ற அலகு உள்ளான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
பிரிவு: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | சரத்ரீபார்மசு |
குடும்பம்: | இசுகோலோபேசிடே |
பேரினம்: | கேலிடிரிசு |
இனம்: | கே. பால்சினெலசு |
இருசொற் பெயரீடு | |
கேலிடிரிசு பால்சினெலசு போண்டோபிதான், 1847 | |
வேறு பெயர்கள் | |
லிமிகோலா பால்சினெலசு |
அகன்ற அலகு உள்ளான் (Broad-billed sandpiper) என்பது ஒரு சிறிய கரையோரப்பறவையாகும்.
உடலமைப்பு[தொகு]
ஆங்கிலப்பெயர் :Broad-billed Sandpiper அறிவியல் பெயர் :கேலிடிரிசு பால்சினெலசு
இதன் உடல் நீளம் 17 செ. மீ. ஆகும். இதன் தோற்றத்திம் கர்லூ உள்ளானை பெரிதும் ஒத்தது. உருவத்தில் சற்றுச் சிறியதாகவும் கால்கள் குட்டையாகவும் கன்னங்களிலும் மார்பிலும் அதிகப் பழுப்புப் புள்ளிகள் இருப்பது கொண்டும் கிட்ட நெருங்கிப் பார்க்க வாய்ப்பு ஏற்படும்போது இதனை வேறுபடுத்திக் காணலாம். குளிர்காலத்தில் வலசை வரும் இதன் பழக்க வழக்கங்கள் கர்லூ உள்ளானை ஒத்தனவே.
உணவு[தொகு]
இது உள்ளானைப் போலப் புழுப்பூச்சிகளைத் தரையில் கொத்திப் பிடிப்பதெனவும் மற்ற உள்ளான்களைப்போல் அலகினைச் சேற்றிலோ மணலிலோ நுழைத்து இரை தேடுவதில்லை எனவும் கூறப்படுகின்ற ஒன்றே மற்றவற்றிற்கும் இதற்கும் இடையேயான வேறுபாடு என்று கூறப்படுவது உறுதி செய்யப்பட வேண்டிய ஒன்று. புழுப்பூச்சிகளோடு தாவரங்களின் விதைகளையும் உணவாகத் தேடித் தின்னும். பறக்க எழும்போது இச் இச் என கர்லூ உள்ளான் போல கிறீச்சிட்டுக் கத்தக் கேட்கலாம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Calidris falcinellus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
உசாத்துணை[தொகு]
தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:52