ஈசாந்திமங்கலம்
ஈசாந்திமங்கலம் | |
---|---|
ஈசாந்திமங்கலம், கன்னியாகுமரி, தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 8°15′34″N 77°25′38″E / 8.2595°N 77.4271°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
ஏற்றம் | 67.33 m (220.90 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 629852 |
அருகிலுள்ள ஊர்கள் | பூதப்பாண்டி, திட்டுவிளை |
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
சட்டமன்றத் தொகுதி | கன்னியாகுமரி |
ஈசாந்திமங்கலம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 67.33 மீட்டர்கள் (220.9 அடி) உயரத்தில், (8°15′34″N 77°25′38″E / 8.2595°N 77.4271°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, ஈசாந்திமங்கலம் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், ஈசாந்திமங்கலம் பகுதியின் மொத்த மக்கள்தொகை 3,302 ஆகும். இதில் 1,616 பேர் ஆண்கள்; 1,686 பேர் பெண்கள் ஆவர்.[1]
சமயம்
[தொகு]ஈசாந்திமங்கலம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோயில்[2] மற்றும் பிறைசூடி கண்டன்சாஸ்தா கோயில்[3] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.
அரசியல்
[தொகு]ஈசாந்திமங்கலம் பகுதியானது, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[4] மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.
உசாத்துணைகள்
[தொகு]- ↑ "Esanthimangalam Village in Thovala (Kanniyakumari) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
- ↑ "Arulmigu Bhatrakaliamman Temple, Navalkadu, Esanthimangalam - 629852, Kanyakumari District [TM042100].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
- ↑ "Arulmigu Piraisoodi Kandan Sastha Temple, Navalkadu, Esanthimangalam - 629852, Kanyakumari District [TM042112].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
- ↑ "ESANTHIMANGALAM Village in KANNIYAKUMARI". www.etamilnadu.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.