திட்டுவிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திட்டுவிளை என்னும் ஊர் தமிழகத்தின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு வடக்கே 10-11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தெற்கு திசை தவிர மற்ற மூன்று திசைகளிலும் மலைகளால் சூழப்பட்ட பரந்த கிராமமான இங்கு இஸ்லாம் சமயத்தவர் அதிகம் வசித்தாலும் கணிசமான சதவீதத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களும் உள்ளனர்.[1]. [2].

நாகர்கோவில் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கூடல் அணை, தடாகை மலை, உலக்கை அருவி, காளிகேசம் அருவி போன்றவை இங்குள்ள முக்கிய இடங்களாகும்.

பூதப்பாண்டியை பேரூராட்சியாகவும், தோவாளையை தாலுகாவாகவும், ஈசாந்திமங்கலத்தை வருவாய் கோட்டமாகவும் கொண்ட திட்டுவிளையில் காயிதே மில்லத் சாகிப் நினைவாக அவரின் பெயர் கொண்ட பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.

கல்வி நிலையங்கள்[தொகு]

  • அரசு மேல்நிலைப் பள்ளி,
  • அரசு தொடக்கப்பள்ளி என அரசு பள்ளிகளும்,
  • பிசப் ஞானதாசன் சிஎஸ்ஐ மெட்ரிக்குலேசன் பள்ளி,
  • புனித பிரான்சிஸ் அசிசி மெட்ரிக்குலேசன் பள்ளி,
  • கரோல் மெட்ரிக்குலேசன் பள்ளி,
  • விஐஎன்எஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி,
  • இஸ்லாமிய மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளி போன்ற தனியார் பள்ளிகளும் இவ்வூரில் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "திட்டுவிளை பற்றி".
  2. "திட்டுவிளை".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திட்டுவிளை&oldid=3869592" இலிருந்து மீள்விக்கப்பட்டது