பேச்சுமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேச்சுமொழி (spoken language) என்பது ஒலியுறுப்புக்களைப் பயன்படுத்தி எழுப்பப்படும் ஒலிகள் மூலம் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளும் மொழியாகும். இது எழுத்துமொழியில் இருந்து வேறுபட்டது. பேச்சுமொழியே முதலில் தோன்றியது. இதனால், மொழியென்பது அடிப்படையில் பேச்சையே குறிக்கும்.[1]

பரந்த நிலப்பரப்பில் வழங்கும் ஒரு மொழியின் பேச்சுமொழி, சமூகம், தொழில்முறை, சூழல் என்பவற்றுக்கு ஏற்ப பல்வேறுபட்டுக் காணப்படும். இவற்றுள் அரசியல், வணிகம், பொருளாதாரம் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்று விளங்கும் பகுதிக்குரிய பேச்சுமொழியைப் பிற வட்டார வழக்கினரும் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதால், அப்பேச்சுமொழியே தகுமொழி (standard dialect) என்னும் நிலையை அடையும்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 சண்முகம், செ. வை., 2005, பக். 17

உசாத்துணைகள்[தொகு]

  • சண்முகம், செ. வை., மொழி ஆய்வு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2005.
  • தமிழண்ணல், இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சுமொழி&oldid=2746911" இலிருந்து மீள்விக்கப்பட்டது