உள்ளடக்கத்துக்குச் செல்

தகுமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகுமொழி (standard language) அல்லது பொதுமொழி என்பது, ஒரு குழுவினரால் பொதுத் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மொழிவகை ஆகும்.[1] மாற்றாக, தரப்படுத்தல் வழிமுறையூடாக மொழிவகைகள் தகுமொழி ஆகின்றன. இதன்போது அவை இலக்கணத்திலும், அகரமுதலிகளிலும் விளக்கப்படுவதற்கு ஏதுவாக ஒழுங்கமைக்கப்படுகின்றன.[1] பொதுவாக, உள்ளூர்த் தேவைகளுக்கும் அப்பால் பயன்படுத்தவேண்டிய மொழிவகைக்கான தேவை ஏற்படும்போது, வணிக அல்லது நிர்வாக மையங்களில் பேசப்படும் வட்டார வழக்குகளே இவ்வாறு தரப்படுத்தலுக்கு உள்ளாகித் தகுமொழி ஆகின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Finegan, Edward (2007). Language: Its Structure and Use (5th ed.). Boston, MA, USA: Thomson Wadsworth. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4130-3055-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தகுமொழி&oldid=2746923" இலிருந்து மீள்விக்கப்பட்டது