லாக் கொள்கை
லாக் கொள்கை (Lack's principle) என்பது 1954-ல் பிரித்தானிய பறவையியல் நிபுணர் டேவிட் லாக்கால் முன்மொழியப்பட்ட பறவைகள் இடும் முட்டைகளின் எண்ணிக்கை குறித்த கொள்கையாகும். "ஒவ்வொரு பறவை இனமும் அதன் ஒரு பருவத்தில் இடும் முட்டைகளின் எண்ணிக்கை இயற்கைத் தேர்வின் மூலம் பெற்றோர்கள் சராசரியாக போதுமான உணவைக் குஞ்சுகளுக்கு வழங்க இயலக்கூடிய அளவில்’ மாற்றியமைக்கின்றன" என்பதாகும்.[1] இக்கொள்கையினை உயிரியல் விதியாக, விலங்குகள் மற்றும் தாவரங்கள் உட்பட பொதுவாக இனப்பெருக்கம் செய்யும் உயிரினங்களுக்குப் பொருந்தும் வகையில் முறைப்படுத்தலாம் அல்லது பொதுமைப்படுத்தலாம். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் மற்றும் பலர் லாக் கொள்கையை அடிப்படையாக மேற்கொண்ட ஆய்வு மக்கள்தொகை உயிரியலின் மேம்பட்ட கணித புரிதலுக்கு வழிவகுத்தது.
கொள்கை
[தொகு]உகந்ததை விட அதிக முட்டைகளை இடும் பறவைகள் பெரும்பாலும் குறைவான குஞ்சுகளையே (கூட்டிலிருந்து வெற்றிகரமாகப் பறக்கும்) கொண்டிருக்கும் என்பது லாக்கின் கொள்கையாகும். அதிக அளவில் குஞ்சுகள் இருக்கும்போது பெற்றோர் பறவைகள் அனைத்து குஞ்சுகளுக்கும் போதுமான உணவை சேகரித்து வழங்கமுடியாது. பரிணாம உயிரியலாளர் ஜோர்ஜ் சி. வில்லியம்சு, இந்த வாதம் பறவைகள் தவிர விலங்குகள் மற்றும் தாவரங்கள் இரண்டிற்கும், விதை தாவரங்கள் மூலம் கருமுட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதைச் சமமான நிகழ்வாகக் கொடுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இது பொருந்தும் என்று குறிப்பிடுகிறார். ரொனால்டு பிசரால் 1930-ல் கோடிட்டுக் காட்டப்பட்ட கட்டமைப்பின் அடிப்படையில் கணிதம் மற்றும் கோட்பாட்டு உயிரியல் உருவாக்க வாதத்தை முறைப்படுத்தினார். அதாவது தனிநபரின் நீண்ட கால இனப்பெருக்கத் திறனுடன் ஒப்பிடும்போது, இனப்பெருக்கத்திற்காகச் செலவழிக்கும் முயற்சியின் மதிப்புடையதாக இருக்க வேண்டும் என்ற விவாதத்திற்கு வில்லியம்சு வழிவகுத்தார். ஒரு உயிரினத்தின் இனப்பெருக்கச் செயல்முறைகள் அதன் சொந்த இனப்பெருக்க நலனுக்காக (இயற்கை தேர்வு) அல்லது வி.சி. வயனே எட்வர்சால் முன்மொழியப்பட்ட, உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய வேண்டுமா என்பது பற்றிய விவாதத்திற்கும் இது பங்களிக்கும் என்று வில்லியம்சு குறிப்பிட்டார். ஜெ. எல். குளவுட்சுலி தாம்சன் ஒரு பெரிய பறவை ஒரு சிறிய பறவையை விட அதிக குஞ்சுகளை உருவாக்க முடியும் என்று வாதிட்டார். வில்லியம்சு இது ஒரு மோசமான இனப்பெருக்க உத்தி என்று பதிலளித்தார். ஏனெனில் பெரிய பறவைகள் குறைந்த இறப்பு விகிதத்தைக் கொண்டிருப்பதால், இவற்றின் முழு வாழ்நாளிலும் அதிக எஞ்சிய இனப்பெருக்க மதிப்புடையது (எனவே ஒரு நீண்ட மற்றும் குறுகிய கால ஆபத்தை எடுத்துக்கொள்வது நியாயமற்றது). [2] வில்லியம்சின் பதில் "வாழ்க்கை வரலாற்றின் பரிணாம வளர்ச்சியில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட ஆவணங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது வயது கட்டமைக்கப்பட்ட மக்களில் உகந்த வாழ்க்கை வரலாற்று உத்திகளைக் கண்டறிவதை கருத்தியல் ரீதியாகச் சாத்தியமாக்கியது".[3]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lack, David (1954). The regulation of animal numbers. Clarendon Press.
- ↑ George C. Williams (biologist) (November 1966). "Natural Selection, the Costs of Reproduction, and a Refinement of Lack's Principle". The American Naturalist 100 (916): 687–690. doi:10.1086/282461.
- ↑ Pasztor, E.; Loeschcke, V. (November 1989). "The Coherence of Cole's Result and Williams' Refinement of Lack's Principle". Oikos 56 (3): 416–420. doi:10.2307/3565627.